தங்க இறக்குமதியை குறைக்க ரிசர்வ் வங்கியின் புதிய முயற்சி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்க இறக்குமதியை குறைக்க ரிசர்வ் வங்கியின் புதிய முயற்சி!!
இந்தியாவின் தங்க புழக்கத்தை குறைக்கும் முயற்சியில், தங்க வியாபாரிகளிடம் நகை ஏற்றுமதி கட்டண ஆதாரங்களை கேட்க அரசு பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து கடந்த மாத ஆரம்பத்தில், ரிசர்வ் வங்கி தங்க இறக்குமதியை கட்டுப்படுத்தவும், நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க, இறக்குமதியில் 20 சதவிகித்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கட்டாயமாக்கியது. அதன் விளைவாக, இறக்குமதி முகவர்கள் சுங்க துறையிடம் இருந்து இறுதி செயல்பாட்டு வழிமுறைகளுக்காக காத்திருப்பதால், புதிய வரவுகள் குறைந்துள்ளது, என ஊடக தகவல்கள் தெரிவிக்கிறது.

 

இதை பற்றி பங்கஜ் குமார்பரேக், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு குழுவின் துணை தலைவர் அவர்கள் கூறும்போது "மூன்றாவது முறையாக இறக்குமதி செய்வதற்கு முன், ஏற்றுமதிக்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டும். மேலும் இறக்குமதிக்கான சுங்கத்துறையின் சான்றொப்பமிட்ட விலைப்பட்டியல் விவரங்கள் சமர்ப்பிக்க தேவை இல்லை, ஆதற்கு பதில் முதல் முறை செய்த ஏற்றுமதிக்கான பண வரவு ஆதாரங்களை காண்பிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

 

ஒட்டுமொத்த செயல்முறைக்கு ஒன்பது மாதங்கள் தேவை, அதுவரை தங்க இறக்குமதிப் பொருட்கள் வர இயலாது என கூறிய பரேக், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு குழு இந்த வழிமுறைகளை பற்றிய விமர்சனங்களை உயர் அதிகாரிகளுடன் பேசுவதாகவும் கூறினார்.

தற்போது, தங்க நகை ஏற்றுமதியாளர்களுக்கு, ஏற்றுமதி செய்ய 90 நாட்களும் (இறக்குமதி தேதியில் இருந்து) மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பெறுவதற்கு 180 நாட்களாக விதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய ஆதாரங்களை பெறுவதன் முலம் வரி ஏய்ப்பு மற்றும் அதிகப்படியான தங்க இறக்குமதியை குறைக்க முடியும் என அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India to ask gold traders to produce payment proof for jewellery exports

In a bid to tighten gold supplies to India, the country is considering asking gold traders to produce a proof of payment for their jewellery exports.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X