3 வார சரிவில் இருந்து மீண்டது தங்கம் விலை.. கிராமிற்கு 11 ரூபாய் உயர்வு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்திய நாணய சந்தையில் கடந்த 3 வாரமாகச் சீன மற்றும் அமெரிக்கப் பொருளாதாரச் சூழ்நிலைகளின் காரணமாகத் தங்கம் விலை தொடர் சரிவு பாதையில் இருந்தது.

 

(கடைசி நேரத்தில் ஜகா வாங்கிய பெடரல் ரிசர்வ்.. சரிவில் இருந்து தப்பியது இந்திய சந்தை..!)

வியாழக்கிழமை வெளியான பெடரல் வங்கியின் வட்டி உயர்வு நடவடிக்கை ஒத்திவைப்பு இந்திய நாணய சந்தையில் புதிய முதலீடுகளை ஈர்க்கத் துவங்கியது. இதனால் இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை கிராமிற்கு 11 ரூபாய் உயர்ந்தது.

3 வார சரிவில் இருந்து மீண்டது தங்கம் விலை.. கிராமிற்கு 11 ரூபாய் உயர்வு..!

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 24 கேரட் தங்கத்தின் விலை 11 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 2,496 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 12 ரூபாய் அதிகரித்து 2,670 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை..

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்வுடன் காணப்பட்டது. சென்னையில் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 1175 ரூபாய் அதிகரித்து 36,040 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

(பணக்காரர்கள் பட்டியலில் இறங்கினாலும்... மக்கள் மனதில் நிலைத்துவிட்டார்.. அசிம் பிரேம்ஜி..!)

3 வார சரிவில் இருந்து மீண்டது தங்கம் விலை.. கிராமிற்கு 11 ரூபாய் உயர்வு..!

இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.71 பைசா உயர்ந்து 65.66 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அமெரிக்க டாலரை போல பிற நாணயங்களுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices set to snap 3 week losing streak

Gold firmed near a two-week high on Friday and was on track to snap a three-week losing streak after the Federal Reserve decided to hold U.S. interest rates steady due to worries over the global economy.
Story first published: Friday, September 18, 2015, 16:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X