முதலீடு என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது தங்கம் தான். ஆனால், தங்கத்திற்கு நிகராக சில நேரங்களில் அதை விட அதிரடியான லாபத்தை தரக்கூடியது வெள்ளி. ஆனால் இதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்வது என்பது பல முதலீட்டாளர்களுக்கு தெரிவதில்லை. அப்படியானவர்கள் கவனிக்க வேண்டிய ஒரு அம்சம் கோல்ட்-சில்வர் ரேஷியோ (Gold-Silver Ratio). தற்போது இந்த ரேஷியோ 70 முதல் 72 என்ற நிலையை எட்டக்கூடும் என்று டாட்டா மியூச்சுவல் ஃபண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்படி 70 - 72-ஐ எட்டினால் தங்கம், வெள்ளி விலை என்ன ஆகும் என்பதை தெரிந்து கொண்டால் எளிதாக தங்கம் எப்போது விலை அதிகரிக்கும், வெள்ளி எப்போது விலை அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த ரேஷியோ 72-ஐ தாண்டுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இது உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் நடக்கப்போகும் பெரிய மாற்றத்திற்கான ஒரு முன்னறிவிப்பு. இந்த விகிதம் உயர்ந்தால் தங்கம் வலுவடைகிறதா? அல்லது வெள்ளி விலை குறையப்போகிறதா? முதலீட்டாளர்கள் இப்போது தங்கள் போர்ட்ஃபோலியோவில் தங்கத்தை அதிகப்படுத்த வேண்டுமா அல்லது வெள்ளியில் முதலீடு செய்ய வேண்டுமா? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

நடப்பு ஆண்டு தொடக்கத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது பெரிய அளவில் ஏற்றம் கண்ட நிலையில், தற்போது ஒரு ஒருங்கிணைந்த கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே கோல்ட் - சில்வர் ரேஷியோவானது ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இது முன்னதாக 40 என்ற நிலையில் காணப்பட்ட நிலையில், இது அரிதாக எட்டக்கூடிய ஒரு லெவலாகவும் பார்க்கப்படுகிறது. இது மற்ற உலோகங்களை விட தங்கம் மற்றும் வெள்ளி என்பது சிறந்த லாபத்தை வாரி வழங்கிய காலம். ஆனால் இந்த காலமானது நீண்ட நாள் நீடிக்கவில்லை. விலையுயர்ந்த உலோகங்களின் சரிவானது தங்கத்தை விட வெள்ளியை அதிக பாதிப்புக்கு உள்ளாக்கியது. அதன் விளைவாகத் தான் கோல்ட் - சில்வர் ரேஷியோவானது 60-க்கும் மேல் உயர்ந்தது.
நிறைய MFs-ல முதலீடு செய்தால் லாபம் அதிகமா கிடைக்குமா? இந்த தவறை ஒருபோதும் செய்யாதீங்க?
தற்போது மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் பதற்றம் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. அதுவும் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு சாதகமான காரணிகளுக்கு மத்தியில் கூட, தங்கம், வெள்ளி பெரிய ஏற்றம் காணவில்லை. சொல்லப்போனால் அவற்றின் விலை வீழ்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக தங்கத்தை காட்டிலும் வெள்ளி விலையானது கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த சூழலில் தான் கோல்ட் - சில்வர் ரேஷியோவானது சற்று அதிகரித்து கிட்டத்தட்ட 60-ஐ நெருங்கியுள்ளது.
இதற்கு தற்போது நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீட்டாளர்களின் கவனம் அதிகரித்துள்ளதால், வெள்ளி விலை அதிக வீழ்ச்சியை கண்டுள்ளது. இதனிடையே கோல்ட் - சில்வர் ரேஷியோவானது 70 -72 -ஐ எட்டும்போது இன்னும் வெள்ளி விலையானது இன்னும் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பளம் vs செல்வம்: உங்கள் ரூ.70,000 மாத சம்பளம் ரூ.1 கோடி சொத்துக்கு சமம் - எப்படி தெரியுமா?
இதை இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் ஒரு அவுன்ஸ் தங்கத்தை வாங்க எத்தனை அவுன்ஸ் வெள்ளி தேவை என்பதை இந்த ரேஷியோ குறிக்கிறது. உதாரணத்திற்கு தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 5183 டாலர் என வைத்து கொள்வோம். வெள்ளியின் விலை 87.25 டாலர் என்று வைத்துக்கொள்வோம்.இப்போது ரேஷியோ 59.40 (5183 /87.25). அதாவது ஒரு பங்கு தங்கத்தின் மதிப்பிற்கு சமமான வெள்ளியை வாங்க 59.40 பங்கு வெள்ளி தேவைப்படுகிறது. இந்த ரேஷியோ குறைவாக இருந்தால் தங்கம் மலிவாகவோ அல்லது வெள்ளி விலை உயர்ந்துவிட்டதாகவோ கருதப்படுகிறது. இது தங்கம் வாங்குவதற்கு சிறந்த நேரமாகப் பார்க்கப்படுகிறது. இதே விகிதம் அதிகமாக இருந்தால் தங்கம் விலை அதிகரிக்கும். வெள்ளி விலை குறைவாக இருக்கும். இருப்பினும் இது ஒரு கருவி மட்டுமே. இதை மட்டுமே கருத்தில் கொண்டு தங்கம் மற்றும் வெள்ளியை வாங்குவது தவறு. பணவீக்கம்,பொருளாதார சூழல், புவிசார் அரசியல் பதற்றங்கள், டாலர் மதிப்பு என அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!



Click it and Unblock the Notifications