வங்கிகளின் தங்கம் இறக்குமதிக்கு ரிசர்வ் வங்கி கட்டுபாடு

Posted By:
Subscribe to GoodReturns Tamil

வங்கிகளின் தங்கம் இறக்குமதிக்கு ரிசர்வ் வங்கி கட்டுபாடு
நெல்லை: வங்கிகள் தங்கம் இறக்குமதி செய்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.

தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்வதால் அண்ணிய செலாவணி இழப்பு ஏற்பட்டு நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.இதை கட்டுபடுத்தவே ரிசர்வ் வங்கி கட்டுபாடுகளை விதித்துள்ளது.

2013 ஏப்ரல மாதத்தில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி 138 சதவீதம் அதிகரித்து ரூ.41100 கோடியாக உள்ளது. இதுகடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் ரூ.16988 கோடியாக இருநதது. தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்ததால் ஏப்ரலில் வர்த்தக பற்றாக்குறை ரூ.97544 கோடியாக உயர்ந்தது.

பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்

வர்த்தகபற்றாக்குறை அதிகமாவதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. இது நாட்டின் பொருளாதாரத்திறகு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் இடைப்பட்ட காலாண்டில் நடப்பு கணக்கு பறறாக்குறை மிக அதிகமாக 6.7 சதவீதமாக இருந்தது.எனவே ரிசர்வ் வங்கி தங்கம் இறக்குமதிக்கு கட்டுபாடுகளை விதித்தித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியி்ட்டுள்ள அறிக்கையில் தங்க நகைகள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்பவர்களின் முக்கியமான தேவைகளுக்கு மட்டும் வங்ககிகள் மூலம் மொத்தமாக தங்கம் இறக்குமதி செய்து கொள்ளலாம். இதை சரக்கு அனுப்பும் முறைப்படி இறக்குமதி செய்ய வேண்டும். நியமிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் ஏஜென்சிகள் மூலம் மட்டும் கடன் அடிப்படையில் தங்கத்தை இறக்குமதி செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Read more about: gold, rbi, தங்க நகை
English summary

RBI puts restrictions on gold imports by banks | வங்கிகளின் தங்கம் இறக்குமதிக்கு ரிசர்வ் வங்கி கட்டுபாடு

With gold imports putting pressure on the current account deficit, the Reserve Bank imposed restrictions on import of the yellow metal by banks.
Story first published: Tuesday, May 14, 2013, 9:37 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns