தங்கத்தின் விலை: கடந்த இரண்டரை ஆண்டுகளிலேயே மிகக் குறைவு

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கடுமையாக சரிந்து வருகிறது. இதற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அமெரிக்காவில் குவான்டிடேடிவ் ஈசிங்' நிறுத்தப்படும் என்கிற பயமே முக்கிய காரணம் ஆகும். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ்க்கு 1,229 டாலராக குறைந்து விட்டது. இதே விலை கடந்த 2010 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காணப்பட்டது.

 

அதிகமான தங்கத்தின் தேவைகள்

அதிகமான தங்கத்தின் தேவைகள்

இந்தியாவின் அனைத்து விதமான தங்கத் தேவைகளும் இறக்குமதி சார்ந்து இருப்பதால், இந்தியாவில் தங்கத்தின் விலை சர்வதேச நிலவரத்தை அனுசரித்தே காணப்படுகிறது. சர்வதேச அளவிலான தங்கத்தின் விலை வீழ்ச்சி, இந்திய சந்தைகளிலும் பிரதிபலிக்கும். ஆனால் இந்த விலை டாலருக்கு எதிராக ரூபாயின் மாற்று வீதத்தை சார்ந்து உள்ளது.

இன்றைய நிலவரம்

இன்றைய நிலவரம்

சர்வதேச நிலவரத்தை ஒட்டி, இந்தியாவில் தங்கத்தின் விலை கணிசமாகக் குறையவில்லை. ஏனெனில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சமீப காலங்களில் கணிசமாகச் சரிந்துள்ளது. இந்தியாவில் தங்கத்தின் விலை ரூ 19,000 முதல் ரூ 20,000 வரை வேறுபடுகிறது. ஆனால், இன்று சந்தைகள் திறக்கும் போது இந்த விலை மாறலாம். இந்தியாவில் ரூ 32,000 க்கு விற்ற 10 கிராம் தங்கம், படிப்படியாக விலை சரிந்து தற்போதய நிலையை எட்டியுள்ளது.

பெடரல் ரிசர்வ்
 

பெடரல் ரிசர்வ்

புதனன்று அமெரிக்க பெடரல் ரிசர்வ், இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் சொத்து வாங்கும் திட்டத்தை படிப்படியாக குறைக்க திட்டமிட்மிட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பெடரல் ரிசர்வ் சொத்து வாங்குவதால் உருவான பணப்புழக்கம், சர்வதேச அளவில் தங்கம் உட்பட அனைத்து விதமான சொத்து விலைகளையும் அதிகரித்தது.

விலைக் குறைவது நிச்சயம்

விலைக் குறைவது நிச்சயம்

ஆய்வாளர்கள் டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு நிச்சயம் அதிகரிக்கும், அப்பொழுது இந்தியாவில் தங்கத்தின் விலை கணிசமாகக் குறையும், என நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold comes crashing down; drops to 2 and half year low

International gold prices came crashing down in trade on fears that the withdrawal of quantitative easing in the US would see lower prices for the metal.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X