புல்லட் ரயில்: வாங்கிய கடனுக்கு ஒரு நாளில் 100 முறை ஓட வேண்டும்.. சொல்கிறது ஐஐஎம்..!

அகமதாபாத்: மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் அறிவித்த மும்பை முதல் அகமதாபாத் வரையிலான அதிவேக புல்லட் ரயில் திட்டத்திற்கு ஜப்பான் நாட்டிடம் இருந்து மிகப்பெரிய தொகையைக் கடனாகப் பெற்றுள்ளது.

ஏற்கனவே இந்தியா பல வழிகளில் கடன் பெற்று நாட்டின் பொருளாதாரத்தையும் வர்த்தகத்தையும் மேம்படுத்த திட்டமிட்டுள்ள போது, ஜப்பான் நாட்டிடம் இருந்து பெறப்படும் கடன் கூடுதல் சுமையாக இல்லாமல் சரியான நேரத்தில் செலுத்த வேண்டும் என்றால் புதிய புல்லட் ரயிலைப் புல்லட்டை போல ஒரு நாளில் 100 முறை பறக்க வேண்டும்.

போக்குவரத்து வசதிகள்

போக்குவரத்து வசதிகள்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளும் அமைய வேண்டும், இல்லையென்றால் சீனா தற்போது சந்தித்து வரும் நிலையைத் தான் இந்தியாவும் அடுத்த 10 வருடத்தில் சந்திக்கும்.

இதனைக் கருத்தில் கொண்டு தான் மத்திய அரசு மிகப்பெரிய சாலை திட்டங்கள், சிறு மற்றும் குரு விமான நிலையங்கள், புல்லட் ரயில் மற்றும் ரயில்வே துறை விரிவாக்கம், துறைமுக விரிவாக்கம் எனப் போக்குவரத்திற்காகப் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

 

புல்லட் ரயில்

புல்லட் ரயில்

இந்நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள முக்கியப் போக்குவரத்துத் திட்டங்களில் புல்லட் ரயில் திட்டம் மிகப்பெரிய முதலீடு மற்றும் கடனை கொண்டு துவங்கப்பட உள்ளது.

ஜப்பானின் கடன் உதவி..

ஜப்பானின் கடன் உதவி..

இத்திட்டத்திற்கான 80 சதவீத தொகையை ஜப்பான் அரசு அளிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இதன் படி மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் அமைய உள்ள புல்லட் ரயில் திட்டத்திற்குச் சுமார் 97,636 கோடி ரூபாயைக் கடனாக அளிக்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.

இந்தக் கடனை இத்திட்ட துவக்கத்தின் 16வது வருடத்தில் இருந்து 50 வருடத்திற்குள் 0.1 சதவீத வட்டியுடன் இந்திய திரும்பி செலுத்த வேண்டும்.

 

20,000 கோடி ரூபாய்

20,000 கோடி ரூபாய்

இத்திட்டத்திற்கான 20 சதவீத தொகையை மத்திய அரசு அளிக்க உள்ளது. ஜப்பான் ரூ.97,636 கோடி நிதியுதவி அளிக்கும் நிலையில், மத்திய அரசு இத்திட்டத்திற்காக 20,000 கோடி ரூபாயை அளிக்க முடிவு செய்துள்ளது.

ஐஐஎம்

ஐஐஎம்

இந்நிலையில் இத்திட்டம் குறித்து நாட்டின் முன்னணி மேலாண்மை கல்லூரியான ஐஐஎம் அகமதாபாத் செய்த ஆய்வில் முக்கியத் தகவல்களும் புள்ளிவிவரங்களும் கிடைத்துள்ளது.

100 முறை பயணம்

100 முறை பயணம்

ஐஐஎம் அகமதாபாத் செய்த ஆய்வில் மத்திய அரசு அறிவித்துள்ள இந்த 300 கிலோமீட்டர் தொலைக்கொண்ட இத்திட்டத்தில் ஒரு டிக்கெட் விலை 1,500 ரூபாய் என வைத்துக்கொண்டால், ஒரு நாளில் 100 முறை அல்லது 88,000-118,000 பயணிகளுக்குச் சேவை அளிக்க வேண்டும்.

இல்லையென்றால் கடனை சரியான நேரத்தில் ஜப்பான் நாட்டிற்குச் செலுத்த முடியாது.

 

இயக்கக் கட்டணம்

இயக்கக் கட்டணம்

இந்த ஆய்வில் 15 வருடத்திற்குப் பின் இயக்கக் கட்டணம் குறித்த முழுமையான தகவல்கள் இல்லாத போது, கிடைக்கும் வருமானத்தில் 20 சதவீதம் மற்றும் 40 சதவீதம் என்ற இரு இயக்கக் கட்டணங்களைக் கொண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது.

800 பயணிகள்

800 பயணிகள்

மும்பை முதல் அகமதாபாத் வழித்தடத்தில் ஒரு வழிப் பயணமாகச் சராசரி ஒரு ரயில் 800 பயணிகளுக்குச் சேவை அளிக்கம் என்றால் 88,000 பயணிகளுக்குச் சேவை அளிக்கும் பட்சத்தில் ஒரு நாளுக்கு 100 முறை ரயிலை இயக்க வேண்டும்.

