தங்கம் விலை மீண்டும் வரலாற்று உச்சத்தை தொடுமா? நாளை வெளியாகும் முக்கிய அறிக்கை..!!

அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்புக்கு கிடைத்த பின்னடைவு பங்குச்சந்தைகளிலும் தங்க சந்தைகளிலும் பயங்கரமாக எதிரொலித்துள்ளது. குறிப்பாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம் தீபாவளி வரை நீடிக்குமா? தங்கம் விலை இன்னும் உயருமா என்பன உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.

அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்று பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் பெரும்பான்மை பெற்றுள்ளது. இதனால் டிரம்பின் பலவேறு நடவடிக்கைகளுக்கும் நாடாளுமன்றம் மூலம் இவர்கள் முட்டுக்கட்டை போட வாய்ப்புள்ளது. மேலும் தேர்தல் தோல்வியால் டிரம்ப் ஈரான் போரை தற்போதைக்கு தீவிரப்படுத்த மாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் அமெரிக்க டாலரின் மதிப்பும் சரிந்து வருகிறது.

தங்கம் விலை மீண்டும் வரலாற்று உச்சத்தை தொடுமா? நாளை  வெளியாகும் முக்கிய அறிக்கை..!!

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக சரிவிலேயே இருக்க முக்கிய காரணம் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு, வட்டி விகிதங்கள் உயர்வு ஆகியவை தான். ஆனால் டிரம்புக்கு கிடைத்த பின்னடைவால் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.எனவே முதலீட்டாளர்கள் அதிக பணத்தை தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் தங்கம் விலையும் கணிசமாக குறைந்து விலை திருத்தத்தில் தான் இருந்தது.

தங்கம் விலையுடன் பெரிதும் தொடர்புடைய கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் சரிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 8% வரை வீழ்ச்சியை் சந்தித்துள்ளது. இதனால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த 30ஆம் தேதி உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 3,950 டாலர்கள் வரை சரிவை சந்தித்தது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கம் விலை குறைந்தது.

Also Read

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 1,02,000 ரூபாய் வரை சென்றது. தீபாவளிக்குள் தங்கம் விலை 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் வரும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அமெரிக்க தேர்தல் முடிவுகள் அதை தடுத்துவிட்டது. கிட்டதட்ட 4 நாட்களிலேயே தங்கம் விலை சவரனுக்கு 5000 ரூபாய்க்கு மேல் உயர்ந்து 1,07,000 ரூபாயை கடந்துவிட்டது.

தற்போது ஏறுமுகமாக இருக்கும் தங்கம் இனி வரும் நாட்களில் என்ன ஆகும் என்பது தான் பலருக்கும் இருக்கும் கேள்வி. தங்கத்தின் விலையில் அடுத்த கட்டமாக பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய மிக முக்கியமான காரணியாக நாளை வெளியாகவுள்ள அமெரிக்காவின் வேளாண் சாரா வேலைவாய்ப்பு அறிக்கை பார்க்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு அறிக்கையானது அமெரிக்க பொருளாதாரத்தின் வலிமையை காட்ட கூடியது.

Recommended For You

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்து, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்கள் குறித்த தனது அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கும். ஒரு வேளை தரவுகள் மோசமாக இருந்தால் மீண்டும் வட்டி உயர்த்தப்படலாம். இது நடந்தால் தங்கம் விலை குறையும், வேலைவாய்ப்பு தரவுகள் நன்றாக இருந்தால் வட்டி உயர்வு வாய்ப்புகள் குறைந்து தங்கம் விலை உயர்வுக்கு வித்திடும்.

எனவே தங்கம் விலையின் போக்கு எப்படி இருக்கும் என்பது நாளை நள்ளிரவு தெரிந்துவிடும். அடுத்த நாள் சனிக்கிழமை தங்கம், வெள்ளி விலையில் இதன் தாக்கத்தை நாம் காண முடியும். அடுத்த நாளே தீபாவளி என்பதால் அந்த நாளில் தங்கம் விலை என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,385 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,07,080 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை ஏற்றம் நீடித்தால் ஒரு சவரன் மீண்டும் 1.10 லட்சத்தை எட்ட வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.

You May Also Like

இன்று உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,122 டாலர்களாக வர்த்தகமாகிறது. இது 4,300 டாலர்கள் வரை செல்ல வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது உயர்ந்தால் இந்தியாவிலும் தங்கம் விலை கணிசமாக உயரும். எனவே இனி வரும் நாட்கள் தங்கம் வாங்க திட்டமிடுவோருக்கு முக்கியமான நாட்களாக இருக்க போகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+