இந்தியாவில் அதிகரித்து வரும் தங்கம் இறக்குமதி

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் தங்கம் இறக்குமதி அதிகரிப்பு
மும்பை: இந்தியாவின் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்து வரும் நிலையில் விற்பனை விலை குறையாமலேயே இருந்து வருகிறது.

 

நாட்டின் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியான இறக்குமதி பொருள் தங்கம்தான். 1980களில் 65 டன்னாக இருந்த இறக்குமதி தங்கத்தின் அளவு இப்பொழுது 500 டன்னைத் தாண்டிவிட்டது.

1990-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தங்கத்தின் தேவையோ ஆண்டுக்கு 15% அதிகரித்தது. தங்கத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்வதால் இறக்குமதி அளவும் அதிகரிக்கிறது. சிறிய நகைக் கடைகள் உருக்குலைந்து போய் நகை மாளிகைகள் ஆக்கிரமிக்கத் தொடங்கின. இந்தியர்களிடம் தற்போது, 50.35 லட்சம் கோடி மதிப்புள்ள 18 ஆயிரம் டன் தங்க நகைகள் உள்ளன.

இந்தியாவிற்கான தங்கத்தின் தேவை 92% இறக்குமதி மூலமே சரிசெய்யப்படுகிறது. உலக அளவில் இந்தியாவில் அதிக அளவு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. தங்கம் இறக்குமதியில் 2-வது இடத்தில் சீனா இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Unseating gold | இந்தியாவின் தங்கம் இறக்குமதி அதிகரிப்பு

The Reserve Bank of India (RBI) has reasons to be concerned over large-scale gold imports.
Story first published: Tuesday, November 27, 2012, 11:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?