அதாவது 14.4 நிமிடத்தில் ஒரு பயணம். சாத்தியம் மிகவும் குறைவு. அதாவது ஒரு மணிநேத்திற்கு 3 ரயில், இருவழிகளில் மொத்தம் 6 ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.

 

மும்பை

மும்பை

இந்தியாவிலேயே மக்களைத் தொகையில் முதல் இடம் மற்றும் 7வது இடத்தில் இருக்கும் மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களை நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதையாக மத்திய அரசு முடிவு செய்தது மிகச் சிறப்பானது என ஐஐஎம் தெரிவித்துள்ளது.

அதுமட்டும் அல்லாமல் நாட்டின் வர்த்தக உலகில் மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்கள் முக்கியமானவை. இப்புதிய புல்லட் ரயில் திட்டத்தின் மூலம் புதிய வர்த்தகங்கள் சாத்தியமாகும்.

 

விரிவாக்கம்

விரிவாக்கம்

இந்நிலையில் இத்திட்டம் ஜெய்ப்பூர் - டெல்லி வரையில் விரிவாக்கம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மக்கள் தலையில் கடன் சுமை..

மக்கள் தலையில் கடன் சுமை..

ஒரு மணிநேரத்திற்கு 6 முறையில் ரயில் இயக்கப்படவில்லை என்றால் 97,636 கோடி ரூபாய் கடன் தொகை மக்கள் தலையில் ஏற்றும். ஒரு நாட்டின் மக்கள் தொகை மற்றும் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள், கடன் அளவு ஆகியவை அனைத்தும் வைத்தே ஜிடிபி கணிக்கப்படுகிறது.

சீனா- ஜப்பான்

சீனா- ஜப்பான்

4 வருடத்திற்கு முன் சீனாவில் நடந்த புல்லட் ரயில் விபத்தின் காரணமாக, 98,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மும்பை - அகமதாபாத் வழித்தட புல்லட் ரயில் அமைக்கும் திட்டத்தை ஜப்பான் வென்றது.

இதன் மூலம் இந்தியாவில் முதல் புல்லட் ரயில் அமைக்கும் பெருமையை ஜப்பான் நாட்டு ஷின்கேன்சென் சிஸ்டம்ஸ் மூலம் அமைக்கப்படுகிறது.

 

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

இத்திட்டத்திற்குத் தேவையான 20 சதவீத பொருட்களை ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யவும், மீதமுள்ள 80 சதவீத பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பரிமாற்றம்

தொழில்நுட்ப பரிமாற்றம்

இந்தத் திட்டத்திற்குக் குறைந்த அளவிலான நிதி, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உதிரி பாகங்களைத் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப பரிமாறுதல் ஆகியவற்றை அளிக்க ஜப்பான் நாட்டு ரயில் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளது.

புல்லட் ரயில் நிலையம்

புல்லட் ரயில் நிலையம்

மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் புல்லட் ரயில் அமைக்கப்பட உள்ள நிலையில், மும்பையில் பந்தரா-குர்லா காம்பிளக்ஸ் பகுதியில் புல்லட் ரயில் நிலையத்தை அமைக்க மிட்டல் தலைமையிலான குழு திட்டமிட்டுள்ளது.

1 நிமிட தாமதம்

1 நிமிட தாமதம்

சீனாவுடனான மிகப்பெரிய போட்டியில் வெற்றிபெற்ற ஷின்கேன்சென் சிஸ்டம்ஸ் இதுவரை பாதுகாப்பு குறித்து எவ்விதமான பிரச்சனைகளையும் சந்தித்ததில்லை.

மேலும் இந்நிறுவனத்தின் ரயில் இயக்கங்களில் காலதாமதத்தின் அளவு 1 நிமிடத்திற்குக் குறைவாகவே உள்ளது.

 

சீனா விபத்து

சீனா விபத்து

தவறான வடிவமைப்பு, மட்டமான மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றின் காரணமாகவே சீனாவின் தென்கிழக்கு நகரமான வென்சூவில் புல்லட் ரயில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 40 பேர் உயிரை இழந்தனர். மேலும் 200க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.

 

சர்வதேச வர்த்தகம்

சர்வதேச வர்த்தகம்

புல்லட் ரயில் அமைப்பதில் ஜப்பான் நாட்டு நிறுவனங்களைப் போல் சீனாவும் உலக நாடுகளில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் சர்வே

தமிழ் குட்ரிட்டன்ஸ் சர்வே

இந்தியாவில் புல்லட் ரயில் குறித்த சர்வே செய்தபோது 761 பேர் கலந்துகொண்ட ஆய்வில், 50.3 சதவீதம் பேர் இத்திட்டத்தை வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளனர்.

40.2 சதவீதம் பேர் மத்திய அரசு முதலில் அடிப்படைத் தேவையை நிறைவேற்ற வேண்டும் எனத் தங்களது கருத்தைப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் 9.5 சதவீதம் பேர் புல்லட் ரயில் திட்டம் தேவையற்றது என்று தெரிவித்துள்ளனர்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+