‘ரிலையன்ஸ் மை கோல்ட்’ திட்டம்: இப்போது தங்கத்தில் ஒரு நாளைக்கு ரூ. 50 சேமிக்கலாம்!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

‘ரிலையன்ஸ் மை கோல்ட்’ திட்டம்: இப்போது தங்கத்தில் ஒரு நாளைக்கு ரூ. 50 சேமிக்கலாம்!
ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் அங்கமான ரிலையன்ஸ் மணி பிரிஷியஸ் மெட்டல் பிரைவேட் லிமிடெட் (RMPM) நிறுவனம் - வேர்ல்டு கோல்டு கவுன்சிலுடன் இணைந்து சமீபத்தில் ‘ரிலையன்ஸ் மை கோல்ட் திட்டம்' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இந்த ‘ரிலையன்ஸ் மை கோல்ட்' திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதுமையான வாய்ப்பை அளிக்கிறது. அதாவது, தினசரி சராசரி தங்க விலையின் அடிப்படையில் அமைந்த கணக்கீட்டுமுறை மூலம் வாடிக்கையாளர்கள் தங்கத்தை கொள்முதல் செய்துகொள்ள வாய்ப்பளிக்கும் அற்புதமான திட்டம் இது.

இதுவரை இல்லாத இந்த புதுமையான திட்டம் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் தரகு மற்றும் பகிர்மானப்பிரிவின் CEO திரு. விக்ரந்த் குக்னானி மற்றும் வேர்ல்டு கோல்டு கவுன்சில்-முதலீட்டுப்பிரிவின் இயக்குநரான திரு ஸ்டீபன் ரிச்சர்ட்சன் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது?

குறைந்தபட்ச மாதாந்திர சந்தாத்தொகையாக ரூபாய் 1000 கட்டினால் தினசரி 50 ரூபாய்க்கு தங்கம் கொள்முதல் செய்ய முடியும்.

இந்த திட்டம் 100 சதவீதம் நிஜ தங்கத்தின் இருப்பின் மூலம் உறுதி செய்யப்படுகிறது. அந்த தங்கமானது காப்பு நிறுவனத்தில் தகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் சேமிக்கப்பட்டு ஒரு தனி டிரஸ்ட்டி மூலம் நிர்வகிக்கப்படும். இதன் மூலம் தங்கத்தின் பாதுகாப்பான சேமிப்பு உறுதி செய்யப்படுகிறது.

தினசரி சராசரி கணக்கீட்டு முறைப்படி வாடிக்கையாளர்கள் தங்கத்தை கொள்முதல் செய்யலாம். எனவே முதல் நாளிலிருந்தே உங்கள் முதலீடு துவங்க ஆரம்பித்துவிடுகிறது. வாடிக்கையாளர்களால் 20 துண்டுகளாக வாங்கப்படும் தங்கம் அடுத்த 20 நாட்களுக்கு கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இறுதியாக நீங்கள் கொள்முதல் செய்யும் அளவுக்கு தங்கம் கிராம்களில் உங்கள் கணக்கில் சேர்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் தினசரி தங்களது கணக்கு குறித்த தகவல்கள் கொள்முதல் செய்துள்ள தங்கத்தின் அளவு, தங்கத்தின் கொள்முதல் விலை போன்றவற்றை எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

வாடிக்கையாளரின் பணம் நிறுவனத்தின் கணக்கிற்கு வந்தவுடனே தங்கம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்படுகிறது. பிரத்யேக வாடிக்கையாளர் அடையாள எண்ணைப் பயன்படுத்தி தங்களது கணக்கின் இருப்பை வாடிக்கையாளர்கள் எப்போதும் சோதித்துக்கொள்ள வசதி உள்ளது.

இந்த (R-MGP) திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் சார்பில் 24 கேரட் மற்றும் 995 தரத்துடன் தங்கம் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த திட்டம் முதிர்ச்சியடையும் காலத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் உள்ள தங்கத்தை தங்க நாணயங்களாகவோ அல்லது நகைகளாகவோ இதற்காக இந்தியா முழுதும் நிறுவப்படும் விசேட அங்காடிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

பிரிமெச்சூர் வித்டிராயல்:

தற்போது வாடிக்கையாளர் கணக்கு துவங்கப்பட்டு ஒரு வருடம் முடிந்திருப்பின் பிரிமெச்சூர் வித்டிராயலுக்கான கட்டணம் ஏதும் இல்லை. கணக்கு லாக்-இன் ஆவதற்கு முன் வித்டிராயல் செய்து கொள்ள அனுமதியில்லை. இருப்பினும் லாக்-இன் காலம் முடிந்திருந்து 1 வருடத்திற்கு முன் பிரிமெச்சூர் வித்டிராயல் செய்தால் அதற்கான கட்டணமாக வாடிக்கையாளரின் கூட்டு சந்தாத்தொகையில் 2.5% வசூலிக்கப்படுகிறது.

சந்தா கால அளவு:

1 வருடம் துவங்கி 15 வருடங்கள் (ஒரு வருட இடைவெளி இதில் உண்டு) வரை வெவ்வேறு கால அளவுகளில் இந்த திட்டம் கிடைக்கிறது. ஏற்கனவே உறுப்பினராக இருப்பவர்கள் தங்களது சந்தா பருவத்தை அதற்கான புதுப்பிப்பு விண்ணப்பம் மூலமாக விதிமுறைகளின்படி மாற்றிக்கொள்ளலாம்.

குறைந்தபட்ச தொகை:

 

உறுப்பினர் பதிவிற்கு தேவையான குறைந்தபட்ச தொகையாக தற்போது 1000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குப்பின் சந்தாதாரர்கள் 100 ரூபாயின் மடங்குகளாக செலுத்தலாம்.

திட்டத்தின் பலன்கள்:

இது உங்களது அன்றாட சேமிப்பை தங்கமாக மாற்றுகிறது.

‘மை கோல்ட்' திட்டத்தின் மூலம் உங்கள் சேமிப்பை 995 தரத்துடன் கூடிய 24 காரட் தங்கத்தில் நீங்கள் தினசரி முதலீடு செய்யலாம்.

இது தங்கத்தை சுலபமாக கொள்முதல் செய்ய வழி செய்கிறது.

தங்கம் வாங்க வேண்டிய அளவு பணம் இல்லையே என்று வருந்த வேண்டிய அவசியம் இல்லை. மாதம் ஆயிரம் ரூபாய் என்ற அளவு சேமிக்கத்துவங்கலாம்.

இது தினசரி சராசரி தங்கவிலையை உங்களுக்கு அளிக்கிறது.

‘மை கோல்ட்' திட்டம் நீங்கள் வாங்கும் தங்கத்தின் கொள்முதலை மாதத்தின் 20 வேலைநாட்களுக்கு நீடித்து பிரிப்பதால் உங்களை விலை உயர்விலிருந்து காக்கிறது.

இது நீங்கள் கொள்முதல் செய்துள்ள தங்கத்தை மாற்றிக்கொள்ள உதவுகிறது.

நீங்கள் சேமித்த தங்கத்தை இந்தியாவிலுள்ள பிரத்யேக கடைகளில் நகைகளாகவோ அல்லது தங்க நாணயங்களாகவோ மாற்றிக்கொள்ளலாம்.

உங்களுக்கேற்ற சந்தா பருவத்தை தேர்ந்தெடுக்க உரிமையளிக்கிறது.

12/24/36/48/60 போன்ற கால அளவுகளில் தங்களுக்கு பொருத்தமானவற்றை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

Invest in e-gold, silver through SIP

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance My Gold Plan: Now save in gold at Rs 50 a day | ‘ரிலையன்ஸ் மை கோல்ட்’ திட்டம்: இப்போது தங்கத்தில் ஒரு நாளைக்கு ரூ. 50 சேமிக்கலாம்!

Reliance Money Precious Metal Pvt. Limited (RMPM), a Reliance Capital Company, and World gold council recently announced the launch of Reliance My Gold Plan. Reliance My Gold Plan offers customers the unique opportunity to start accumulating physical gold using a daily average pricing methodology.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?