ஆஹா, தங்கம் விலை குறையப் போகிறதா?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஹா, தங்கம் விலை குறையப் போகிறதா?
சென்னை: உற்பத்திப் பொருட்களை ஆய்வு செய்வதில் முன்னணியில் இருக்கும் சிஎம்பி குழு ஒரு புதிய ஆனந்த செய்தியை கடந்த செவ்வாய் அன்று தெரிவித்திருக்கிறது. அந்த செய்தி என்னவென்றால் இந்த ஆண்டுக்குள் தங்கத்தின் விலை குறைந்துவிடும் என்பதாகும்.

 

(5 top gold ETFs that investors could buy)

ஏனெனில் உலகத்தின் மிக முக்கியமான வங்கிகளான ஹெச்.எஸ்.பி.சி., கோல்டுமேன் மற்றும் பார்க்லேஸ் போன்றவை கடந்த 30 நாட்களாக தங்கத்தின் மீது முதலீடு செய்வதைக் கணிசமான அளவில் குறைத்திருக்கின்றன. அமெரிக்காவின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக இந்த நடவடிக்கையை இந்த வங்கிகள் எடுத்திருப்பதாக சிஎம்பி குழு தெரிவித்திருக்கிறது.

கடந்த 2000மாவது ஆண்டில் 280 அமெரிக்க டாலராக இருந்த 28 கிராம் தங்கம் தற்போது 1598 அமெரிக்க டாலருக்கு விற்கப்படுகிறது. அந்த அளவிற்கு தங்கத்தின் விலை கடந்த 13 ஆண்டிற்குள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து இருக்கிறது.

இந்த நிலையில் 12 ஆண்டுகளாக கொடிகட்டிப் பறந்து வந்த தங்கத்தின் விலையில் இந்த ஆண்டு சரிவு ஏற்படும் என்று தெரிகிறது. ஏனெனில் லேமன் பிரதர்ஸ் என்ற நிதி நிறுவனம் வீழ்ந்த பிறகு உலகின் பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர பல நாடுகள் ஒருங்கிணைந்து பல நல்ல முயற்சிகளை எடுத்து வருகின்றன.

கடந்த 6 ஆண்டுகளாக பங்கு வர்த்தகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளிலும் பெரும் சரிவு ஏற்பட்டது. அதனால் தங்கத்தின் விலை வானளவுக்கு உயர்ந்தது. ஆனால் தற்போது உலகத்தின் பொருளாதார நிலைமை மாறி வருகிறது. அதாவது பல நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தங்கள் நாடுகளை மீட்டெடுக்க முயன்று வருகின்றன.

ஏன் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது?

மூன்று காரணங்களை இங்கு குறிப்பிடலாம்.

1. உலகப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சி தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

2. தங்கத்தில் முதலீடு செய்வதிலிருந்து பல நாடுகள் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்கிறது.

3. அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தனது குவாண்டிடேட்டிவ் ஈசிங் ப்ரோக்ராமை வாபஸ் பெற இருக்கிறது.

அதனால் தங்கத்தின் விலை கணிசமான அளவிற்கு குறையும் என்று எதிர்பார்க்கலாம். இனி தங்கம் மீது முதலீடு செய்வதிலிருந்து தள்ளி இருப்பது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Is gold likely to break a 12-year winning streak? | ஆஹா, தங்கம் விலை குறையப் போகிறதா?

The CMP Group, a leading commodities research group in a note on Tuesday said that the average price of gold is expected to fall in 2013 as fading fears of catastrophic market events prompt investors to scale back bullion purchases.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X