கடந்த ஓரு ஆண்டில் 10% வீழ்ச்சியடைந்த கோல்ட் இ.டி.எஃப்கள்

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

சென்னை: கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் தங்க விலையை கண்காணிக்கின்றது. கடந்த சில வாரங்களில் தங்கத்தின் விலை மிகுதியாக சரிந்ததால் வர்த்தக பரிமாற்று சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஓர் ஆண்டில் தங்க சந்தையில் 10-15 சதவீதம் சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் வீழ்ச்சியை இங்கு பகிரலாம்.

எச்.டி.எப்சி.கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்

எச்டிஎப்சி கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் கடந்த ஒரு ஆண்டில் -14 சதவீதம் வருமானத்தை கொடுத்துள்ளது. இது பெருமளவில் தங்கம் விலையின் வீழ்ச்சியை காட்டுகின்றது. எச்டிஎப்சி கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் ஒரு வெளிபடையான நிறைவு பெற்ற திட்டமாகும். இது தங்கத்தின் விலையை வைத்து வருமானம் ஈட்டி வருகின்றது என்பதால் இதன்மூலம் எந்த தவறும் ஏற்பட வாய்ப்பில்லை.

பிர்லா சன் லைப் கோல்ட் இ.டி.எஃப்

பிர்லா சன் லைப் கோல்ட் இ.டி.எஃப் நிதி கடந்த ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 13 சதவீதம் எதிர்மறை கொள்முதலை ஈட்டியுள்ளது. எச்டிஎப்சி கோல்டு எக்ஸ்சேஞ்ச் போன்று பிர்லா சன் லைப் கோல்ட் இ.டி.எஃப் நிதியும் தங்கத்தின் விலையை வைத்து வருமானத்தை ஈட்டி வருகின்றது.

ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்

தற்பொழுது ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் தங்க சந்தையில் 15 சதவிகிதம் எதிர்மறை கொள்முதலை இந்த வருடம் ஈட்டியுள்ளது . இது ஒரு திறந்த பரிமாற்றம் நிதி வர்த்தகமாக இருக்கும் காரணத்தால் செலவுகளை முன்பே கணக்கிட்டு அல்பிம்எ நிர்ணயம் செய்யும் உள்நாட்டு தங்கத்தின் விலையை கணக்கிட்டு வருமானத்தை ஈட்ட முனைகின்றது.

ஐ.டி.பி.ஐ கோல்ட் இ.டி.எஃப் நிதி

ஐ.டி.பி.ஐ என்பது ஒரு திறந்த வெளிப்படையான நிறைவு பெற்ற தங்க பங்கு சந்தை வர்த்தக நிதி. இது உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலையை கண்காணித்து வியாபாரம் செய்கின்றது. இவ்வாண்டு இத்திட்டம் 14 சதவிகிதம் நஷ்டத்தைக் காட்டியுள்ளது.

ஆக்சிஸ் கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்

ஆக்சிஸ் கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் அதன் மற்ற சக நிதி திட்டங்களை போன்று கடந்த ஒரு ஆண்டில் 14 சதவீதம் வீழ்ச்சியை அடைந்துள்ளது. மீண்டும் கடந்த சில வாரங்களில் தங்க விலை வீழ்ச்சியை பெரும்பான்மையாக இத்திட்டம் சந்தித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gold, etf, தங்கம்
English summary

5 gold ETFs that have dropped 10% in last 1 year | கடந்த ஓரு ஆண்டில் 10% வீழ்ச்சியடைந்த கோல்ட் இ.டி.எஃப்கள்

Gold Exchange Traded Funds, track gold prices. Gold prices have dropped sharply in the last few weeks, resulting in a severe erosion in the value of ETFs. All of the ETFs are down anywhere between 10-15 per cent in the last 1 year. Take a look at how some of the returns have been.
Story first published: Friday, May 24, 2013, 14:09 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns