தங்கம் விலை ரூ.3.50 லட்சத்தை எட்டும்: அடித்து சொல்லும் Jefferies நிபுணர் கிறிஸ் வுட்..!!

தங்கம் விலை இந்த ஆண்டில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துவிட்டது. ஜனவரியில் தமிழ்நாட்டில் ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 1.33 லட்சம் என வரலாற்று உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் விலை சரிந்தது. கடந்த சில மாதங்களாகவே 1.10 லட்சத்தில் இருந்து 1.20 லட்சத்திற்குள் ஏறுவதும் இறங்குவதுமாக காணப்படுகிறது.

தங்கம் விலை இனி என்ன ஆகும்? தங்கத்தில் முதலீட்டை தொடரலாமா? தங்கம் வாங்கி வைக்கலாமா என பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு நிச்சயம் தங்கத்தை வாங்குங்கள் என்பதே நிபுணர்களின் பதில். ஏனெனில் தங்க முதலீட்டை குறுகிய காலத்திற்கு பார்க்காமல் நீண்ட காலத்திற்கானதாகவே பார்க்க வேண்டும். அந்த வகையில் தங்கம் விலை 127% வரை உயர வாய்ப்புள்ளது என பிரபல தரகு நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தங்கம் விலை ரூ.3.50 லட்சத்தை எட்டும்: அடித்து சொல்லும் Jefferies நிபுணர் கிறிஸ் வுட்..!!

உலகளவில் புகழ்பெற்ற ஜெப்ரீஸ் (Jefferies) நிறுவனத்தின் சர்வதேச பங்கு சந்தை வியூக பிரிவு தலைவர் கிறிஸ் வுட், தங்கம் விலை குறித்த தனது மிக முக்கியமான கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தங்கத்தின் விலை எதிர்காலத்தில் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயரும் என கூறியுள்ளார். அதாவது ஒரு அவுன்ஸ் தங்கம் 10,000 அமெரிக்க டாலர்களை எட்டும் சாத்தியம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் 4,393 டாலர்களுக்கு விற்கப்படுகிறது. இவர் 10,000 டாலர்களை எட்டும் என்கிறார். அப்படி என்றால் தங்கம் விலை 127% உயரும் என்பதே இவரது கணிப்பு. உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்தால் நிச்சயம் இந்திய சந்தையிலும் விலை உயரும்.

Also Read

தங்கம் விலை இப்படி பிரம்மாண்ட வளர்ச்சி அடையும் என இவர் கூறுவதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார். அமெரிக்கா தற்போது பெரும் கடனில் உள்ளது. அமெரிக்க அரசு தேசிய கடனைச் சமாளிக்கவும், பொருளாதாரத்தை சீராக வைத்து கொள்ளவும் எதிர்காலத்தில் தங்களுடைய கருவூல பத்திரங்களின் ஈவுத்தொகையை குறைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முயலும் என கிறிஸ் வுட் குறிப்பிடுகிறார்.

அப்படி ஒரு சூழல் உருவாகும்போது, முதலீட்டாளர்கள் அரசாங்க பத்திரங்கள் மீதான நம்பிக்கையை இழந்து, பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம் மீது அதிகளவில் முதலீடு செய்ய தொடங்குவார்கள். இது தங்கம் விலையை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்திற்கு கொண்டு செல்லும் மிகப்பெரிய உந்து சக்தியாக அமையும் என்கிறார்.

Recommended For You

கிறிஸ் வுட் எப்போதும் தங்கம் வளர்ச்சி அடையும் லாபம் தரும் ஒரு முதலீடு தான் என கூறுகிறார். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், நீண்ட கால அடிப்படையில் அதன் வளர்ச்சி தொடரும் என்கிறார். கிறிஸ் வுட் கணிப்பு தங்கம் விலை தற்போதுள்ள விலையை விட 127% உயரும் என்பது தான். இதனை நாம் இந்திய விலைக்கு ஒப்பிட்டு பார்க்கலாம்.

இன்று தமிழ்நாட்டில் 24 கேரட் தங்கம் 10 கிராம் 1,54,420 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அப்படி என்றால் இவரது கணிப்பு படி 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 3,50,900 ரூபாயை எட்டும். 22 கேரட் ஆபரண தங்கம் என பார்த்தால் இன்று 10 கிராம் தங்கம் 1,41,550 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்த வகையில் இதன் விலை 3,21,700 ரூபாயை தொடும். 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் இன்று 1,13,240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிறிஸ் வுட் கணிப்பு படி இது 127% விலை உயர்ந்தால் ஒரு சவரன் தங்கம் விலை 2,57,361 ரூபாயாக இருக்கும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+