2020ஐ மிரள வைத்த தங்கம் பற்றிய கணிப்புகள்.. யார் என்ன சொன்னார்கள்.. இதோ ஒரு அலசல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியர்களுக்கு எப்போதுமே தங்கம் மீது அலாதி பிரியம் உண்டு. இது இன்று நேற்றல்ல, காலம் காலமாக தங்கம் என்பது இந்தியர்களின் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

 

ஏன் முதலீடு மட்டும் அல்ல, சேமிப்பு, ஆபரணம், நல்லது, கெட்டது என இப்படி அனைத்திலும் தங்கத்தின் பங்கு முக்கியமானதாக உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம், பணவீக்கத்திற்கு எதிராக சிறந்த ஒரு ஹெட்ஜிங் ஆகவும் பார்க்கப்படுகிறது. ஆக சர்வதேச அளவில் மிகப்பாதுகாப்பான ஒரு புகலிடமாகவும் விளங்குகிறது.

தங்கம் கொடுக்க போகும் செம ஜாக்பாட்.. 2021ல் விலை நிலவரம் இப்படி தான்.. !தங்கம் கொடுக்க போகும் செம ஜாக்பாட்.. 2021ல் விலை நிலவரம் இப்படி தான்.. !

தங்கம் பற்றிய கணிப்பு

தங்கம் பற்றிய கணிப்பு

இத்தகைய தங்கத்தின் விலையானது நடப்பு ஆண்டில் கொரோனாவின் தாக்கத்தினால், வரலாறு காணாத உச்சத்தினை தொட்டது. இது முதலீட்டாளர்கள் மற்றும் தங்க ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது எனலாம். இதற்கு மத்தியில், இன்னும் நகை ஆர்வலர்களையும், முதலீட்டாளர்களையும் மிரள வைத்தது நிபுணர்களின் கணிப்பு தான். ஆக அத்தகைய கணிப்புகளை பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்க விருக்கிறோம்.

கோல்டுமேன் சாச்சஸின் கணிப்பு

கோல்டுமேன் சாச்சஸின் கணிப்பு

கோல்டுமேன் சாச்சஸ் நிறுவனம் 2021ம் ஆண்டின் இறுதிக்குள் 10 கிராம் தங்கம் விலையானது 61,000 ரூபாயினை தொடலாம் என்று கணித்தது. இதுவே காம்டிரெண்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஞானசேகர் தியாகராஜன் 10 கிராம் தங்கத்தின் விலையானது 60,000 - 62,000 ரூபாயினை தொடலாம் என்றும் கணித்திருந்தார்.

மோதிலால் ஆஸ்வால் & பேங்க் ஆப் அமெரிக்காவின் கணிப்பு
 

மோதிலால் ஆஸ்வால் & பேங்க் ஆப் அமெரிக்காவின் கணிப்பு

மோதிலால் ஆஸ்வால் ஃபைனான்ஷியல் நிறுவனத்தின் தலைவர் கிஷோர் நரேன், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் 10 கிராம் தங்கம் விலையானது 65,000 ரூபாயினை தொடலாம் என்று கணித்திருந்தார்.

பேங்க் ஆப் அமெரிக்காவின் கணிப்பு அடுத்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3000 டாலர்களை தொடலாம் என்று கணித்திருந்தது.

 

ABN Amro Bank  என்ன கூறியது?

ABN Amro Bank என்ன கூறியது?

ABN Amro Bank அடுத்த ஆண்டுக்குள் அவுன்ஸூக்கு 2100 டாலர்களை தொடலாம் என்று கணித்திருந்தது. இந்திய மதிப்பில் சுமார் 54,488 ரூபாயினை தொடலாம் (இது டிசம்பர் 18 அன்று கணித்த விகிதமாகும்.) என்றும் கணித்துள்ளது.

சிட்டி பேங்க் அடுத்த ஆண்டின் இறுதியில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 59,645 ரூபாயினை தொடலாம் என்று கணித்துள்ளது. (இது டிசம்பர் 16 அன்று கணித்த விகிதமாகும்.) இதே 2021ல் அவுன்ஸூக்கு 2300 டாலராகும். இதுவே வாலட் முதலீட்டாளர் தங்கம் விலையானது 56,167 ரூபாயினை தொடலாம் என்று கடந்த அக்டோபர் 6 அன்று கணித்திருந்தது.

 

ANZ வங்கி கணிப்பு

ANZ வங்கி கணிப்பு

ANZ வங்கி தங்கம் விலையானது அடுத்தாண்டு இறுதிக்குள் தங்கம் விலையானது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 54,621 ரூபாயினையும் தொடலாம் என கணித்தது. இதே டாலரில் அவுன்ஸூக்கு 2100 டாலரை தொடலாம் என்றும் கணித்துள்ளது. இதே ING கணிப்பு 2021ம் ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 2020 டாலர்களையும், இந்தியாவில் 52,682 ரூபாயினையும் மீண்டும் எட்டும் என கணித்தது.

Wells fargo கணிப்பு

Wells fargo கணிப்பு

Wells fargo அடுத்தாண்டில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 2100 - 2200 டாலர்களை தொடலாம் என்றும் கணித்துள்ளது. இதே போல இந்திய மதிப்பில் 54,615 ரூபாயினை தொடலாம் என்றும் கணித்திருந்தது.
ப்ளூம்பெர்க் கணிப்பானது அடுத்தாண்டில் மிண்டும் அவுன்ஸூக்கு 2075 டாலர்களை தொடலாம் என்றும், இந்தியாவில் 10 கிராமுக்கு 54,159 ரூபாயினை தொடலாம் என்றும் கணித்துள்ளது.
இதே CIBC கணிப்பு தங்கம் விலையானது அடுத்தாண்டில் அவுன்ஸூக்கு 2300 டாலர்களை தொடலாம் என்றும், இந்தியாவில் 60,006 ரூபாயினை தொடலாம் என்றும் கணித்திருந்தது.

தங்கம் விலை குறையும்

தங்கம் விலை குறையும்

Westpac Australia, கணிப்பின் படி தங்கம் விலையானது மீண்டும் 1760 டாலர்களை தொடலாம் என்றும் ரூபாயில் 10 கிராமுக்கு 45,900 தொடலாம் என்றும் கணித்திருந்தது. (இது நவம்பர் 25 அன்று வெளியிடப்பட்டது)

இதே சிட்டி பேங்க் அடுத்த 2- 6 மாதங்களில் தங்கம் விலையானது மீண்டும் 2000 டாலர்களை தாண்டும். இதே போல ரூபாயில் 10 கிராம் தங்கமானது 52,000 ரூபாயினை தாண்டும் என்று கடந்த நவம்பரில் கணித்திருந்தது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Year end story: top 10 Gold price predictions

Gold updates.. Year end story: top 10 Gold price predictions
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X