தங்க நகைக் கடன் வாங்குவது எளிதானதா?

Posted By:
Subscribe to GoodReturns Tamil

தங்க நகைக் கடன் வாங்குவது எளிதானதா?
சென்னை: நாம் வாங்கும் கடன்களில் மிகவும் எளிதானது தங்க நகைக் கடன்தான். ஒரு சில ஆவணங்களுடன் உடனடியாக கடன் தொகை கிடைத்துவிடும்!

தங்க நகைக் கடன்களை பல வங்கிகள் வழங்கினாலும் இதற்கென்றே முத்தூட், மணப்புரம் போன்ற பிரத்யேக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

தனிநபர் கடனிலிருந்து தங்கநகைக் கடன் ச்ற்றே வேறுபட்டது.. தனி நபர் கடன் என்பது சொத்து அல்லது ஊதியம் சார்ந்தது...தங்க நகைக் கடனோ நகைகளை அடமானம் வைத்து தொகையைப் பெறுவதாகும்.

யார் தங்க நகை கடன் பெறலாம்? என்ன ஆவணங்கள் தேவை?

தங்கம் அல்லது நகைகளை வைத்திருக்கும் யாரும் தங்க நகைக் கடன் பெறலாம். இதில் முக்கியமானது, உங்களது தங்க நகையின் மதிப்பு முதலில ஆய்வு செய்யப்படும். பின்னர் அதில் இருக்கக் கூடிய ஸ்டோன்ஸ் போன்றவற்றின் எடையைக் குறைத்துவிட்டு நகை மதிப்பீடு செய்யப்படும். பொதுவாக இருப்பிட சான்றிதழ் அல்லது அடையாள சான்றிதழ்தான் இதற்கு தேவை

என்ன வட்டி விதிக்கப்படுகிறது?

பொதுவாக தங்க நகைக் கடனுக்கு 12% முதல் 24% வட்டி விதிக்கப்படுகிறது. சில நிறுவனங்கள் அடிப்படை வட்டி வகிதமாக 12% நிர்ணயித்திருக்கின்றன.

அவசர தேவைகளுக்காகவே நகைக் கடன்கள் உதவுகின்றன. இது ஓராண்டுக்குப் பிறகும் நீடிக்கலாம். தங்க நகைக் கடன்களுக்கான வழிகாட்டுதல்களின்படியே உங்களுக்கு தொகை வழங்கப்படும். அதாவது உங்கள் நகைகளின் மதிப்பு ரூ1 லட்சமாக இருக்குமெனில் உங்களுக்கு ரூ60 ஆயிரம் மட்டுமே கிடைக்கும்.

இந்தக் கடன் ஒரு மாதம் முதல் ஒரு ஆண்டுகாலம் வரை என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.

நகைகள் பாதுகாப்பாக இருக்குமா?

பெரும்பாலான வங்கிகள் பொதுவாகவே நகைகள் சேதமடையாமல் இருக்கவே கவனம் எடுக்கின்றன. இருந்தாலும் இப்படி அடமானம் வைக்கப்படுவது கொஞ்சம் ரிஸ்க்கும் கூட.

தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவது எளிதானது..சில நிமிடங்களில் தொகை நமக்குக் கிடைத்துவிடும். மிகவும் அவசரமான சூழலில் மட்டுமே இப்படி நகைகளை அடகு வைக்கலாம்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Read more about: gold, கடன்
English summary

How to take a gold loan? | தங்க நகைக் கடன் வாங்குவது எளிதானதா?

Gold loans are extremely easy to avail with minimal documentation and speedy approvals. You can avail of gold loans from specialised gold loan finance companies like Muthoot Finance and Manappuram Finance. Besides, a host of other banks also provide loans against gold as a collateral.
Story first published: Tuesday, February 5, 2013, 12:01 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns