சம்பாதிக்கும் காலத்தில் ஜாலியாக இருப்பது ஒரு ரகம்ன்னா, சம்பாதிப்பதை நிறுத்திய பிறகும் அதே கெத்தோடு வாழ்வது இன்னொரு ரகம். இன்னைக்கு ஒரு பீட்சா வாங்கும் விலையில், அதாவது வெறும் 1,000 ரூபாய் முதலீட்டில் உங்க ஃபியூச்சரை நீங்களே டிசைன் பண்ண முடியும்னு சொன்னால் நம்புவீர்களா? 25 வயசுல நீங்க செய்யுற இந்த ஒரு சிறிய முதலீடு, நீங்க 50 வயதை தொடும் போது மாத மாதம் 20,000 ரூபாயை உங்க அக்கவுண்டில் வந்து விழும் மேஜிக்கை செய்யும். இதுக்காக நீங்க லட்சக் கணக்குல சம்பாதிக்கணும்னு அவசியம் இல்லை, சரியான நேரத்துல ஒரு ஸ்மார்ட்டான மூவ் போதும். உங்க கனவு வாழ்க்கையை நிஜமாக்கப்போற அந்த SIP + SWP ரகசியத்தை பற்றி விரிவாக பார்ப்போமா?

இன்றைய 1,000 ரூபாய் உங்களுடைய ஓய்வு காலத்தில் நீங்கள் சோர்ந்து உட்காரும்போது, உங்களுக்கு தேவையான நிதியை கொடுக்கும். அதற்கு உங்களிடம் போதிய நேரமும், சிறிய முதலீடாக இருந்தாலும் அதை தொடர்ந்து செய்யும் திறனும், எஸ்டபள்யூபி (SWP) திட்டமும் போதும். எஸ்ஐபி (SIP) மற்றும் SWP என்ற எளிய கூட்டணியானது, உங்களுடைய ஒரு சிறிய முதலீட்டை 50 வயதில் தொடங்கி, அடுத்த 25 ஆண்டுகளுக்கு 20,000 ரூபாய் அளவுக்கு பென்ஷன் போன்று வருமானத்தையும் தரும்.
ரியல் எஸ்டேட் முதலீடு நிஜமாகவே லாபமா? வாடகை வருமானத்தில் ஒளிந்திருக்கும் சவால்கள் என்ன?
பொதுவாக படிப்பை முடித்து வேலைக்கு செல்ல ஆரம்பிக்கும் போது சிறிய தொகையாக இருந்தாலும் முதலீட்டை தொடங்க வேண்டும். அப்படி 25 வயதில் ஒருவர் எஸ்ஐபி முதலீட்டை தொடங்குவதாக வைத்துக் கொள்வோம். மாதம் 1,000 ரூபாய் தொகையை அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொடர்வதாக வைத்துக் கொள்ளலாம். வேலையில் சேரும் ஆரம்ப கட்டத்தில் சம்பளத்தில் 1,000 ரூபாய் என்பது எளிதான ஒன்று தான். ஆனால் அதுவே திருமணம், குழந்தைகளின் கல்வி, வீட்டுக் கடன் என பல நிதி பொறுப்புகள் இருக்கும்போதும் செய்வது கொஞ்சம் கடினம் தான். ஆனாலும் இந்த தொகையை உங்களால் எந்த தடையும் இன்றி தொடர முடியும். வழக்கமான 5,000 அல்லது 10,000 ரூபாய் எஸ்ஐபி என இல்லாமல், 1000 ரூபாய் முதலீடு என்பதை எளிதாக செய்ய முடியும். முதலீட்டை பொறுத்த வரையில் தொகையின் அளவு முக்கியமல்ல. அதன் தொடர்ச்சியே மிக முக்கியம். அப்போது தான் கூட்டு வட்டியின் பலனை பெற முடியும்.
தங்கம் Vs வெள்ளி:ETF ரேஸில் ஜெயிப்பது யாரு? 2026-ல் உங்கள் பணத்தை எதில் போடலாம்?
50 வயதில் நீங்கள் ஓய்வு பெறுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதன் பிறகு அடுத்த 25 ஆண்டுகளுக்கு எஸ்டபள்யூபி மூலம், தொடர்ச்சியான வருமானத்தை பென்ஷன் போல பெற முடியும்.
ஸ்டெப் 1: மாத எஸ்ஐபி - ரூ.1000
வருமான எதிர்பார்ப்பு - 15%
முதலீட்டு காலம் - 25 ஆண்டுகள்
மொத்த முதலீடு - 1000*12*25=3 லட்சம் ரூபாய்
வருமானம் - ரூ.24.56 லட்சம்
மொத்த கார்ப்பஸ் 50 வயதில் - ரூ.27.56 லட்சம்
15% வருமானம் சாத்தியமா என்று சிலருக்கு தோன்றலாம். 25 வருடம் என்ற நீண்ட கால அடிப்படையில் பல ஈக்விட்டி ஃபண்டுகள் 15% வருமானத்தை சராசரியாக கொடுத்துள்ளன.
ஸ்டெப் 2: SWP
மேற்கண்ட முதலீட்டிற்கான பலனை அறுவடை செய்ய வேண்டிய காலம் இது. 50 வயதில் இருந்து வருமானம் பெற SWP திட்டத்தை தொடங்கும் காலம் இது. இங்கு நீங்கள் உங்கள் முதலீட்டின் பாதுகாப்பு கருதி, ஈக்விட்டி ஃபண்டில் இருந்து டெப்ட் ஃபண்டுகளுக்கு மாற்றலாம் அல்லது ஹைபிரிட் ஃபண்டுகளில் மாற்றலாம். இதில் சராசரியாக 7.5% வருமானம் கிடைக்கும்.
தினமும் ரூ.10 போதும்! டீ குடிக்கிற செலவுல லட்சாதிபதி ஆகலாம் – எதிர்காலத்திற்கான மைக்ரோ SIP மேஜிக்!
SWP கணக்கீடு
ஆரம்ப கால முதலீடு - ரூ.27.56 லட்சம்
வருமான எதிர்பார்ப்பு ஆண்டுக்கு - 7.5%
மாதம் பணம் திரும்ப பெறுதல் - ரூ.20,000
மொத்த காலம் - 25 ஆண்டுகள்
மொத்தம் திரும்ப பெற்ற தொகை - 20,000*12*25 = ரூ.60 லட்சம்
25 வருடம் கழித்து உங்கள் வசம் ரூ.2.15 லட்சம் இருக்கும். ஆக மாதம் 1,000 ரூபாய் முதலீடு செய்தாலே, 25 ஆண்டுகளுக்கு 20,000 ரூபாய் வருமானத்தை பெற முடியும்.
குறைந்த வட்டி தரும் பாரம்பரிய ஓய்வூதியத் திட்டங்களிலோ, நெகிழ்வுத்தன்மை இல்லாத மற்றும் நிலையான வருமானம் மட்டுமே தரும் வருடாந்திர திட்டங்களிலோ அல்லது பணவீக்கத்தை முறியடிக்க முடியாத வங்கி பிக்சட் டெபாசிட்டுகளை (FD) மட்டுமே நம்பியிருப்பதற்கு பதிலாக, SIP + SWP கூட்டணியை தேர்ந்தெடுப்பது மிகவும் புத்திசாலித்தனமான முடிவாகும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

PPF Vs SIP: 10 வருஷத்துல யாரு கிங்? ரூ.1.5 லட்சத்தை எதில் போட்டால் கோடீஸ்வரர் ஆகலாம்?

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!



Click it and Unblock the Notifications