நீங்கள் அடிக்கடி சென்று உணவு அருந்தும் உணவகம், அரசாங்கத்திற்கு வரி செலுத்துவதில் நேர்மையாக இருக்கிறதா? தற்போது வெளிவந்துள்ள ஒரு திடுக்கிடும் தகவல், ஒட்டுமொத்த உணவக துறையையும் உலுக்கியுள்ளது. வருமானத்தை முறையாக காட்டாமல் மறைத்து வந்த சுமார் 63,000 உணவகங்களுக்கு, வருமான வரித்துறை ஆனது அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சாப்பாட்டின் விலையிலேயே ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகளை வசூலிக்கும் உணவகங்கள், தங்கள் லாப கணக்கை தாக்கல் செய்வதில் காட்டிய குளறுபடிகள் தற்போது அம்பலமாகியுள்ளன. வரி ஏய்ப்பு மற்றும் கணக்கில் வராத வருமானம் என்ற அடிப்படையில், வருமான வரித்துறை கையில் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, மற்ற உணவக உரிமையாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் 63,000 உணவகங்கள் சிக்கியது எப்படி? இந்த நோட்டீஸால் உணவக உரிமையாளர்கள் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

வருமான வரித் துறையானது 1,77,000 உணவகங்களின் பரிவர்த்தனை தரவுகளை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முடிவில், பல ஆயிரம் உணவகங்கள் தாங்கள் ஈட்டிய வருமானத்தை விட மிகக்குறைவாக கணக்கு காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் விளைவாக, முறையான வரி செலுத்தாத மற்றும் வருமானத்தை குறைத்து காட்டிய 63,000 உணவகங்களுக்கு வருமான வரித்துறை மெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இலவச சோலார் பேனல் மின்சார திட்டம்! ஏழை எளிய குடும்பங்களுக்கு அதிரடி திட்டம் - முழு விவரம்!
மேலும் சம்பந்தப்பட்ட உணவகங்கள் தங்கள் வருமான வரி கணக்கீடுகளை மீண்டும் சரிபார்த்து, பிழைகள் ஏதேனும் இருப்பின், மார்ச் 31-ஆம் தேதிக்குள் திருத்தித் தாக்கல் செய்யுமாறு கூறியுள்ளது.
கடந்த நவம்பர் 2025 முதல் உணவகத் துறையில் நிலவும் வரி ஏய்ப்பு குறித்து கண்டறிய. ஒரு விரிவான விசாரணையை தொடங்கியது. இந்த ஆய்வின் மூலம் பல உணவகங்கள் திட்டமிட்டு தங்களுடைய உண்மையான விற்பனையை மறைத்து, கணினியில் இருந்து பில்களை நீக்குவது உள்ளிட்ட வேலைகளையும் செய்துள்ளது கண்டறியப்பட்டது.
EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?
இது குறித்து நிதி அமைச்சகம் கடந்த திங்களன்று வெளியிட்ட அறிக்கையின் படி, சுமார் 1.77 லட்சம் உணவகங்களின் பரிவர்த்தனை தரவுகள், அதிநவீன AI-தொழில்நுட்பம் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இந்த தரவுகள் அந்த உணவகங்கள் வருமான வரி தாக்கல் செய்தபோது காட்டிய வருவாயுடன் ஒப்பிடப்பட்டன. இதில் பெருமளவிலான வருமானம் மறைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. பல உணவகங்கள் திட்டமிட்டு மறைத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
வாடகை வீட்டில் இனி இதுதான் சட்டம்! அட்வான்ஸ் முதல் பிரைவசி வரை.. தெரிஞ்சுக்க வேண்டிய அப்டேட்ஸ்!
இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 8, 2026 அன்று, நாடு முழுவதும் 22 மாநிலங்களில் உள்ள 46 நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 62 உணவகங்களில் வருமான வரித் துறையானது சோதனை நடத்தியது. இந்த ஆரம்பகட்ட ஆய்வில் மட்டும், சுமார் 408 கோடி ரூபாய் மதிப்புள்ள விற்பனை மறைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் இது ஒரு தொடக்கம்தான் என்றும், தொடர்ந்து விரிவான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து தாயகம் திரும்பும் பிளிப்கார்ட்! இந்தியாவில் IPO களமிறங்க மெகா திட்டம்!
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139(8A)-ன் கீழ் (Section 139(8A)), வரி செலுத்துவோர் தங்கள் தவறுதலாக தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளை புதுப்பித்துத் தாக்கல் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆக கண்டறியப்பட்ட அந்த 63,000 உணவகங்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த உணவகங்கள் மார்ச் 31, 2026க்குள் தங்கள் கணக்குகளை திருத்தி தாக்கல் செய்யுமாறு கோரப்பட்டுள்ளன. இந்த காலக்கெடுவிற்குள் கணக்குகளை புதுப்பித்து, நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தி விட்டால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தேவையற்ற நேரடி விசாரணைகளையும் அபராதங்களையும் தவிர்க்கலாம். அப்படி இல்லையேல் வருமான வரித்துறை கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications