திருட்டு பயமில்லை, சொத்து வரியும் இல்லை: கலக்கும் கோல்டு இடிஎஃப்

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

சென்னை: நீங்கள் தங்கம் வாங்குவதற்கும், தங்க இடிஎஃப் வாங்குவதற்கும் வித்தியாசம் உள்ளது. தங்கத்தை வாங்கினாலும் அல்லது தங்க இடிஎஃபை வாங்கினாலும் அதன் மதிப்பு ஒன்று தான். ஆனால் அதன் செயல்பாடுகளில் வேறுபாடுகள் உள்ளன.

அதாவது நீங்கள் தங்கத்தை வாங்கினாலும் அல்லது தங்க இடிஎஃபை வாங்கினாலும், அவற்றை விற்பது மற்றும் அவற்றிற்கான வரிகள் போன்றவை வேறுபடுகின்றன. அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.

எலக்ட்ரானிக் படிவத்தில் தங்க இடிஃப்

தங்க இடிஎஃப் எலக்ட்ரானிக் படிவத்தில் இருக்கிறது. ஆகவே தங்க இடிஎஃபை வாங்குவது என்பது பங்குகளை வாங்குவதுபோல் இருக்கும்.

அதாவது நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருக்கும். ஆனால் உங்கள் கைகளில் பணம் இருக்காது. அதுபோல் தான் நீங்கள் தங்க இடிஎஃபை வைத்திருப்பீர்கள். ஆனால் உங்கள் கைகளில் தங்கம் இருக்காது. இருப்பினும் நீங்கள் தங்கத்திற்கு உரிமையாளராக இருப்பீர்கள்.

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நீங்கள், பணம் தேவைப்படும் போது உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்கிறீர்கள். அதுபோலவே நீங்கள் ஒரு யூனிட் தங்க இடிஎஃப் வைத்திருந்தால், அது ஒரு கிராம் தங்கத்தற்குச் சமம். உங்களுக்குப் பணம் தேவைப்படும் போது நீங்கள் உங்கள் தங்க இடிஎஃபை விற்றுக் கொள்ளலாம்.

நீங்கள் தங்கத்தை விற்க வேண்டும் என்றால் தங்கத்தை உங்கள் கைகளில் வைத்திருக்க வேண்டும். ஆனால் தங்க இடிஎஃப் எலக்ட்ரானிக் படிவத்தில் இருப்பதால் அதை நீங்கள் கைகளில் வைத்திருக்க வேண்டியதில்லை.

 

 

சொத்து வரி

நீங்கள் தங்கத்தை அல்லது தங்க நகைகளை அதிகமாக வைத்திருந்தால் அதற்கு சொத்து வரி கட்ட வேண்டும். ஆனால் அதே நேரத்தில் உங்களிடம் தங்க இடிஎஃப் அதிகமாக இருந்தாலும் அதற்கு சொத்து வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

தங்க இடிஎஃப்களில் இருக்கும் முதலீட்டு பெருக்கம்

பங்குகளைப் போல் அல்லாமல் தங்க இடிஎஃப்கள் நீண்ட கால முதலீட்டு வரவுகளில் இருந்து விலக்குப் பெறுவதில்லை.

திருட்டுப் பயம் இல்லை

நீங்கள் தங்கம் வைத்திருந்தால் அவை திருடு போய்விடுமோ என்ற பயம் எப்போதும் இருக்கும். ஆனால் தங்க இடிஎஃப்கள் திருடு போக வாய்ப்பே இல்லை. ஏனெனில் அவை எலக்ட்ரானிக் படிவத்தில் இருக்கின்றன.

தங்கத்தை பத்திரப்படுத்தி வைக்க பணம்

நீங்கள் வைத்திருக்கும் தங்கத்தை வங்கி பெட்டகங்களில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் வங்கிகளுக்கு பணம் செலுத்த வேண்டும். ஆனால் தங்க இடிஎஃப்களை பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gold, gold etfs, தங்கம்
English summary

5 differences between physical gold and gold ETFs | தங்கம் நல்லதா, தங்க இடிஎஃப் நல்லதா?

Buying physical gold is very different from buying and owning gold ETFs, though one must admit that ultimately the value of both would remain the same, barring marginal differences. Remember if you buy, you are owning gold, whether it is Gold ETFs or physical gold, though the costs, mechanism to sell and tax implications differ. Above are 5 differences between Gold and Gold ETFs.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns