வருமான வரி விலக்கு வேண்டுமா? முதலீட்டு சான்றுகளை பத்திரப்படுத்துங்கள்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருமான வரி விலக்கு வேண்டுமா? முதலீட்டு சான்றுகளை பத்திரப்படுத்துங்கள்
சென்னை: நாம் சம்பாதிக்கும் பணத்திற்கு அரசாங்கத்துக்கு வரி கட்ட வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வரி கட்டுபவர்களுக்கு தங்களின் வருமானத்தைப் பொறுத்து சில வரி விலக்குகளும் உள்ளன என்பதையும் நாம் அறிவோம். ஆனால் அந்த வரி விலக்கை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் மிகவும் அவசியம். அதை சரி வர பாதுகாக்காமல் போனால் வரி விலக்கு நமக்கு கிடைக்காமல் போய்விடும்.

(Is it illegal for NRIs to maintain a resident savings account?)

வருமான வரி கட்டுபவர்கள் தங்கள் முதலீடுகளின் முறையான ஆதாரங்களையும் செலவுக்கான விவரங்களையும் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதனை உங்கள் நிறுவனம் CBDT-யிடம் (நேர்முக வரிகளின் மத்திய குழுமம்/ சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டாக்சஸ்) சமர்பித்து விடுவார்கள்.

இந்த ஆதாரங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் சமர்பிக்க தவறினால் நீங்கள் வருமான வரி விலக்குகளை அனுபவிக்க முடியாது.

நீங்கள் கொடுக்கும் ஆதாரங்களின் மீது உங்கள் நிறுவனத்திற்கு திருப்தி இல்லையென்றால் அதனை ஏற்றுக்கொள்ளாது. அப்படி ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் உங்களால் வருமான வரி விலக்குகளை அனுபவிக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் பணியாளர்கள் சமர்பிக்கும் முதலீட்டு ஆதாரங்களை கட்டாயம் சரிப்பார்க்க வேண்டும் என்று சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டாக்சஸ் கட்டாயப்படுத்துகிறது.

உங்கள் முதலீட்டுக்கு தேவையான அனைத்து ஆதாரங்களும் இல்லையென்றால் உங்கள் நிறுவனம் அந்த முதலீட்டை வருமான வரி விலக்குக்கு எடுத்துக் கொள்ளாது. அப்படி ஏதும் நடந்தால் வரி விலக்கை பெற நீங்கள் உங்கள் வருமானவரி விவர அறிக்கையை வருமான வரித்துறையிடம் சமர்பிக்கும் போது உங்கள் முதலீட்டுக்கான அனைத்து ஆதரங்களையும் ஒப்படைக்க வேண்டும். இருப்பினும் அந்த கடைசி நேரத்தில் சமர்ப்பித்தால் உங்கள் வேலை அவ்வளவு எளிதில் முடியாது.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்த பிறகு வரிவிதிக்கப்பட்டவர் சீராக்குதலுக்கான(ரெக்டிபிகேஷன்) மனுவை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த மனு அளித்த அந்த மாதத்தின் கடைசியிலிருந்து 6 மாத காலத்திற்குள் ரெக்டிபிகேஷனுக்கான உத்தரவு பிறபிக்கப்படும். இந்த பிழை நீக்குதலை வருமான வரித்துறை அதிகாரிகளோ அல்லது வருமான வரித்துறையின் முறையீட்டு துறையின் ஆணையரோ செய்வர்.
ஆதலால் சரியானா ஆதாரங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் சமர்ப்பித்தல் எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்திருப்பீர்கள். அப்படி செய்தால் தான் வருமான வரி விலக்கு கிடைக்கும்.

சரியான ஆதாரங்களை முறையாக பராமரிக்க இன்னும் சிலவற்றை தெரிந்துக் கொள்ளுங்கள்.

கீழ்கூறிய சில ஆதாரங்கள் வருமான வரி சட்டம், பிரிவு 80 சி-இன் கீழ், வரி விலக்குக்கு தகுதி பெரும்:

ஆயுட் காப்பீட்டின் தவணைத் தொகை:

ஆதாரம் - தவணைத் தொகை ரசீது. இதில் காப்பீடு பெறுபவரின் பெயர், காப்பீடு செய்யப்பட தொகை மற்றும் பணம் செலுத்திய தேதி இடம் பெற வேண்டும்.

ப்ராவிடன்ட் பண்ட் (பி.எஃப்):

ஆதாரம் - ப்ராவிடன்ட் பண்ட்டுக்கு அளித்த தொகைக்கான ரசீது. இதில் கடந்த வருடம் ப்ராவிடன்ட் பண்ட்டுக்கு பங்களித்த மொத்த தொகையையும் குறிப்படப்பட்டிருக்க வேண்டும்.

தேசிய சேமிப்பு சான்றிதழ் (நேஷனல் சேவிங் சர்டிபிகேட்/ என்.எஸ்.சி):

ஆதாரம் - இந்த சான்றிதழே ஆதாரமாக விளங்கும். முதலீட்டாளரின் விவரங்கள் இந்த சான்றிதழில் சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

பிக்சட் டெபாசிட் (எப்.டி.):

ஆதாரம் - ஐந்து வருட பிக்சட் டெபாசிட்டின் சான்றிதழ். இதில் வைப்பீட்டாளரின் விவரங்கள் அடங்கியிருக்க வேண்டும்.

வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துதல்:

ஆதாரம்: உங்கள் வீட்டுக்கடனின் அசல் தொகையை திருப்பி கொடுக்கும் போது பெரும் ரசீது.

ஓய்வூதிய நிதி (பென்ஷன் பண்ட்):

ஆதாரம் - லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் பென்ஷன் திட்டத்தின் கீழோ அல்லது மத்திய அரசாங்கத்தின் பென்ஷன் திட்டத்தின் கீழோ செலுத்திய தொகைக்கான ரசீது.

மேற்கூறிய ஆதாரங்களைத் தவிர, வருமான வரிக்கு உட்பட்ட செலவுகளுக்கான முறையான ஆதாரங்களை பராமரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பல குறிப்பீடுகளின் படி இந்த ஆதாரங்களை குறைந்தது எட்டு வருடங்களுக்காவது பாதுகாக்க வேண்டும். அதனால் வருமான வரிக்கு உட்பட்ட ஆவணங்களை மிகவும் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT returns: Why you should preserve investment proof | வருமான வரி விலக்கு வேண்டுமா? முதலீட்டு சான்றுகளை பத்திரப்படுத்துங்கள்

Tax payers are required to submit their investment and required expenses details with proper proof to their employer so that the employer should know about the relevant details which will further pass on to CBDT (Central Board of Direct Taxes).
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X