தங்கம் அல்லது கோல்ட் ஃபண்ட்: எதில் முதலீடு செய்வது சிறந்தது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்றும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 400 கிராம் தங்கத்தை தங்கள் வாழ்நாளில் சேமித்து வைக்கவேண்டும் என்றும் நிதி ஆலோசகர்கள் கூறி வருகின்றனர்.

 

நாம் எதில் முதலீடு செய்தாலும் அந்த முதலீட்டுக்கு ஆபத்து வர வாய்ப்பிருக்கிறது. ஆனால் தங்கத்தில் முதலீடு செய்தால் ஆபத்துக்கு வாய்ப்பே இல்லை.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தங்கம் விலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அல்லது நேரடி பங்குவர்த்தகம்.. எது பெஸ்ட்? மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அல்லது நேரடி பங்குவர்த்தகம்.. எது பெஸ்ட்?

தங்கத்தில் முதலீடு

தங்கத்தில் முதலீடு

தங்கத்தை பல்வேறு வகைகளில் நாம் சேமித்து வைக்கலாம். குறிப்பாக ஆபரண வடிவில், நாணய வடிவில், தங்ககட்டி வடிவில் நாம் சேமித்து வைக்கலாம். ஆபரணங்கள் வகையில் தங்கத்தில் சேமிப்பதால் ஏற்படும் பிரச்சனை என்னவெனில் அதில் செய் கூலி மற்றும் சேதாரம் செலவு செய்ய வேண்டிய நிலை வரும். அது கிட்டத்தட்ட 10% இருப்பதால் அந்த 10 சதவீதம் தங்கம் விலை உயரும் வரை நமது முதலீடு லாபமும் இல்லாமல் இருக்கும். அதேபோல் தங்க நாணயம் அல்லது தங்கக்கட்டி வடிவத்தில் தங்கம் வாங்கினாலும் கூட அதிலும் சில குறிப்பிட்ட சதவீதம் இழப்பு ஏற்பட வேண்டியிருக்கும்.

கோல்ட் ஈடிஎஃப்

கோல்ட் ஈடிஎஃப்

இதனை தவிர்க்க நாம் கோல்ட் இடிஎஃப் என்பதில் முதலீடு செய்யலாம். தங்க விலை நிலவரத்தை இலக்காகக் கொண்டு உருவானதுதான் கோல்ட் ஈடிஎஃப் என்பதும் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு, தங்கச் சந்தையில் முதலீடு செய்யக்கூடிய முதலீட்டு பத்திரங்கள் தான் இந்த முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னணு வடிவில் தங்கம்
 

மின்னணு வடிவில் தங்கம்

கோல்ட் ஈடிஎஃப் மூலம் நாம் முதலீடு செய்வதால் செய்கூலி, சேதாரம் என்ற 10% நஷ்டத்தைத் தவிர்க்கலாம். மின்னணு வடிவில் நாம் வாங்கும் தங்கம் நம்முடைய அக்கவுண்டில் இருக்கும். நாம் எப்போது வேண்டுமானாலும் அதனை தங்கமாகவோ அல்லது பணமாகவோ பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டீமேட் கணக்கு

டீமேட் கணக்கு

இதற்காக ஒரு டீமேட் கணக்கு ஆரம்பித்து ஒரு சிறிய அளவு கமிஷன் கொடுத்து நாம் தங்கத்தை மின்னணு வடிவில் வாங்கிக் கொள்ளலாம். கோல்ட் ஈடிஎஃப் முதலீடு என்பது வெளிப்படையாக இருக்கும் என்பதும் பாதுகாப்பாக இருக்கும் என்பதும் செலவின்றி லாபத்தை தரும் முதலீடு என்பதும் குறிப்பிடத்தக்கது.

தங்க ஆபரணங்கள்

தங்க ஆபரணங்கள்

எனவே தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் ஆபரணத் தங்கமாக வாங்காமல் கோல்டு ஈடிஎஃப் வடிவத்தில் வாங்கினால் கூடுதல் தங்கத்தை வாங்கி எந்தவித நஷ்டமும் இல்லாமல் பயனடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் போன்ற வகைகளுக்கு தங்கத்தை சேமிக்க வேண்டும் என்றாலும் கோல்ட் ஈடிஎஃப் முறையில் முதலீடு செய்து தேவையான போது அதனை பணமாக மாற்றி தங்க ஆபரணங்களை வாங்கி கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is the difference between Gold Mutual Funds and Gold ETF?

A Gold ETF is an exchange-traded fund in the domestic physical gold price. They are passive investment instruments that are based on gold prices and invest in gold bullion.
Story first published: Friday, October 14, 2022, 8:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X