தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருக்கும் வேளையில், சர்வதேச சந்தையில் ஒரு சுவாரஸ்யமான மாற்றம் அரங்கேறியுள்ளது. கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தங்கத்தின் மீதான தள்ளுபடி உயர்ந்துள்ளது. விலை ஏற்றத்தால் இந்திய மக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டி வரும் நிலையில், மறுபுறம் சீனாவிலோ தங்கத்திற்கான மவுசு ராக்கெட் வேகத்தில் எகிறியுள்ளது.
இந்திய சந்தையில் நிலவும் இந்த மந்தநிலையும், சீனாவில் ஏற்பட்டுள்ள அதிரடி தேவையும் உலக தங்க வர்த்தகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? முழு விவரங்களையும் இங்கே விரிவாகப் பார்ப்போம்.

இந்திய சந்தையில் தங்கம் விலையானது உச்சத்தில் இருந்து வரும் நிலையில், தேவையானது சற்று குறைந்து காணப்படுகிறது. இந்த சூழலில் தேவையை ஊக்கப்படுத்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் மீதான தள்ளுபடி ஒரு அவுன்ஸூக்கு 65 டாலர்கள் வரையில் உயர்ந்துள்ளது. இது முன்னதாக 18 டாலர்கள் வரையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தள்ளுபடியானது 6% இறக்குமதி வரி மற்றும் 3% விற்பனை வரி உள்ளிட்ட அதிகாரப்பூர்வ விலையில் இருந்து வழங்கப்படுகின்றன. இந்தியாவில் தேவை குறைந்துள்ள அதேசமயம், சீனாவில் எதிர்மாறாக தேவையானது எகிறத் தொடங்கியுள்ளது. இது அங்கு புத்தாண்டு விடுமுறைக்கு பின் பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படுகிறது.
தற்போது தங்கத்தின் விலையானது அதிகம் என்பதால் சில்லறை முதலீட்டாளர்கள் வாங்காமல் தவிர்த்து வருகின்றனர். இந்த மாத தொடக்கத்தில் கண்ட 1,33,687 ரூபாயுடன் ஒப்பிடும்போது, கடந்த வெள்ளிக்கிழமையன்று 10 கிராமுக்கு தங்கம் விலையானது 1,60,000 ரூபாய் என்ற நிலையில் காணப்பட்டது. இந்த விலை உச்சத்தின் மத்தியில் தற்போது உள்ள திருமண பருவத்திலும் கூட தேவையானது குறைவாக காணப்படுகிறது.
வெள்ளி 15% சரிவு.. தங்கம் 3% ஏற்றம்! குழப்பத்தில் முதலீட்டாளர்கள் - இப்போது என்ன செய்வது?
இந்திய ஆபரண சந்தையில் திருமணங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இந்திய திருமணங்களில் தங்கம் முக்கிய பரிசாக பார்க்கப்படுகிறது. ஆனால் விலை உச்சத்தில் இருப்பதால், திருமண பருவத்தில் கூட வாங்குவது குறைந்துள்ளது. இதற்கு நேர்மாறாக சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்து, மீண்டும் சந்தையானது களைகட்டத் தொடங்கியுள்ளது. தங்கத்தின் தேவை அதிகரித்து வரும் சூழலில், அங்கு விலை அவுன்ஸூக்கு 12 - 13 டாலர்கள் பிரீமியம் விலையில் காணப்படுகிறது. இது முந்தைய வாரத்தில் 8 முதல் 10 டாலர்கள் வரையில் பிரீமியம் விலையில் காணப்பட்டது. தற்போது ஆபரணத் தேவையும் கணிசமாக உயர ஆரம்பித்துள்ளது. அதோடு மக்கள் நீண்ட கால அடிப்படையில் மக்கள் தங்கத்தையே சிறந்த முதலீடாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தையே கருதுகின்றனர். இதுவும் தங்கம் விலையானது தொடர்ந்து உச்சத்தில் இருக்க காரணமாகவும் பார்க்கப்படுகிறது.
டாடா கெமிக்கல்ஸை ஓரங்கட்டிய 2 பங்குகள்! மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் செய்த அதிரடி முதலீடு!
தொடர்ந்து ஏழாவது மாதமாக உயர்ந்துள்ள தங்கம் விலையானது, நீண்ட கால அடிப்படையில் இன்னும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. குறிப்பாக ஆசிய மத்திய வங்கிகளின் வலுவான கொள்முதல், தங்கம் விலைக்கு ஆதரவாக இருந்து வருகிறது. அதேபோல் ஆபரண தங்கம் விலையில் சரிவு இருக்கும் போது, அவசியம் வாங்கியே ஆக வேண்டும் எனும்போது வாங்கலாம். மாறாக டிஜிட்டல் தங்கம் அல்லது பியூச்சர் சந்தையில் முதலீடு செய்வதே நல்லது. எனினும் குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கலாம். ஆக கவனமுடன் இருப்பது நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?



Click it and Unblock the Notifications