முதலீட்டில் அதிக லாபம் பெற முதலில் இதை தவிர்க்க வேண்டும்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஒரு நல்ல முதலீட்டாளராக இருக்க வேண்டுமானால், நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், புத்திசாலித்தனமான முதலீட்டு தேர்வுகளை தேர்ந்தெடுப்பது. உங்களுடைய பேராசை மற்றும் பயத்தையின் மீது கவனமாக இருக்க வேண்டும். சிறந்த பங்கை வேட்டையாடுவதிலும், போட்ட முதல் பறி போய் விடுமோ என்ற பயத்திலும் நீங்கள் சுலபமாக சிக்கி கொள்ளலாம். ஆனால் சமநிலை, பிரித்துவிடுதல் மற்றும் பொறுமை ஆகியவற்றை கடைப்பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் முதலீட்டை பெருக்குவதே சிறந்த வழியாகும்.

 

நீங்கள் புத்திசாலித்தனமான முதலீட்டு தேர்வுகளை தேர்ந்தெடுக்க ஆரம்பித்து விட்டால் மட்டும் போதாது; அதே நேரம் சில தீய பழக்கங்களை தவிர்க்கவும் வேண்டும். குறிப்பாக, நீங்கள் நீண்ட கால முதலீட்டாளராக இருந்து, சந்தையில் தினசரி நடக்கும் கூத்தில் இருந்து விலகி இருப்பவராக இருந்தால். உங்கள் முதலீடுகள் வெற்றியடைய கீழ்கூறியவைகலை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்:

கூட்ட மனநிலை

கூட்ட மனநிலை

தற்போது பரபரப்பாக இருக்கும் பங்கில் முதலீடு செய்ய நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்கள் கொடுக்கும் அழுத்தத்திற்கு இணங்காதீர்கள். உண்மையிலேயே அது நல்ல தேர்வாக இருக்கும் என பட்டால் தொடருங்கள்.

தரப்படுத்தல் (பெஞ்ச்மார்க்கிங்)

தரப்படுத்தல் (பெஞ்ச்மார்க்கிங்)

முதலீடு தரப்படுத்தல் என்பது தனிப்பட்ட ஒரு பங்கு அல்லது பங்குகளின் ஆற்றுகையை ஒரு தரத்துடன் ஒப்பிட்டு பார்ப்பது. உங்கள் போர்ட்ஃபோலியோவின் ஆற்றுகையை அந்த வருடத்தில் சிறப்பாக செயல்படும் சந்தையுடன் ஒப்பிடுவதால் சோர்வடைந்து அதனால் ஏமாற்றம் அடைவீர்கள்.

கடந்த கால ஆற்றுகையை நம்புவது
 

கடந்த கால ஆற்றுகையை நம்புவது

தனிப்பட்ட பங்குகள் அல்லது ம்யூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும் போது, அந்த முதலீட்டிற்கு ஏன் கடந்த கால ஆற்றுகை இருந்தது என்பதை புரிந்து கொள்வது தான் முக்கியே தவிர, ஆற்றுகையின் எண்ணிக்கையல்ல. நிறுவனம் அல்லது ஃபண்ட்களில் முதலீடு செய்யும் போது அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவர்களின் வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்வது தான் முக்கியமாக இருக்கும்.

நிலை நிறுத்தம்

நிலை நிறுத்தம்

ஒரு குறிப்பிட்ட முதலீட்டின் மீது உணர்ச்சி ரீதியான இணைப்பு இருக்கும் போது நிலை நிறுத்தம் ஏற்படும். உணர்ச்சியின் அடிப்படையில் உங்கள் முதலீட்டு வினைமுறைத் திறம்இருக்கும் போது, நீங்கள் ஆரோக்கியமான முதலீட்டு முடிவுகளை எடுப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட பங்கை பல காலம் வைத்திருப்பதால் அது உங்களுக்கு பாதுகாப்பாக தெரியும். ஆனால் எந்த ஒரு பங்கும் கஷ்ட காலத்தை தழுவலாம் என்பது தான் உண்மை.

குறுகிய வட்டம்

குறுகிய வட்டம்

ஒரு நிறுவனத்தை பற்றியும், அது சரியாக செயலாற்றுகிறது என்பதை பற்றியும் நீங்கள் புரிந்து கொண்டால், அதில் முதலீடு செய்வது சரியாக தெரியும். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் அதிகமாக முதலீடு செய்வதென்பது ஆபத்தான பழக்கமாகும். ஒரு நிறுவனத்தின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை இருந்தால், உங்கள் முதலீட்டில் 40, 50, ஏன் 80 சதவீதம் வரை அந்த நிறுவனத்தில் தான் இருக்கும். ஆனால் உண்மையை சொல்லப்போனால், நீங்கள் ஆபத்தான நிலையில் உள்ளீர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Bad Investing Habits To Avoid

In order to be a good investor, the first step is to make wise investment choices. You have to be careful to keep your “greed and fear” in check.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X