முகேஷ் அம்பானியின் மனைவி, தொழிலதிபர், நன்கொடையாளர், கல்வியாளர் என பல முகங்களை கொண்ட நீதா அம்பானி இன்று தனது 60வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதே நாளில் இந்தியாவின் மிகப்பெரிய ஆடம்பர மாலான ஜியோ வேர்ல்ட் பிளாசா திறக்கப்படுவது நீதா அம்பானிக்கான கிஃப்ட் ஆகவே பார்க்கப்படுகிறது.
நீதா அம்பானி பல பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களுக்கு உரிமையாளராகவும், ஆசியாவிலேயே பணக்கார குடும்பத்தின் தலைவியாக உள்ளார். இவருடைய பர்சனல் வாழ்க்கை, ஆடம்பர வாழ்க்கை, தற்போது ரிலையன்ஸ் குழுமத்தின் இவரின் பதவி குறித்து டக்டகென ஒரு ரவுண்ட் பார்த்துவிடுவோம் வாங்க.

1985 ஆம் ஆண்டு இந்திய தொழிற்துறையை தலைகீழாக மாற்றிய திருபாய் அம்பானி-யின் மூத்த மகனான முகேஷ் அம்பானி உடன் 22 வயதில் காதலித்து இருவீட்டார் ஒப்புதல் உடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய காதல் கதை மிகவும் கியூட்டானது, இதிலும் முகேஷ் அம்பானி நீதா அம்பானியை ப்ரோபோஸ் செய்தது வேற லெவல் சம்பவம்.
முகேஷ் அம்பானி - நீதா அம்பானி சந்திப்பு குறித்து பல தகவல்கள் உள்ளது, இரு வீட்டாரும் நண்பர்கள், இரு வீட்டாரும் ஓரே தெருவில் வசித்தவர்கள், நீதா அம்பானி பரதநாட்டியம் ஆடிய போது அதில் கவரப்பட்ட முகேஷ் அம்பானி அவரிடம் பேச துவங்கினார் என பல விஷயங்கள் உள்ளது. ஆனால் இதில் உண்மை எதுவென உறுதியான தகவல் இல்லை.
நீதா அம்பானி ஒரு இண்டர்வியூவில் முகேஷ் அம்பானி எப்படி ப்ரோபோஸ் தெரிவித்தார் என கூறியது இன்றும் யூடியூப்-ல் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. மும்பையின் முக்கியமான சாலையில் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி காரில் சென்றுக்கொண்டு இருந்த போது, முகேஷ் அம்பானி சிக்னலில் நிறுத்திவிட்டு தான் காதலிப்பதாகவும், திருமணம் செய்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளிக்காமல் மௌனமாக இருந்த நீதாவுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் நீ பதில் கொடுக்கும் வரையில் கார் இந்த சிக்னல்-ஐ விட்டு நகராது என தெரிவித்துள்ளார் முகேஷ் அம்பானி. டிராபிக் ஜம் ஆன உடன் நீதா அம்பானி சிரித்துக்கொண்டே ஒப்புக்கொண்டார் என இண்டர்வியூவில் தெரிவித்தார்.
நீதா அம்பானி திருமணத்திற்கு முன்பு நடுத்தர குடும்பத்தில் ஒரு எளிமையான வாழ்க்கையை தான் வாழ்ந்துக் கொண்டு இருந்தார். நீதா தலால் ஒரு நடுத்தர குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர், நீதா தலால்-க்கு ஒரு சகோதரியும் உள்ளனர். நீதா அம்பானியின் பெற்றோர் பெயர் ரவீந்திரபாய் தலால் மற்றும் பூர்ணிமா தலால், நீதா அம்பானியின் சகோதரி பெயர் மம்தா தலால். இவரும் பள்ளி ஆசிரியை ஆவார்.
ரவீந்திரபாய் தலால் அப்போதே பில்லியனர் குமார் மங்கலம் பிர்லா தலைமையிலான ஆதித்ய பிர்லா குழுமத்தில் மூத்த நிர்வாகியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதா அம்பானி 6 வயதில் இருந்தே பரதநாட்டியத்தை கற்கத் தொடங்கினார் இந்த ஆர்வத்தில் தான் தற்போது NMACC என்ற ஆடம்பர கலை அரங்கத்தை கட்டியுள்ளார்.
கல்லூரி படிப்பை முடித்த உடன் நீதா அம்பானி நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு சிறிய பள்ளியில் நடன ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார். இதன் பின்பு சில வருடம் மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் நடன ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
திருமணத்திற்குப் பிறகும் சில ஆண்டு காலம் செயின்ட் ஃப்ளவர் நர்சரி என்ற நிறுவனத்தில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்ததாக நீதா அம்பானி மற்றொரு பேட்டியில் கூறினார்.
நீதா அம்பானியின் தங்கை மம்தா தலால்-ஐ நிறைய பேருக்கு தெரியாது. நீதா அம்பானியை விட மம்தா நான்கு வயது இளையவர், இன்றும் மம்தா தலால் ஒரு ஆசிரியராக திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் பணியாற்றி வருவது மட்டும் அல்லாமல் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
நீதா அம்பானியின் வாழ்க்கை முகேஷ் அம்பானி உடனான திருமணத்திற்கு பின்பு தலைகீழாக மாறியுள்ளது. நீதா அம்பானி தினமும் குடிக்கும் டீ கப் விலை ஒன்று 3 லட்சமாம், இது ஜப்பான் நாட்டின் மிகவும் பழமையான கிராக்கரி நிறுவனமான நோரிடெக் (Noritek) தயாரித்த டீ கப்.
இதேபோல் பிங்க் வைரம் கொண்ட ஐபோன், 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய புடவை, 100க்கும் அதிகமாக ஆடம்பர கார்கள், பல கோடி மதிப்பிலான புடவைகள், 400, 600 கோடி ரூபாய்க்கு நகைகள், 15000 கோடிக்கு வீடு, சமையல்காரர்-க்கு மாதம் 2 லட்சம் வரையில் சம்பளம் என முகேஷ் அம்பானி குடும்பம் ஆடம்பரத்திற்கும், ராஜ வாழ்க்கைக்கும் குறைவில்லாமல் தங்களுடைய 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆன்டிலியா வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
நீதா அம்பானி சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நிர்வாக பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டாலும், ரிலையன்ஸ் பவுண்டேஷன் முதல் கிரிக்கெட் அணி, புட்பால் அணிகள், திருபாய் அம்பானி பள்ளி, NMACC கலை அரங்கங்களில் முக்கிய பதவியிலும் பொறுப்பிலும் உள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications