வேலை மாற்றம் அல்லது பணி ஓய்வு அல்லது பணத் தேவை என எந்த காரணமாக இருந்தாலும், நம்முடைய வருங்கால வைப்பு நிதி (PF) பணத்தை எடுப்பது என்பது பலருக்கு ஒரு புரியாத விஷயமாகவே இருக்கிறது. குறிப்பாக ஃபார்ம் 10C (Form 10C) மற்றும் ஸ்கீம் சர்டிபிகேட் (Scheme Certificate) பற்றி தெரியாமல் பலர் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். இவையெல்லாம் இல்லாவிட்டால் எனது பென்ஷன் பணம் என்ன ஆகும், ஸ்கீம் சர்டிபிகேட் எதற்கு தேவை, ஃபார்ம் 10C-ஐ ஏன் கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும் - இந்த தர்க்க ரீதியான கேள்விகளுக்கான விடைகள் தெரிந்தால், உங்கள் பணத்தை நீங்கள் எந்த சிரமமும் இன்றி பெற முடியும்.
நீங்கள் உங்கள் உழைப்பில் சேர்த்த பணத்தை பாதுகாக்கவும், எவ்வித தடையுமின்றி அதை மீட்டெடுக்கவும் தேவையான அத்தனை நுணுக்கங்களையும் இந்த பதிவு உங்களுக்கு விளக்குகிறது. ஸ்கீம் சர்டிபிகேட் முதல் ஃபார்ம் 10C வரை ஊழியர்கள் கவனிக்க வேண்டிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
பிஎஃப் மற்றும் பென்ஷன் வித்தியாசங்கள் என்ன?

உங்கள் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் போது பிஎஃப் ஆனது, இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.
EPF: இதில் நீங்களும் உங்களுடைய நிறுவனமும் இணைந்து பங்களிப்பு செய்வீர்கள். இதை நீங்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறும் போது அல்லது விருப்பப்படும் போது எடுத்து கொள்ளலாம்.
EPS: நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33% பென்ஷன் நிதியத்திற்கு செல்லும். இதுதான் ஓய்வுக்கு பிறகு உங்களுக்கு மாதந்தோறும் பென்ஷனாக கிடைக்கும் பணம் ஆகும். மக்கள் பலரும் தங்களுடைய பி.எஃப் பணத்தை எடுத்து விடுகிறார்கள், ஆனால் பென்ஷன் (EPS) பணத்தை என்ன செய்வது என்பதில் கவனம் செலுத்துவதில்லை.
UAN இல்லாமலே பிஎஃப் பேலன்ஸ் பார்க்கலாம்! இதோ அந்த சீக்ரெட் ட்ரிக்!
ஸ்கீம் சர்டிபிகேட் என்றால் என்ன?
ஸ்கீம் சர்டிபிகேட் என்பது ஒரு சர்வீஸ் பாஸ்புக் போன்றது.
இந்த ஆவணமானது EPFO-வால் வழங்கப்படுகிறது.
இதில் நீங்கள் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்து உள்ளீர்கள் மற்றும் பென்ஷன் நிதியில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் 10 ஆண்டுகளுக்கு குறைவாக பணி புரிந்து வேலையை விட்டு நின்றால், உங்களிடம் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று பென்ஷன் தொகையை எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஸ்கீம் சர்டிபிகேட் பெற்றுக்கொள்ளலாம்.
உங்க பழைய PF கணக்கு இனி தானாகவே செட்டில் ஆகும்! புதிய விதிகளும், பலன்களும் இதோ!
முதுமையில் ஸ்கீம் சர்டிபிகேட் ஏன் அவசியம்?
EPFO விதிகளின்படி, பென்ஷன் பெற தகுதி பெற 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். உதாரணமாக, நிறுவனம் A-வில் 4 ஆண்டுகள், நிறுவனம் B-யில் 6 ஆண்டுகள் பணிபுரிந்து உள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் நிறுவனம் A-வை விட்டு வரும்போது ஸ்கீம் சர்டிபிகேட் பெறவில்லை என்றால், அந்த 4 ஆண்டுகால பணி காலாவதியாகிவிடும். இந்த சான்றிதழ் உங்கள் பணி பயணத்தின் தொடர்ச்சியை உறுதி செய்கிறது. உங்கள் முந்தைய பணியை புதிய பணியுடன் சேர்த்து, மொத்த பணிக்காலம் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இருக்க இது உதவும். அப்போதுதான் நீங்கள் பென்ஷன் பெற தகுதி பெறுவீர்கள்.
பெரும்பாலானோர் ஒரு வேலை விட்டு விலகியவுடன் ஃபார்ம் 19 மற்றும் ஃபார்ம் 10C மூலம் முழுத் தொகையையும் எடுத்து விடுகிறார்கள். அப்படி பென்ஷன் பணத்தை முழுமையாக எடுத்துவிட்டாலும், உங்கள் பணிக்காலம் முடிந்துவிட்டதாக கருதப்படும். அப்படியே பென்ஷன் பணத்தை எடுத்து கொண்டே இருந்தால், உங்களால் 10 ஆண்டுகால பணியை முழுமையாக்கவே முடியாது, இதனால் ஓய்வு பெறும்போது மாத பென்ஷனை இழக்க நேரிடும்.
தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!
ஃபார்ம் 10C (Form 10C) என்றால் என்ன?
6 மாதங்களுக்கு மேல், ஆனால் 10 ஆண்டுகளுக்கும் குறைவாகப் பணியாற்றிய ஊழியர்களுக்கானது இந்த படிவம். வேலையை விட்டு வெளியேறிய பிறகு, பென்ஷன் தொகையை எடுக்க அல்லது ஸ்கீம் சர்டிபிகேட் பெற இது தேவை. வேலையில்லாத நபர்களுக்கானது இது. வேலையை விட்டு விலகும் போது, உங்களுக்கு 58 வயதுக்கு குறைவாக இருந்தால், ஃபார்ம் 10C-ஐ பூர்த்தி செய்து ஸ்கீம் சர்டிபிகேட்டுக்கு விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு 58 வயது ஆகும் வரை அல்லது புதிய வேலையில் சேரும் வரை இந்த சான்றிதழை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications