மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு  எச்சரிக்கை?

மேற்கு ஆசியாவில் நிலவும் அசாதாரணமான போர் பதற்றங்கள், சர்வதேச பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை அசைத்து பார்க்க தொடங்கியுள்ளது. புவிசார் அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம், தொலைதூர விளைவுகளை போலத் தோன்றினாலும், இந்தியாவின் வர்த்தக துறையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயங்களை உள்ளடக்கியுள்ளது.

எரிசக்தி முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வரை, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் என சுமார் 15 முக்கிய துறைகள் இந்த நெருக்கடியின் நிழலில் சிக்கித் தவிக்கின்றன. சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஏற்படப்போகும் தடைகள், பணவீக்க அழுத்தம் மற்றும் இறக்குமதி செலவுகள் அதிகரிப்பு என இந்திய பொருளாதாரம் ஒரு சவாலான கால கட்டத்தை நோக்கி நகர்கிறது. வரும் காலங்களில் இந்த துறைகள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களையும், அதன் தீவிரத்தையும் பார்க்கலாம் வாருங்கள்.

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு  எச்சரிக்கை?

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 90% இறக்குமதியையே நம்பியுள்ளது. வளைகுடா பகுதியில் ஏற்படும் பதற்றம் கச்சா எண்ணெய் விநியோகத்தை பாதிக்கும் போது, அதன் விலை உலகளவில் உயர்கிறது. இது இந்தியாவிலும் எரிபொருள் விலையை உயர்த்த வழிவகுக்கும். போக்குவரத்து செலவுகள், லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் அதிகரிப்பதோடு, சங்கிலித் தொடராக மற்ற பொருட்களின் விலை அதிகரிப்பையும் தூண்டலாம்.

ஹார்முஸ் ஜலசந்தி போன்ற முக்கிய கடல்வழிப் பாதைகளில் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களால், கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீட்டு செலவுகள் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் லாப வரம்பு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பும், டாலருக்கு நிகராக வீழ்ச்சியடையும் அபாயமும் உள்ளது. இது இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் விலை இன்னும் அதிகரிக்க காரணமாக அமையலாம்.
தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?
குறிப்பாக ஈரான் மற்றும் ஈராக் நாடுகள் இந்திய பாசுமதி அரிசியின் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள். தற்போதைய சூழலால் சுமார் 2,00,000 டன் அரிசி மூட்டைகள் கப்பல்களிலேயே தேங்கி கிடக்கின்றன. இது நீண்ட காலம் நீடித்தால், உள்நாட்டில் அரிசி வரத்து அதிகரித்து, விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய விலை குறையலாம்.
ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையை பொறுத்த வரையில் துபாய் ஒரு முக்கிய வர்த்தக மையமாக இருப்பதால், வைரங்கள் மற்றும் தங்கம் இறக்குமதி பாதிப்படையும். இது சூரத் போன்ற வைர உற்பத்தி மையங்களின் செயல்பாட்டை முடக்கும். அதேசமயம் உள்நாட்டில் தங்கத்தின் விலை உயரக்கூடும்.
பங்குச் சந்தை ரிஸ்க் பயமா? லாபத்திற்கு கியாரண்டி தரும் Bonds - முதலீடு செய்வது எப்படி?
முக்கிய உற்பத்தி துறைகள்: பெயிண்ட், டயர் மற்றும் கெமிக்கல் நிறுவனங்கள், பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் என பலவும் கச்சா எண்ணெயை மூலப்பொருளாக கொண்டுள்ளன. ஆக கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது, அவர்களின் உற்பத்தி செலவை அதிகரித்து லாபத்தை பாதிக்கும்.

விவசாயம்: இந்தியா தனது சல்பர் உரத் தேவையில் 70%-ஐ வளைகுடா நாடுகளிலிருந்தே பெறுகிறது. ஆக விநியோகத்தில் தடை ஏற்பட்டால் உரம் விலை உயரும், இது அரசின் மானிய சுமையை அதிகரிக்கும். ஒன்று அரசு விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். இல்லையேல் இந்த சுமையை அரசே ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக உரத் தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இது மேலும் விலை அதிகரிப்பையும் தூண்டலாம்.
10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?
விமானம் மற்றும் சுற்றுலா: வான்வெளிப் பயண கட்டுப்பாடுகள் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை இன்னும் சிறிது காலத்திற்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள்: போர் சூழலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முன்னெச்சரிக்கையாக பணத்தை இந்தியாவுக்கு அனுப்புவது அதிகரிக்கலாம். ஆனால் இது குடும்ப செலவுகளுக்கு பயன்படாமல் சேமிப்பாகவே முடங்கக்கூடும் என்பதால் பொருளாதாரத்தில் பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தாது.
தினமும் ரூ.10 போதும்! டீ குடிக்கிற செலவுல லட்சாதிபதி ஆகலாம் – எதிர்காலத்திற்கான மைக்ரோ SIP மேஜிக்!
இந்த பிரச்சனையை சமாளிக்க, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பதிலாக ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க இந்தியா திட்டமிடலாம். இருப்பினும், இந்த நெருக்கடி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை பொறுத்தே இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மை அமையும். பதற்றம் விரைவாகத் தணிந்தால் பாதிப்புகள் குறைவாக இருக்கும், ஆனால் நீண்ட காலப் போர் பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+