இதை படிங்க நீங்களும் ஆகலாம் 'நிதியமைச்சர்'.. நாட்டுக்கு இல்லை வீட்டுக்கு..!

By Justin Sahayaraj
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: குடும்பத்தில் உள்ள பொறுப்புகளையும் வேலைகளையும் பகிர்ந்து கொள்வதில் பெண்கள் மிகவும் ஆர்வமுடன் இருக்கின்றனர். ஆனால் குடும்பத்தில் வரவு செலவு என்று வரும் போதும், நிதி சார்ந்த முடிவெடுக்கும் தருணங்களிலும் அவற்றில் பங்கெடுக்கப் பெரும்பாலான பெண்கள் முன்வருவதில்லை.

இதற்கு முக்கியக் காரணம் முதலீடு மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் அவர்களுக்குச் சரியான புரிதல் இல்லாததே.

வேலைக்குச் செல்லும் பெண்கள் கூடத் தாங்கள் ஈட்டும் வருமானத்தை முதலீடு செய்வது சம்பந்தமாகத் தங்கள் அப்பாக்களையோ அல்லது குடும்பத்தில் உள்ள ஏனைய உறுப்பினர்களையோ தான் நம்பி இருக்கின்றனர்.

பெண்களும்.. காரணங்களும்..

பெண்களும்.. காரணங்களும்..

நிதி சார்ந்த முடிவுகளில் அடுத்தவரை நம்பி இருப்பதற்கு அவர்கள் ஏராளமான காரணங்களைக் கூறினாலும், நிதி சார்ந்த அறிவு சிறிய அளவில் இருந்தால் போதும். விரைவில் அவர்கள் சிறந்த நிதி மேலாளர்களாக மாற முடியும்.

வங்கியில் தூங்கும் பணம்..

வங்கியில் தூங்கும் பணம்..

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகம் மற்றும் வீடுகளிலும் பணிச்சுமை அதிகமாக இருப்பதால், வரவு செலவு பற்றித் திட்டமிடுவதற்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் வங்கியில் சேமித்து வைத்திருக்கும் பணம் வளராமல் வங்கியில் தூங்கிக் கொண்டிருக்கும்.

உன்னால் முடியும்..

உன்னால் முடியும்..

ஆனால் பல வேலைகளைத் திறம்படச் செய்யும் பெண்கள் தங்கள் நிதி சார்ந்த முடிவுகளைத் தார்களே எடுத்து தங்களின் நிதி நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும். அதற்கான எளிய வழிகளைக் கீழே காணலாம்.

வரவு, செலவு மற்றும் இலக்கு

வரவு, செலவு மற்றும் இலக்கு

எவ்வளவு பணம் வருகிறது, அந்தப் பணத்தை முதலீடு செய்வதில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன, அவ்வாறு முதலீடு செய்வதால் பொருளாதாரத்தில் எந்த நிலையை அடைய முடியும் என்பதை நன்றாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு சரியான புரிதல் இருந்தால் அவர்களது தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யக்கூடிய முதலீட்டுத் திட்டங்களைக் கண்டுபிடித்து அவற்றில் பணத்தை முதலீடு செய்யலாம்.

 

பட்ஜெட் தயாரித்தல்

பட்ஜெட் தயாரித்தல்

பெண்கள் சரியான வரவு செலவு திட்டம் ஒன்றைத் தயார் செய்து கொள்ள வேண்டும். அது ஒரு சரியான முதலீட்டை ஏற்படுத்திக் கொடுக்கும்.

செலவைக் குறைத்து அதிகமாகச் சேமித்து அதை விவேகத்தோடு சரியான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

 

சிறிய முதலீட்டுத் திட்டங்கள்

சிறிய முதலீட்டுத் திட்டங்கள்

முதலில் சிறிய முதலீட்டுத் திட்டங்களில் பெண்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். குறிப்பாக அதிகச் சம்பளம் வாங்கும் பெண்கள், வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் முதலீட்டுத் திட்டங்களான நிலையான வைப்பு நிதித் திட்டங்கள், தொடர் வைப்பு நிதித் திட்டங்கள், வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

வரி இல்லா முதலீட்டுத் திட்டங்கள்

வரி இல்லா முதலீட்டுத் திட்டங்கள்

பெண்கள் சிறிய முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து அவற்றில் முன்னேற்றத்தை அடைந்தால் சற்றுச் சவால்கள் அதிகம் உள்ள பங்குச் சந்தை மற்றும் பங்கு பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

குறிப்பாகத் திருமணமான பெண்களுக்குத் தங்கள் கணவர்களின் வருமானமும் வருவதால் மேற்கண்ட முதலீட்டுத் திட்டங்களில் தைரியமாக முதலீடு செய்யலாம்.

 

ஓய்வு மற்றும் காப்பீடு

ஓய்வு மற்றும் காப்பீடு

ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள் ஆகியவை ஒவ்வொரு தனி மனிதருக்கும் தேவையான முக்கியத் திட்டங்கள் ஆகும். ஏனெனில் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வயதான காலத்தின் பொருளாதாரத் தேவைகளை அடுத்தவரின் துணையின்றி நாமாகவே நிறைவு செய்து கொள்ள முடியும்.

நிதி ஆலோசகர்

நிதி ஆலோசகர்

உங்களுக்குப் போதுமான அளவிற்கு வருமானம் இருந்து அந்த வருமானம் வங்கியில் தூங்கிக் கொண்டிருந்தால் உடனடியாக ஒரு நிதி ஆலோசகரைச் சந்தித்து அவருடைய ஆலோசனைப்படி சரியான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

இறுதியாக

இறுதியாக

ஒரு செயலைத் தொடங்கிய பின் அதன் மூலம் நாம் பெறும் அறிவு மிகவும் சிறந்ததாக இருக்கும். ஆகவே முதலீட்டைப் பற்றிப் போதுமான அளவு அறிவு இல்லை என்றாலும் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டால் அவற்றைப் பற்றிய புரிதல் மிக வேகமாக வந்துவிடும்.

மகிழ்ச்சியான வாழ்க்கை

மகிழ்ச்சியான வாழ்க்கை

முதலீடு நமது சேமிப்பை மட்டும் உயர்த்துவதில்லை மாறாக நமது வயதான காலத்தைப் பொற்காலமாக மாற்றப் போகும் காரணியாகவும் இருக்கிறது. எனவே முதலீடு செய்வோம் முன்னேற்றப் பாதையில் செல்வோம்.

30 வயசாகிடுச..." data-gal-src="http:///img/600x100/2016/03/31-1459416805-31-1459404832-2young-businessman-using-a-tablet.jpg">
30 வயசாகிடுச்சா..?

30 வயசாகிடுச்சா..?

<strong><em>30 வயசாகிடுச்சா.. அப்போ இதை கட்டாயம் படிங்க பாஸ்..!</em></strong>30 வயசாகிடுச்சா.. அப்போ இதை கட்டாயம் படிங்க பாஸ்..!

வருமானவரி ரீஃப..." data-gal-src="http:///img/600x100/2016/03/31-1459416799-31-1459404702-3-tax-large.jpg">
வருமான வரி

வருமான வரி

<strong><em>வருமானவரி ரீஃபண்டை உடனடியாகப் பெற உதவும் 10 வழிகள்</em></strong>வருமானவரி ரீஃபண்டை உடனடியாகப் பெற உதவும் 10 வழிகள்

<strong><em>வருமான வரி செலுத்தவில்லையா?? அப்ப உங்களுக்கு இது எல்லாம் நடக்கும்..!</em></strong>வருமான வரி செலுத்தவில்லையா?? அப்ப உங்களுக்கு இது எல்லாம் நடக்கும்..!

கண்ணு கட்டுதுடா சாமி

கண்ணு கட்டுதுடா சாமி

டன் கணக்கில் தங்கம் வைத்திருக்கும் 10 நாடுகள்.. கண்ணு கட்டுதுடா சாமி முடியல..!டன் கணக்கில் தங்கம் வைத்திருக்கும் 10 நாடுகள்.. கண்ணு கட்டுதுடா சாமி முடியல..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Women always take the lead when it comes to sharing responsibilities, but take a backseat when it has to deal with finances.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X