தங்க இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது ரிசர்வ் வங்கி!!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கோல்டு டோர் எனப்படும் சுத்திகரிக்கப்படாத தங்கக் கட்டிகளின் இறக்குமதி மீதான கட்டுபாடுகளை ஆர்பிஐ தளர்த்தியது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதத்தில், ஆண்டின் மொத்த தேவையில் 15 விழுக்காடு இறக்குமதி செய்துகொள்ளவும் மீதம்முள்ளவை ஏற்றுமதி அளவினை பொறுத்து இறங்குமதி செய்யவும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

 

ஆர்பிஐ வங்கிகளுக்கு அளித்துள்ள செய்தியில் "சுத்திகரிப்பு நிலையங்கள் உரிமை அளவீட்டு வரையரைகளுக்குட்பட்டு மொத்த சராசரி தேவை அளவில் 15 சதவிகிதம் வரை முதல் இரண்டு மாதத்தில் இறக்குமதி செய்து அதன் விளைவாக தங்க ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்தும் வகையில் வழங்கலாம். அதன் பின் ஏற்றுமதி அளவினைப் பொறுத்து தங்கக் கட்டிகள் தவணை முறையில் இறக்குமதி செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

தங்க இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது ரிசர்வ் வங்கி!!..

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆர்பிஐ தங்க இறக்குமதிகளுக்கு தடைகளை விதித்து அதனை ஏற்றுமதியுடன் தொடர்புப்படுத்தியது. இதன்படி, இறக்குமதியில் 20 சதவிகித தங்கம் ஏற்றுமதி வர்த்தகத்திற்காக ஒதுக்கப்படவும் மீதம் 80 சதவிகிதம் உள்நாட்டு வர்த்தகத்திற்கும் ஒதுக்கப்படவும் வேண்டும்.

அரசும் ஆர்பிஐ-யும் தங்க இறக்குமதி தொடர்பான கோரிக்கைகளை முன்னிறுத்தி வேண்டுகோள்களை பெற்று வந்தன. இதை தொடர்ந்து ஆர்பிஐ இது தொடர்பான வழிமுறைகளை வகுத்துள்ளது.

அடுத்த இறக்குமதியை பெரும் முன் 80 விழுக்காட்டிற்கு மிகாமல் உள்ளூர் வர்த்தகம் இருக்கவேண்டும் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. "இறக்குமதி செய்யபபும் தங்கக் கட்டிகள் சுத்திகரிக்கப்பட்டு முதலில்-வரும் முன்னுரிமை அடிப்படையில் 20:80 என்ற விகிதத்தில் வெளியிடப்படும்" என்று ஆர் பி ஐ தெரிவித்துள்ளது..

பெருகிவரும் நடப்புக் கணக்கு மற்றும் வருவாய் பற்றாக்குறை, ரூபாயின் மதிப்பு சரிவு ஆகிய நேரிக்கடிகளுக்கிடையே அரசு தங்க இறக்குமதிக்கு தடை விதித்தது.முதலில்-வரும் முன்னுரிமை முறையில், முதலில் பெறப்பட்ட அடியில் உள்ள சரக்குகளை கையாள முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI eases norms for gold dore imports

The Reserve Bank of India, on Tuesday, partly eased restrictions on import of gold dore, by allowing refineries to import 15 per cent of their gross annual requirement in the first two months and the balance as per export performance.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X