தங்கம், வெள்ளியை நம்பி செய்த முதலீடு.. பெரும் நஷ்டத்தில் ETF முதலீட்டாளர்கள்!

தங்கம், வெள்ளி விலை உச்சத்தை தொட்ட போது உலகளவில் மக்கள் அடித்துப்பிடித்து 1- 2 கிராம் தங்கத்தையாவது வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் பல நகை கடைகளுக்கு சென்றனர். இதேவேளையில் பெரும் பகுதி மக்கள் தங்களிடம் இருக்கும் சிறு தொகையை கூட ஈடிஎப் மூலம் முதலீடு செய்ய துவங்கினர்.

இதனால் இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் கோல்டு மற்றும் சில்லர் ஈடிஎப் முக்கிய முதலீடாக மாறியது. இதை தாண்டி ஈடிஎப்-ல் பண்டஸ் ஆஃப் பண்ட்ஸ் பெரும் முதலீட்டை தீரட்டியது.

தங்கம், வெள்ளியை நம்பி செய்த முதலீடு.. பெரும் நஷ்டத்தில் ETF முதலீட்டாளர்கள்!

தற்போது மொத்த கதையும் மாறியுள்ளது, ஜனவரி மாத உச்சத்தை ஒப்பிடுகையில் கோல்டு ஈடிஎப்-கள் தற்போது 31 சதவீதத்திலும், சில்வர் ஈடிஎப்கள் 62 சதவீத சரிவிலும் உள்ளது.

சமீபத்தில் வெளியான வேல்யூ ரிசர்ச் ஆய்வறிக்கையில், தங்கம் - வெள்ளி அதன் உச்ச விலையில் இருந்து போது இன்னும் அதிகமாக விலை உயரும் என கணித்து முதலீடு செய்தவர்கள் தான் தற்போது அதிக இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் தங்கத்தை காட்டிலும் வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் தான் அதிகப்படியான இழப்பை எதிர்கொண்டு உள்ளனர். ஆனால் நீண்ட கால அடிப்படையில் தங்கம் வெள்ளி மீதான முதலீட்டுக்கு வாய்ப்புகள் சிறப்பாக இருந்தாலும், எப்போது பவுன்ஸ் பேக் ஆகும் என்ற கேள்வி மிக முக்கியமானதாக உள்ளது.

Also Read

தங்கம் விலையில் ஏற்படும் பெரும் சரிவு என்பது அரிதானது கிடையாது, 1980 முதல் சுமார் 11 முறை 25 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது, இதில் 4 முறை 40 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.

இந்த சரிவில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றால் தங்கத்தில் முதலீடு செய்வோர் இந்த நீண்ட கால அடிப்படையில் காத்திருப்பது அவசியம்.

கடந்த 40 - 46 வருடத் தரவுகளை ஆய்வு செய்து பார்க்கும் போது பவுன்ஸ் பேக் என்பது தங்கம் விலை ஒவ்வொரு முறையும் 25 சதவீதம் சரியும் போதும் குறைந்தபட்சம் 25 சதவீதம் உயர்ந்து மொத்த இழப்பையும் சரி செய்து வருகிறது. அதிகப்படியாக 76.4 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, மேலும் தங்கம் விலை அடிமட்டத்தைத் தொட்ட 1 ஆண்டுக்குள் அதிகபட்சமாகச் சராசரி 33% உயர்வையும், 2 ஆண்டுகளில் 59% உயர்வும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது தங்கம் - வெள்ளி விலை உயர்வுக்கு சூழ்நிலை சாதகமாக இருந்தால் காட்டாயம் தற்போதைய 31 சதவீத சரிவை 1 -2 வருடத்திற்குள் முழுமையாக மீண்டு வருவதற்கு வாய்ப்புள்ளது.

Recommended For You

இந்த மோசமான சரிவிலும் கோல்டு ஈடிஎப் கடந்த 3 வருடத்தில் வருடாந்திர லாப அளவு 24.1 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. தற்போது தங்கம் - வெள்ளி உயர்வை கட்டிப்போடும் வகையில் 3 முக்கிய பிரச்சனைகள் உள்ளது.

அமெரிக்க டாலர் மதிப்பு 22 மாத உச்சத்திற்கு அருகில் இருப்பது, அமெரிக்க அரசின் 10 ஆண்டு பத்திர முதலீட்டின் மீதான லாபம் உயர துவங்கியுள்ளது, அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு அதிகரித்துள்ளது ஆகியவை பெரும் பிரச்சனையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+