புதிய நிதியாண்டு தொடங்கவிருக்கும் இந்த நேரத்தில், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஏப்ரல் 1-ம் தேதி என்பது மிக முக்கியமான நாள். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட சற்று அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் வருமானம், முதலீடுகள், வரி சேமிப்பு மற்றும் சேமிப்பு கணக்குகள் என அனைத்திலும் அதிரடி மாற்றங்களை கொண்டு வரவிருக்கிறது புதிய வரி விதிகள்.
இந்த மாற்றங்கள் ஒருவர் கையில் இருக்கும் பணத்தை சேமிக்க உதவுமா அல்லது வரிச் சுமையை அதிகரிக்க போகிறதா? இந்த சந்தேகம் உங்கள் மனதிலும் இருக்கிறதா? இதற்கான பதில் தான் இந்த 7 முக்கிய மாற்றங்கள். அரசு அறிவித்துள்ள இந்த புதிய விதிமுறைகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வது, உங்கள் பணத்தை ஸ்மார்ட்டாக மேனேஜ் செய்ய உதவும். உங்கள் நிதி எதிர்காலத்தை திட்டமிட உதவும் அந்த 7 மாற்றங்கள் என்னவென்று விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.

1.புதிய வருமான வரிச் சட்டம், 2025
நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்கு பதிலாக, புதிய வருமான வரிச் சட்டம், 2025 கொண்டு வரப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 1, 2026 முதல் (அதாவது 2026-27 நிதியாண்டு முதல்) அமலுக்கு வருகிறது. இதில் சட்டத்தில் மாற்றங்கள் இருந்தாலும், வருமான வரி அடுக்குகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
1961 முதல் இந்தியப் பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் தொழிலாளர் சூழலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்களை கருத்தில் கொண்டு இந்த சட்டம் நவீனப் படுத்தப்பட்டுள்ளது.
UAN இல்லாமலே பிஎஃப் பேலன்ஸ் பார்க்கலாம்! இதோ அந்த சீக்ரெட் ட்ரிக்!
பழைய கட்டமைப்பில் இந்திய பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயம் மற்றும் உற்பத்தி சார்ந்ததாக இருந்தது. ஆனால் இன்று, சேவைத் துறை, மின்-வணிகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது. கிரிப்டோகரன்சி, ஆன்லைன் வர்த்தகம் மற்றும் உலகளாவிய வருமானம் ஈட்டும் முறைகள் போன்றவை 1961-இல் கற்பனை செய்திருக்க முடியாதவை. புதிய சட்டம் இவற்றிற்கு தெளிவான சட்ட அடிப்படைகளை வழங்குகிறது.
2.வருமான வரி தாக்கல் (ITR) காலக்கெடு மாற்றம்
பட்ஜெட் 2026-ல் வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ITR-3 மற்றும் ITR-4 (தணிக்கை செய்ய தேவையில்லாதவர்களுக்கு) இவர்களுக்கான காலக்கெடு ஜூலை 31-லிருந்து ஆகஸ்ட் 31-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றமானது 2025-26 நிதியாண்டு முதல் பொருந்தும்.
இருப்பினும் ITR-1 மற்றும் ITR-2 இவர்களுக்கான காலக்கெடுவில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் வழக்கம்போல ஜூலை 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும். தணிக்கை தேவைப்படும் நபர்களுக்கான காலக்கெடு மாறாமல் அக்டோபர் 31 என்றே தொடர்கிறது.
3. திருத்தப்பட்ட வருமான வரித் தாக்கல் (Revised ITR)
நிறைய MFs-ல முதலீடு செய்தால் லாபம் அதிகமா கிடைக்குமா? இந்த தவறை ஒருபோதும் செய்யாதீங்க?
ஏற்கனவே தாக்கல் செய்த கணக்கு தாக்கலில் திருத்தங்கள் செய்ய விரும்பினால், அதற்கான காலக்கெடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புதிய காலக்கெடு டிசம்பர் 31-லிருந்து மார்ச் 31 (நிதியாண்டு முடியும் வரை) என நீட்டிக்கப்பட்டுள்ளது இருப்பினும் டிசம்பர் 31-க்கு பிறகு திருத்தப்பட்ட வருமான வரியை தாக்கல் செய்பவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
4. டிசிஎஸ் (TCS - Tax Collected at Source)
பழைய முறையில் இருந்த தேவையற்ற குழப்பத்தை தவிர்க்க, பெரும்பாலான பொருட்களுக்கு 2% என்ற சீரான விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வருகிறது. மதுபான விற்பனைக்கு 1%ல் இருந்து 2% அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே பீடி சுற்ற பயன்படும் டெண்டு இலைகள் (Tendu leaves) விற்பனை 5%ல் இருந்து 2% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்கிராப் விற்பனைக்கு 1%-ல் இருந்து 2% ஆகவும், கனிமங்களுக்கும் 1%-ல் இருந்து 2% ஆகவும், வெளிநாட்டு பணப்பரிமாற்றம் தொடர்பான வெளிநாட்டு சுற்றுலா தொகுப்புகளுக்கு முன்னதாக 5% மற்றும் 20% என்ற விகிதத்தில் இருந்தது. ஆனால் இனி அனைத்து தொகைகளுக்கும் 2% என சீராக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் பயனாளிகளுக்கு மிகப்பெரிய நிவாரணமாகும். கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்கு வெளி நாடுகளுக்கு பணம் அனுப்பும்போது 5%ல் இருந்து 2% ஆகவும் டிசிஎஸ் குறைக்கப்பட்டுள்ளது.
EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?
5.எஸ்டிடி அதிகரிப்பு
பங்குச் சந்தையில், குறிப்பாக பியூச்சர்ஸ் மற்றும் ஆப்சன்ஸ் (F&O) வர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு இந்த STT (Securities Transaction Tax) உயர்வு ஒரு பெரிய மாற்றமாகும். இது பியூச்சர் வர்த்தகத்திற்கு 0.02%ள் இருந்து 0.05% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆப்ஷன்ஸ் பிரீமியம் 0.1%ள் இருந்து 0.15% ஆக அதிகரித்துள்ளது. ஆப்ஷன்ஸ் எக்சர்சைஸ் 0.125%ள் இருந்து, 0.15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
6. பங்குகள் திரும்ப பெறுதல் வரி மாற்றம்
இதுவரை பங்குகளை திரும்பப் பெறுவதன் மூலம் கிடைக்கும் வருமானம், வருமான ஈவுத்தொகையாக கருதப்பட்டு, வரி செலுத்துவோரின் தனிப்பட்ட வருமான வரி அடுக்கு விகிதத்தில் வரி விதிக்கப்பட்டது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு பெரும் சுமையாக இருந்தது. ஆனால் ஏப்ரல் 1, 2026 முதல், இது மூலதன ஆதாய வரியாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது பங்குகளை திரும்ப பெறும் விலையில், நீங்கள் வாங்கிய விலையை கழித்த பிறகு கிடைக்கும் லாபத்திற்கு மட்டுமே வரி விதிக்கப்படும். இது சிறு முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் நிவாரணம் அளிக்கும். இனி உங்கள் லாபத்திற்கு மட்டுமே வரி என்பதால் வரி சுமை குறையும்.
இருப்பினும் நிறுவன உரிமையாளர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும், நிறுவன உரிமையாளர்களுக்கு 22%-ம், மற்ற வகை உரிமையாளர்களுக்கு 30%-ம் என்ற அடிப்படையில் வரி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது உரிமையாளர்கள் வரி ஏய்ப்பை தடுக்க கொண்டு வரப்பட்ட நடவடிக்கையாகும்.
தங்கம் Vs வெள்ளி:ETF ரேஸில் ஜெயிப்பது யாரு? 2026-ல் உங்கள் பணத்தை எதில் போடலாம்?
7. டிவிடெண்ட் மீதான வட்டி செலவு கழிக்கப்படாது
முன்பு பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மூலம் டிவிடெண்ட் பெறுவதற்கு நீங்கள் ஏதேனும் கடன் பெற்று, அதற்கு வட்டி செலுத்தியிருந்தால், அந்த வட்டி செலவை டிவிடெண்டில் இருந்து கழித்துக் கொள்ள அனுமதி இருந்தது (அதிகபட்சம் 20% வரை).
ஏப்ரல் 1, 2026 முதல் இந்த சலுகையானது நீக்கப்பட்டுள்ளது. இனி, நீங்கள் பெறும் டிவிடெண்ட் தொகைக்கு எந்த விதமான வட்டி செலவையும் கழிக்க முடியாது. நீங்கள் பெறும் டிவிடெண்ட் முழுவதும் உங்கள் வருமானமாகவே கருதப்பட்டு, உங்கள் வருமான வரி அடுக்குக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். மார்ச் 31, 2026 வரையில் ஒரு முதலீட்டாளர், கடன் வாங்கி பங்குகளில் முதலீடு செய்து, அதன் மூலம் டிவிடெண்ட் வருமானம் ஈட்டினால், அந்த முதலீட்டாளர் செலுத்திய வட்டிக்கு வருமான வரிச் சட்டத்தில் பிரிவு 57(i)-இன் கீழ் சலுகை வழங்கப்பட்டது. ஆனால் இனி அந்த சலுகை கிடையாது.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications