ஐரோப்பிய சென்ட்ரல் வங்கியின் பணப்புழக்க திட்டத்தால் தங்கம் விலை சரிவு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஐரோப்பில் நிலவும் பணச்சுருக்கம் நிலையை மேம்படுத்த ஐரோப்பிய சென்டரல் வங்கி 2016ஆம் ஆண்டுக்குள் 50 பில்லியன் யூரோவை புழக்கத்தில் விட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் நிலவு பணசுருக்க நிலையை மேம்படுத்த உள்ளது ஐரோப்பிய மத்திய வங்கி.

 

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணிநேரங்களில் ஐரோப்பிய சந்தையில் வர்த்தகம் சூடுப்பிடிக்க துவங்கியது, இதே நேரத்தில் அமெரிக்க சந்தையில் மந்த நிலை நிலவியது குறிப்பிடதக்கது.

ஐரோப்பிய மத்திய வங்கி

ஐரோப்பிய மத்திய வங்கி

மேலும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை ஐரோப்பிய மத்திய வங்கி வியாழக்கிழமை மாலையில் பிராங்பேர்ட் நகரில் அறிவிக்கும். இந்த அறிவிப்பிற்காக அனைத்து நாடுகளும் காத்துக்கிடக்கிறது.

பணசுருக்க நிலை என்றால் என்ன?

பணசுருக்க நிலை என்றால் என்ன?

பணவீக்கத்திற்கு முற்றிலும் மாறுபட்ட நிலை தான் பணசுருக்கம், எளிமையாக கூறவேண்டும் என்றால், ஒரு சட்டையை இன்று 100 ரூபாய்க்கு வாங்கினால் நாளை அதை ரூ.95 கிடைத்தால் அது பணசுருக்கம். 105 ரூபாய்க்கு கிடைத்தால் அது பணவீக்கம். பணசுருக்கம் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் ஆபத்தானது.

50 பில்லியன் யூரோ
 

50 பில்லியன் யூரோ

ஐரோப்பிய மத்திய வங்கி 50 பில்லியன் யூரோ பணத்தை வங்கிகளின் மூலம் சந்தையில் பணபுழக்கத்தை அதிகரிக்க உள்ளது. இதன் மூலம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தற்போது நிலையான சொத்துக்களாக கருதப்படும் தங்கத்தை வாங்க படையெடுத்து வருகின்றனர்.

தங்க விலை உயர்வு

தங்க விலை உயர்வு

இதன் மூலம் தங்கத்தின் மீதான வர்த்தகம் நேற்றும், இன்றும் அதிகளவில் இருக்கிறது. மேலும் நேற்று உலக சந்தையில் தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதத்திற்கு பின் 1,300 என்ற விலை எட்டியது. ஐரோப்பிய வங்கியின் அறிவிப்பு வெளியான அடுத்த சில மணிநேரங்களில் தங்கத்தின் விலை 1,288 டாலராக குறைந்தது.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

மேலும் சந்தைகளில் கடந்த முன்று வருடங்களில் இல்லாத அளவிற்கு தங்கம் மீது முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என பூளும்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

உலக பொருளாதார வளர்ச்சி

உலக பொருளாதார வளர்ச்சி

மேலும் இரண்டு வருடத்திற்கு பிற முதலீட்டாளர்கள் உலோக பங்குகளில் தற்போது ஆர்வம் காட்டிவருகின்றனர். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி அமெரிக்காவின் வளர்ச்சியை உயர்த்தி மதிப்பீட்டு உள்ள நிலையில், உலக நாடுகளின் ஒட்டு மொத்த வளர்ச்சியை குறைத்துள்ளது.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold Declines From Five-Month High After ECB Stimulus Reports

Gold prices fell from the highest in five months after two European Central Bank officials said policy makers will propose purchasing 50 billion euros in assets per month through the end of 2016.
Story first published: Thursday, January 22, 2015, 16:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X