ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் பதற்றமானது கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ள இந்த நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை, உங்கள் கைவசம் உள்ள தங்க நகைகள் இப்போது வெறும் ஆபரணங்கள் மட்டுமல்ல. அவை உங்கள் அவசர காலத்தின் மிகப்பெரிய பொருளாதார பாதுகாப்பு. ஆனால் தங்கம் விலை ஏறிவிட்டது என்பதற்காக எல்லா வங்கிகளும் ஒரே மாதிரியான கடன் தொகையை வழங்குவதில்லை. 2026-ல் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கொண்டு வந்துள்ள புதிய விதிகள், நீங்கள் வாங்கும் கடன் தொகைக்கு ஏற்ப உங்கள் நகையின் மதிப்பை தீர்மானிக்கின்றன.
ஆக தங்கத்தை அடகு வைக்கும் முன், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அந்த விதிமுறைகள் என்னென்ன? கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

இன்றும் பல நடுத்தர குடும்பங்களில் அவசரம் என்றால் முதலில் கைகொடுப்பது தங்கம் தான். ஆனால் அந்த தங்கம் உங்களிடம் எந்த வடிவத்தில் இருக்கிறது என்பதும் இனி கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது உங்கள் வசம் உள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க நாணயங்களை வைத்து கடன் பெற முடியும். ஆனால் தங்கக் கட்டிகள் மற்றும் பிஸ்கட்டுகள் அல்லது கோல்ட் இடிஎஃப் போன்றவற்றை அடமானம் வைத்து கடன் பெற முடியாது.
ஆர்பிஐ தங்கக் கட்டிகள் போன்ற பிரைமரி கோல்டு மீது கடன் வழங்குவதை கட்டுப்படுத்தி உள்ளது. தங்கம் என்பது ஒரு உற்பத்தி சாராத மற்றும் ஊக வணிகத்திற்கு உட்பட்ட சொத்து என்பதால், பொருளாதார பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதை எஸ்பிஐ வங்கியும் உறுதி செய்துள்ளது. 24 கேரட் தங்க கட்டிகள் மற்றும் பிஸ்கட்டுகளுக்கு எதிராக கடன் வழங்காது என தெரிவித்துள்ளது.
முதலீட்டாளர்களே உஷார்! இஸ்ரேல்-ஈரான் போர்: உங்கள் சேமிப்பை பாதுகாப்பா வச்சுக்கோங்க?
மேலும் கடன் வழங்குநர்கள் பிரைமரி தங்கம் அல்லது வெள்ளி, அல்லது அவற்றின் அடிப்படையில் இயங்கும் நிதிச் சொத்துகளான கோல்டு இடிஎஃப் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகள் மீதும் முன்பணமோ அல்லது கடனோ வழங்க கூடாது என்றும் கூறியுள்ளது. இருப்பினும் கடன் வழங்குநர்கள், வாடிக்கையாளர்களின் குறுகிய கால நிதி தேவைகளை பூர்த்தி செய்ய தங்க ஆபரணங்கள் மற்றும் நாணயங்கள் மீது கடன் வழங்க அனுமதித்துள்ளது.
ஒரு தனிநபர் அதிகபட்சமாக 1 கிலோகிராம் ( 125 சவரன்) வரையிலான தங்க ஆபரணங்களை அடகு வைத்துக் கொள்ளலாம். பிப்ரவரி 23 நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் 14,750 ரூபாயாக ஆக இருக்கும்போது, 5 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட கடன்களுக்கு (75% LTV அடிப்படையில்) ஒரு கிராமுக்கு 11,000 ரூபாய் வரை கடன் கிடைக்கும். அதன்படி பார்த்தால் தற்போதைய சந்தை விலையில் ஒரு நபர் சுமார் 1.37 கோடி ரூபாய் வரை அதிகபட்சமாக நகைக்கடன் பெற முடியும். இருப்பினும் சில வங்கிகள் அதிகபட்ச கடன் வரம்பை நிர்ணயம் செய்துள்ளன. உதாரணத்திற்கு எஸ்பிஐ 50 லட்சம் ரூபாய் வரை மட்டுமே கடன் வழங்குகிறது.
யுத்த பூமியாகும் ஈரான்: கச்சா எண்ணெய் விலையால் இந்தியாவிற்கு ஆபத்தா?
தங்க நாணயங்களுக்கு எதிராகவும் கடன் பெறலாம். எனினும் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதிகபட்சமாக தங்க நாணயங்களின் மொத்த எடை 50 கிராமுக்கு மேல் இருக்க கூடாது. தற்போதைய சந்தை நிலவரப்படி, அதன் மதிப்பு சுமார் 5.25 லட்சம் ரூபாயாகும்.
தங்கத்தின் மதிப்பை நிர்ணயம் செய்வதற்கும், ஆர்பிஐ சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வங்கிகளும் தங்கத்தின் விலையை தீர்மானிக்க 2 அம்சங்களை பின்பற்றி, அதில் எது குறைவோ அதையே எடுத்து கொள்கின்றன.
தங்கம் Vs வெள்ளி:ETF ரேஸில் ஜெயிப்பது யாரு? 2026-ல் உங்கள் பணத்தை எதில் போடலாம்?
1. கடந்த 30 நாட்களின் சராசரி முடிவு விலை.
2. முந்தைய நாளின் முடிவு விலை. மேற்கண்ட இரு விலைகள் IBJA அல்லது செபியால் அங்கீகரிக்கப்பட்ட சந்தை மூலம் வெளியிடப்பட்டதாக இருக்க வேண்டும்.
உங்கள் நகையின் குறிப்பிட்ட தரத்திற்கு விலை இல்லை என்றால், அதற்கு மிக நெருக்கமான விலையை வைத்து மதிப்பீடு செய்யப்படும். அப்படி மதிப்பீடு செய்யப்படும் போது நகையில் உள்ள தங்கத்தின் உண்மையான மதிப்பு மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். அதில் பதிக்கப்பட்டுள்ள கற்கள், ரத்தினங்கள் அல்லது இதர அலங்காரங்களுக்கு எந்தவித மதிப்பும் வழங்கப்படாது.
2026 ம் ஆண்டு விதிகளின் படி, நீங்கள் வாங்கும் கடன் தொகைக்கு ஏற்ப அதிகபட்ச கடன் அளவு மாறுபடும். உதாரணத்திற்கு 2.5 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு, நகையின் மதிப்பில் 85% வரை கடன் பெறலாம். இதே 2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையில், நகையின் மதிப்பில் 80% மட்டுமே கடன் பெற முடியும். 5 லட்ச ரூபாய்க்கு மேல் நகை கடன் பெற்றால் நகையின் மதிப்பில் 75% மட்டுமே கடன் பெற முடியும்.
பங்குச் சந்தை ரிஸ்க் பயமா? லாபத்திற்கு கியாரண்டி தரும் Bonds - முதலீடு செய்வது எப்படி?
ஒருவர் தங்கத்தை அடகு வைத்த பிறகு, அதன் பாதுகாப்பிற்கு கடனளிப்பவரே முழு பொறுப்பாகும். ஒரு வேளை கடன் வாங்கிய காலத்தில் நகைக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கான செலவை வங்கியே ஏற்க வேண்டும். உங்களுடைய நகை காணாமல் போனாலோ அல்லது ஆய்வின் போது எடையிலோ, தரத்திலோ குறைபாடு கண்டறியப்பட்டாலும், வங்கி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வாடிக்கையாளருக்கு சாதகமான பல அறிவிப்புகளை கொடுத்துள்ளது.
முக்கியமாக கடனை செலுத்திய பிறகும், வங்கி உங்கள் நகையை குறிப்பிட்ட காலத்திற்குள் தர வேண்டும். அப்படியில்லாமல் இழுக்கடித்தால் ஒவ்வொரு நாள் தாமதத்திற்கும் வங்கி வாடிக்கையாளருக்கு 5,000 ரூபாய் அபராதம் வழங்க வேண்டும். ஒரு வேளை தவிர்க்க முடியாத காரணங்கள் இருப்பின் தாமத்திற்கு முறையான காரணம் இருந்தால் அதை வங்கி வாடிக்கையாளருக்கு தெரிவிக்க வேண்டும்.
ஒரு வேளை வாடிக்கையாளர் கடனை திருப்பி செலுத்திவிட்டு, நகையை பெற்று கொள்ளாமல் இருந்தால், வங்கி அமைதியாக இருந்து விடக் கூடாது. வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள முகவரிக்கு கடிதம் மூலமாகவோ, மெயில் அல்லது எஸ் எம் எஸ் மூலம் கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications