தங்கம் வாங்க நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டோமே! மீண்டும் அதிரடி விலை ஏற்றத்தில் தங்கம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த 12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை அன்று, ஒரு பெரிய விலை இறக்கத்தைக் கண்டது தங்கம்.

அந்த விலை இறக்கத்தை, கடந்த 07 ஆகஸ்ட் 2020 அன்று, தங்கம் தொட்டு இருந்த உச்ச விலை உடன், ஆகஸ்ட் 12, 2020 விலையை ஒப்பிட்டு, கடந்த 15 ஆகஸ்ட் 2020 அன்று "செம சரிவைக் கண்ட தங்கம் விலை! பவுனுக்கு எவ்வளவு குறஞ்சிருக்கு தெரியுமா?" என்கிற தலைப்பில் எழுதி இருந்தோம்.

12 ஆகஸ்ட் 2020 அன்று, தங்கம் விற்ற விலை, உண்மையாகவே தங்கம் வாங்க விரும்பியவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது என்பதை, தற்போதைய விலை ஏற்றம் நமக்கு உணர்த்துகின்றன. 12 ஆகஸ்ட் 2020 விலை மற்றும் இன்றைய விலை விவரங்களைப் பார்ப்போம்.

சூப்பர் விலை ஏற்றத்தில் சர்வதேச தங்கம்

சூப்பர் விலை ஏற்றத்தில் சர்வதேச தங்கம்

"பாட்டும் நானே பாவமும் நானே.." என்பது போல, இந்தியாவின் எம் சி எக்ஸ் ஆகட்டும், ஆபரணத் தங்கம் ஆகட்டும், இரண்டிலுமே விலை அதிகரிக்க மிக முக்கிய காரணமாக இருப்பது இந்த சர்வதேச தங்கம் தான். ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை 12 ஆகஸ்ட் 2020 அன்று 1,911 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. தற்போது அதிகபட்சமாக 2,006 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஒரே வாரத்தில் 95 டாலர் விலை ஏற்றம்!

நறுக் விலை ஏற்றத்தில் எம் சி எக்ஸ் தங்கம்

நறுக் விலை ஏற்றத்தில் எம் சி எக்ஸ் தங்கம்

அக்டோபர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை கடந்த 12 ஆகஸ்ட் 2020 அன்று 49,955 ரூபாய் வரைத் தொட்டது. வர்த்தக நேர முடிவில் 52,254 ரூபாய்க்கு நிறைவடைந்தது. இன்று, அதே 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை அதிகபட்சமாக 53,350 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. 1,096 ரூபாய் விலை ஏற்றம்.

எக்ஸ்பிரஸ் வேகத்தில் விலை ஏறும் எம் சி எக்ஸ் வெள்ளி

எக்ஸ்பிரஸ் வேகத்தில் விலை ஏறும் எம் சி எக்ஸ் வெள்ளி

செப்டம்பர் 2020 மாத்த்துக்கான 1 கிலோ வெள்ளி ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை கடந்த 12 ஆகஸ்ட் 2020 அன்று 60,910 ரூபாய் வரை சரிந்தது. வர்த்தக நேர முடிவில் 66,753 ரூபாய்க்கு நிறைவடைந்தது. இன்று 69,160 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சுமார் 2,400 ரூபாய் விலை ஏற்றம்! அதுவும் ஒரே வாரத்தில்!

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 12 ஆகஸ்ட் 2020 அன்று 54,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. நேற்று 56,360 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். 1,680 ரூபாய் விலை ஏற்றம். அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 12 ஆகஸ்ட் 2020 அன்று 50,130 ரூபாய்க்கு விற்பனை ஆனது. நேற்று 51,670 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். 1,540 ரூபாய் விலை ஏற்றம்.
இப்படி எல்லா வகையான தங்கத்தின் விலையும் 12 ஆகஸ்டை விட இன்றைக்கு நன்றாகவே அதிகரித்து இருக்கின்றன. இந்த விலை ஏற்றத்துக்கான காரணங்கள் என்ன?

பலவீனமாக இருக்கும் டாலர் கரன்சி

பலவீனமாக இருக்கும் டாலர் கரன்சி

அமெரிக்க டாலர் கடந்த ஆறு வர்த்தக நாட்களாக பலவீனமாகவே வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. கிட்டத்தட்ட கடந்த 2 வருடத்தில் காணாத இறக்கத்தைக் கண்டிருக்கிறது அமெரிக்க டாலர் கரன்ஸி. அமெரிக்க டாலர் பலவீனமடைந்தால், மற்ற நாட்டு கரன்ஸி வைத்திருப்பவர்களுக்கும், தங்கம் கொஞ்சம் குறைந்த விலையில் கிடைக்கும். இது தங்கத்தின் விலை ஏற்றத்தை ஊக்குவிக்கிறது.

இந்திய ரூபாய் Vs அமெரிக்க டாலர்

இந்திய ரூபாய் Vs அமெரிக்க டாலர்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த 04 ஆகஸ்ட் 2020 அன்று 75.04 ரூபாயைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்தது. 11 ஆகஸ்ட் 2020 அன்று 74.77 ரூபாய் வரை வந்தது. தற்போது 74.76 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வலுவடைந்து இருக்கின்ற போதும், எம் சி எக்ஸ் மற்றும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து இருப்பது கவனிக்க வேண்டி இருக்கிறது. காரணம் சர்வதேச தங்கம் விலை அதிகரித்தது தான்.

வருமானம் கொடுக்கும் முதலீடுகள் சொதப்பல்

வருமானம் கொடுக்கும் முதலீடுகள் சொதப்பல்

டாலர் கரன்சி பலவீனமடைவது ஒரு பக்கம் இருக்க, அமெரிக்காவில் 10 வருடத்துக்கான அமெரிக்க கருவூல பில்களின் (10 Year US Treasury Bill) வருமானமும் தொடர்ந்து இறக்கம் கண்டு வருகிறது. இதுவும் தங்கத்தின் விலை அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. சரி, எதிர்கால தங்கம் விலை என்ன ஆகும்?

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் மினிட்ஸ்

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் மினிட்ஸ்

தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் மற்றும் வர்த்தகம் செய்பவர்கள், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின், சமீபத்தைய கூட்ட மினிட்ஸ் (Meeting Minutes) விவரங்களுக்காகக் காத்திருக்கிறார்களாம். இந்த விவரம் வெளியானால், ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்கள் மாற்றத்தை பற்றி, ஒரு பரந்து பட்ட பார்வையைப் பெறலாம் எனக் காத்திருக்கிறார்கள்.

தங்கம் விலையில் volatility

தங்கம் விலையில் volatility

தங்கம் கொஞ்சம் அதிகமாகவே விலை ஏற்ற இறக்கங்களை காணலாம். அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் மினிட்ஸ் விவரங்கள் வெளியானாலோ அல்லது, அமெரிக்க அரசு, ஊக்கத் தொகைகளை அறிவித்தாலோ, தங்கம் மீண்டும் தன் ஏற்றப் பாதையில் பயணிக்கத் தொடங்கும் என்கிறது கோட்டக் செக்யூரிட்டீஸ். அதோடு தற்போதைக்கு சர்வதேச தங்கம் ஒரு அவுன்ஸுக்கு 2,000 டாலருக்கு மேல் விலை நிலை பெறலாம். இருப்பினும் ஜாக்கிரதையாக வர்த்தகங்களை மேற்கொள்ளச் சொல்கிறது கோட்டக் கசெக்யூரிட்டீஸ்.

ஜிம் ராஜர்ஸ் கருத்து

ஜிம் ராஜர்ஸ் கருத்து

உலகின் முக்கிய கமாடிட்டி முதலீட்டாளர்களில் ஒருவரான ஜிம் ராஜர்ஸ் கூட, தங்கத்தின் விலை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கலாம். 10 - 15 சதவிகித விலை சரிவை எல்லாம் கண்டு கொள்ளத் தேவை இல்லை எனச் சொல்லி இருந்தார். அதோடு எதிர்காலத்தில் இன்னும் தங்கம் விலை அதிகரிக்க, நிறைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கணித்து இருந்தது இங்கு நினைவுபடுத்துகிறோம். கோல்ட்மேன் சாக்ஸ் கூட அடுத்த 12 மாதங்களில் தங்கம் விலை 2,300 டாலரைத் தொடலாம் எனக் கணித்து இருப்பதையும் இங்கு நினைவு படுத்துகிறோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price is surging up continuously from its august 12 price fall

The international gold price has been surging continuously from its August 12 price fall. Now international gold price is trading at $2,006. It was $1,911 on August 12.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X