வெறிச்சோடிய நகை கடைகள்! தங்கம் விலை நிலவரம் என்ன? தள்ளுபடி கிடைக்குமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த மாதத்தில் இருந்து தான் வியாபாரிகள், மெல்ல கடைகளைத் திறக்கத் தொடங்கி இருக்கிறார்கள். நகைக் கடைகளும் பூஜை எல்லாம் போட்டு வியாபாரம் செய்யத் தொடங்குகினார்கள்.

 

ஆனால், நகை வாங்க ஆட்கள் தான் யாரும் இல்லை. எனவே நகைக் கடைக்காரர்களும், தங்க டீலர்களிடம் இருந்து தங்கத்தை வாங்க தயக்கம் காட்டிக் கொண்டு இருக்கிறார்களாம்.

இந்தியாவில் இருக்கும் தங்க டீலர்கள், தங்களிடம் இருக்கும் தங்கத்தை விற்பனை செய்ய, ஒரு அவுன்ஸ் Gold-க்கு 32 டாலர் வரை தள்ளுபடி விலையில் தங்கத்தை விற்று இருக்கிறார்களாம்.

ஆள் இல்லை

ஆள் இல்லை

தங்கத்துக்கு இந்தியாவில் 12.5 சதவிகிதம் இறக்குமதி வரி + 3 சதவிகித விற்பனை வரி வேறு செலுத்த வேண்டுமாம். லாக் டவுன் காரணமாக, இந்தியாவில் கடந்த மே 2020-ல் இந்தியாவின் தங்க இறக்குமதி 99 % சரிந்து இருக்கிறதாம். எனவே தான் இப்போது தங்க டீலர்கள், தள்ளுபடி விலையில் தங்கத்தை நகைக் கடைக்காரர்களுக்கு விற்றுக் கொண்டு இருக்கிறார்களாம்.

நமக்கும் விலை குறையலாம்

நமக்கும் விலை குறையலாம்

சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தஙக்த்தின் விலை 48,350 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. இது 49,220 உச்ச விலையை விட 870 ரூபாய் குறைவு. அதே போல, 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 44,270 ரூபாய்க்கு விற்கிறார்களாம். இது 45,120 ரூபாயை விட 850 ரூபாய் குறைவு.

நமக்கு விலை குறையலாம்
 

நமக்கு விலை குறையலாம்

மேலே சொன்னது போல, குறைந்த விலைக்கு டீலர்களிடம் இருந்து தங்கத்தை வாங்கும் நகைக் கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களை ஈர்க்க, தள்ளுபடி விலையிலேயே கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி கொடுத்தால் தற்போது தங்கம் வாங்குவது வாடிக்கையாளர்களுக்கு லாபகரமானதாக அமையலாம்.

தங்கம் விலை சர்வதேசம்

தங்கம் விலை சர்வதேசம்

சர்வதேச அளவில் ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக 1,700 - 1,750 அமெரிக்க டாலர் என்கிற ரேஞ்சுக்குள்ளேயே வர்த்தகமாகிக் கொண்டு இருப்பதாகச் சொல்லி இருந்தோம். ஆனால் இன்று 1,670 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சர்வதேச தங்கம். இது கடந்த ஒரு மாத உச்ச விலையான 1,748 டாலரை விட 78 டாலர் குறைவு.

பங்குச் சந்தைகள்

பங்குச் சந்தைகள்

ஜூன் 05 அன்று, நாஸ்டாக் 2.06 %, லண்டனின் எஃப் டி எஸ் இ 2.25 %, பிரான்சின் சி ஏ சி 3.71 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 3.36 % என மேற்கத்திய நாடுகளின் பங்குச் சந்தைகள் எல்லாமே ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. அதே போல ஆசியாவில் எல்லா நாட்டுச் சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

திசை மாற்றம்

திசை மாற்றம்

பொதுவாக உலக பங்குச் சந்தைகள் ஏற்றம் காணாத போதும், உலக பொருளாதாராத்தில் முதலீட்டாளர்கள் லாபம் சம்பாதிக்க வழி இல்லாத போதும் தான் தங்கம் விலை ஏறும். ஆனால் இப்போது, அனைத்து உலக சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிறது என்றால் தங்கம் விலை தானாக சரியத் தானே செய்யும். அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

முழுமையாக இல்லை

முழுமையாக இல்லை

ஆனால் இன்னும் கொரோனா தொற்றுக்கு ஒரு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. அதே போல, அமெரிக்க சீன வர்த்தகப் போர், இந்தியா சீனா போர் பதற்றம் என எதற்கும் ஒரு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் கொரோனா சார்ந்த செய்திகளோ அல்லது மற்ற உலகின் பெரிய பிரச்சனைகளோ, பங்குச் சந்தையை பாதிக்கலாம், ஆகையால் மீண்டும், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையை விட்டு, தங்கத்துக்கு ஓடி வரலாம். அப்படி வந்தால் மீண்டும் தங்கம் விலை ஏறலாம்.

எம் சி எக்ஸ் தங்கம்

எம் சி எக்ஸ் தங்கம்

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் 10 கிராம் தங்கத்துக்கான ஆகஸ்ட் 2020 ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை கடந்த 18 மே 2020 அன்று தான் 48,190 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. அதன் பின் தொடர்ந்து விலை சரிவு தான். ஜூன் 05 அன்று கூட ஆகஸ்ட் காண்டிராக்ட்டின் விலை 45,698-க்கு நிறைவடைந்து இருக்கிறது. ஆக எம் சி எக்ஸ் சந்தையிலும் தங்கத்தின் விலை இறக்கம் பிரதிபலித்து இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price fall from $1748 to $1670 in few weeks

Gold price was $1,748 in 20 may. Today gold has touched around $1,670. We have given the Chennai gold rate details and MCX gold rate details also.
Story first published: Saturday, June 6, 2020, 16:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X