தங்கத்தை வாங்கி காட்டில் புதைக்கும் மக்கள்..!! காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!!

தங்கம் விற்கும் விலைக்கு அதனை வாங்கி பத்திரமாக வைக்க வேண்டும் என்று தான் நினைப்போம். பெரும்பாலானவர்கள் இதற்காகவே வங்கி லாக்கர் வசதிகளை கூட பயன்படுத்துகின்றனர். ஆனால் இங்கே மக்கள் தங்கத்தை வாங்கி காட்டில் புதைக்கும் வினோதம் நடக்கிறது.

நார்வே நாட்டை சேர்ந்த மக்கள் அண்மை காலமாக தங்கத்தை கட்டிகளாக வாங்கி காடுகளில் புதைத்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதன்படி பொதுமக்கள் பலர் தங்களது கடின உழைப்பில் சேமித்த பணத்திற்கு தங்கம் வாங்கி, அதனை யாருமற்ற காடுகளில் கொண்டுபோய் புதைக்கிறார்கள்.இதன் பின் பெரிய மோசடியே நடக்கிறதாம்.

தங்கத்தை வாங்கி காட்டில் புதைக்கும் மக்கள்..!! காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!!

மோசடி செய்பவர்கள் பொதுமக்களுக்கு, குறிப்பாக முதியவர்களுக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்கின்றனர். வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தங்கம் வாங்குவது பாதுகாப்பான லாபகரமான முதலீடு என்று அவர்களை நம்ப வைக்கின்றனர்.அவர்கள் தங்கம் வாங்கிய பிறகு, அந்த தங்கத்தை காடுகளில் அல்லது யாருமற்ற இடங்களில் கொண்டுபோய் புதைத்தால் அது பாதுகாப்பாக இருக்கும் என்றும் பல மடங்கு பெருகும் என்றும் நம்ப வைத்துள்ளனர்.

தாங்கள் வாங்கிய தங்கம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் காடுகளில் அவற்றை புதைக்க அந்த மோசடி கும்பல் ரகசியமாக பின்தொடர்ந்து தங்கத்தை எளிதில் திருடி சென்று விடுகின்றனர்.

Also Read

இந்த விவகாரம் குறித்து நார்வே நாட்டு நிதித்துறை அமைச்சகம் மற்றும் வங்கிகள் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. நார்வே மக்கள் கடந்த ஆண்டு மட்டும் இந்த மோசடிகள் மூலம் 955 கோடி ரூபாயை இழந்துள்ளனர். இந்நிலையில் நார்வே அரசு, NO WAY you won't fool me என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை வங்கிகள் மூலம் முன்னெடுத்துள்ளது. எந்தவொரு உண்மையான வங்கியோ, அரசு அமைப்போ அல்லது காவல்துறையோ உங்களை தங்கம் வாங்கி காடுகளில் மறைத்துவைக்கவோ அல்லது உங்கள் சேமிப்பை யாரிடமாவது ஒப்படைக்கவோ ஒருபோதும் கேட்க மாட்டார்கள். உங்களை யாரிடமும் பேச கூடாது என மிரட்டுவதும், அவசர அவசரமாக செயல்பட தூண்டுவதும் மோசடிக்காரர்களின் முதல் அறிகுறி என தெரிவித்துள்ளது.

ஏதேனும் சந்தேகத்திற்கிடமான முதலீட்டு திட்டங்களோ அல்லது விசித்திரமான கோரிக்கைகளோ வந்தால், உடனடியாக உங்கள் குடும்பத்தினரிடமோ அல்லது நண்பர்களிடமோ கலந்தாலோசிக்க வேண்டும், காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

Recommended For You

மோசடியாளர்கள் தங்கத்தை வைத்து நூதன முறையில் இத்தகைய மோசடிகளை தொடங்கியுள்ளனர். எனவே மக்கள் வங்கி அழைப்புகள் என்ற பெயரில் வரும் அழைப்புகளை நம்ப வேண்டாம் , தங்கத்தை வாங்கி காட்டில் புதைப்பது திருடன் கையிலேயே சாவியை கொடுப்பது போன்றது என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+