ஒவ்வொரு மாதமும் மின்சார கட்டணத்தை பார்த்து பதறும் சாமானிய குடும்பங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி. சூரிய ஒளியே உங்கள் வீட்டின் மின்சாரமாக மாறப்போகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் ஏழை எளிய குடும்பங்களின் பொருளாதார சுமையை குறைப்பதற்காக அரசு இப்போது அதிரடியான இலவச சோலார் பேனல் திட்டத்தை அறிவித்துள்ளது.
இனி மின்சார பில் பற்றிய கவலையே வேண்டாம். உங்கள் வீட்டிலேயே சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்து, அதை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளும் இந்த வாய்ப்பு, உங்கள் மின் கட்டணத்தை முற்றிலும் பூஜ்யமாக்க உதவும். ஆனால் இந்த திட்டத்தில் சேர யாருக்கெல்லாம் தகுதி உண்டு? விண்ணப்பிப்பது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை? இந்த திட்டத்தின் முழு விவரங்களையும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நாடு முழுவதும் மின்சார கட்டணம் உயர்ந்து வருவது, ஒவ்வொரு குடும்பத்தின் பட்ஜெட்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் மின்சார கட்டணம் ஒரு சாதாரண செலவாக இல்லாமல், பலருக்கும் பெரும் கவலையாக மாறியுள்ளது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், பீகார் அரசாங்கம் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பீகார் அரசின் இந்த திட்டமானது பிபிஎல் (BPL) குடும்பங்களுக்காக ஒரு புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. அதன் மூலம், அவர்கள் தங்கள் வீடுகளில் இலவசமாக சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ள முடியும்.
EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?
இதன் பலனாக பகல் நேரங்களில் மின்விசிறிகள், விளக்குகள் மற்றும் சிறிய மின்னணு சாதனங்களை சூரிய ஒளியின் உதவியுடன் எளிதாக இயக்க முடியும். இது உங்கள் மின்சாரக் கட்டண சுமையை கணிசமாக குறைக்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ், பிபிஎல் அட்டைதாரர்கள் மற்றும் குடிர் ஜோதி (Kutir Jyoti) மின் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு, வீட்டின் மேற்கூரையில் இலவசமாக சோலார் பேனல்களை பொருத்தும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. குறைந்த வருமானம் கொண்ட அதிகப்படியான குடும்பங்கள் இந்த வசதியை பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். உள்ளூர் அளவில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த திட்டத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சோலார் சிஸ்டம் பொருத்தப்பட்ட பிறகு, வீட்டின் மின்சார தேவைகள் நேரடியாக சூரிய ஒளி மூலம் பூர்த்தி செய்யப்படும்.
UAN இல்லாமலே பிஎஃப் பேலன்ஸ் பார்க்கலாம்! இதோ அந்த சீக்ரெட் ட்ரிக்!
இது மின்சாரத்தின் தேவையை குறைக்கும். இதனால் ஒரு குடும்பத்தின் மாதாந்திர மின்சார செலவு பெருமளவு குறையும். இந்த திட்டம் பொருளாதார ரீதியாக சேமிப்பை தருவதோடு, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவும். காலக்கெடுவை எதிர்பார்க்காமல், முதல் கட்டத்திலேயே சோலார் யூனிட்களை பொருத்த, தகுதியுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஏடிஎம் கார்டுக்கு வீட்டிலிருந்தே விண்ணப்பிப்பது எப்படி?ஆன்லைன் முதல் ஆஃப்லைன் வரை முழு கைடு இதோ!
இந்தத் திட்டத்திற்கான விண்ணப்ப செயல்முறையை அரசு முற்றிலும் டிஜிட்டல்மயமாகவும் எளிமையாகவும் மாற்றியுள்ளது. இதற்காக கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து Suvidha App-ஐத் டவுன்லோட் செய்து கொள்ளவும். அதில் Kutir Jyoti Rooftop Solar Panel consent என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.அதில் உங்கள் மின்சார நுகர்வோர் எண்ணை உள்ளிட்டு, ஓடிபி மூலம் சரிபார்க்கவும். அடுத்ததாக உங்கள் பிபிஎல் அட்டை, ஆதார் அட்டை அல்லது பிற அடையாள சான்றுகள் மற்றும் முகவரி சான்றுகளை பதிவேற்றவும். கூடுதலாக உங்கள் வீட்டின் மேற்கூரையின் புகைப்படத்தை பதிவேற்றி, விண்ணப்ப படிவத்தில் பரப்பளவு தொடர்பான விவரங்களை நிரப்பவும்.
ஸ்மார்ட்போன் வசதி இல்லாதவர்கள், அருகிலுள்ள உதவி மையம் அல்லது வசுதா மையத்திற்கு (Vasudha Center) நேரில் சென்று இலவசமாக உதவி பெறலாம். இந்த ஒட்டுமொத்த செயல்முறையும் முற்றிலும் இலவசமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் அரசின் இந்த திட்டமானது நிச்சயம் ஏழை மக்களுக்கு மிகுந்த பயனுள்ள ஒரு திட்டமாகும். இந்த திட்டம் போன்று தமிழகத்திலும் வந்தால் நன்றாகத் தான் இருக்கும்.
பான் கார்டு கையில் இல்லையா? டிஜிட்டல்e-PAN கார்டை டவுன்லோட் செய்வது எப்படி?
இருப்பினும் தமிழக மக்கள் மத்திய அரசின் PM-Surya Ghar திட்டத்தின் கீழ் மானியம் பெற்று, சோலார் பேனல்களை உங்கள் வீட்டின் மேற்கூரையில் பொருத்திக் கொள்ளலாம்.. இதையும் ஆன்லைனிலேயே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications