ஆத்தி... எவரெஸ்ட் உச்சத்தில் தங்கம் விலை! 2 மாதத்தில் பவுனுக்கு 4,768 உயர்வு! ஏன்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியர்களுக்கு எப்போதும் தங்கத்தின் மீது தனி காதல் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

என்ன தான் தங்கம் விலை ஏறினாலும், தங்கத்தை வாங்கி, நகை நட்டுகளாகப் போட்டுக் கொள்வது வழக்கமாகத் தான் இருக்கிறது.

கொரோனா வைரஸ் லாக் டவுனில் கூட, தங்கம் காட்டில் மழை தான். தொடர்ந்து விலை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. தங்கம் விலை நிலவரத்தில் இருந்து தொடங்குவோம்.

சென்னையில் தங்கம் விலை நிலவரம்

சென்னையில் தங்கம் விலை நிலவரம்

24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 47,880 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள். 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 44,850 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள். இது கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய விலை ஏற்றம் என்பதை சொல்ல வேண்டுமா என்ன?

எம் சி எக்ஸ் தங்கம்

எம் சி எக்ஸ் தங்கம்

இந்தியாவின் ஃப்யூச்சர் ஆப்ஷன் கமாடிட்டி சந்தையான எம் சி எக்ஸ்-ல், நேற்று (15 மே 2020), ஜூன் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க காண்டிராக்டின் விலை 47,379 ரூபாய்க்கு நிறைவடைந்து இருக்கிறது. அதோடு 47,462 என்கிற உச்சப் புள்ளியையும் தொட்டு இருக்கிறது ஜூன் காண்டிராக்ட். இது வரலாற்று உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச தங்கம்

சர்வதேச தங்கம்

சர்வதேச அளவில், ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கான விலை 1,743 டாலரைத் தொட்டு இருக்கிறது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய விலை உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இண்ட்ரா டே உச்சமாக ஒரு அவுன்ஸ் தங்கம் 1,751 டாலரைத் தொட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா

கொரோனா

நாம் முன்பே சொல்லி இருப்பது போல, உலக பொருளாதாரத்தில் ஒரு நிலையற்ற தன்மை வந்தால், முதலீட்டாளர்கள் பணத்தை தங்கத்தில் தான் கொண்டு வந்து கொட்டுவார்கள். அது இப்போது வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே சர்வதேச அளவில் தங்கம் விலை எகிறிக் கொண்டே இருக்கிறது.

அரசியல் சூடு

அரசியல் சூடு

கொரோனா போக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வேறு, சீனா மீதுள்ள கோபத்தில், உலக பொருளாதாரத்தின் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றுவது போல சுரீர் எனப் பேசி, உலக பங்குச் சந்தைகளை ஆட்டம் காண வைத்துக் கொண்டு இருக்கிறார். எனவே சர்வதேச அளவில் தங்கம் விலை தாறுமாறாக ஏற்றம் கண்டு கொண்டே தான் இருக்கிறது.

விலை ஏற்ற காரணங்கள்

விலை ஏற்ற காரணங்கள்

1. சர்வதேச தங்கம் விலை 1,650 லெவல்களில் இருந்து 1,750 லெவல்களைத் தொட்டு இருப்பது
2. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து 75.5 ரூபாய்க்கு மேலேயே இருப்பது... போன்ற காரணங்களால் தான் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

படித்துப் பாருங்கள்

படித்துப் பாருங்கள்

அமெரிக்க டாலரால் எப்படி தங்கம் விலை அதிகரிக்கிறது என விரிவாக கீழே கொடுத்து இருக்கும் லிங்கில் எழுதி இருக்கிறோம். படித்துப் பாருங்கள், தங்கம் விலை ஏற்றத்தை முழுமையாக புரிந்து கொள்ள உதவும் என நம்புகிறோம். "அமெரிக்க டாலரால் விலை உயரும் தங்கம்..! எப்படி..?"

பவுனுக்கு எவ்வளவு

பவுனுக்கு எவ்வளவு

மார்ச் 19, 2020 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் 41,920 ரூபாய். பவுனுக்கு 33,536 ரூபாயாக இருந்தது.
இன்று மே 16, 2020 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 47,880 ரூபாய். பவுனுக்கு 38,304 ரூபாயாக எகிறி இருக்கிறது. ஆக 2 மாதத்தில், தங்கம் பவுனுக்கு 4,768 ரூபாய் அதிகரித்து இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chennai Gold price surge Rs 4768 a poun in last 2 months

The Chennai gold price has surged around Rs 4,768 for a poun in the last 2 months. What are the reasons for the gold price surge in the last two months?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X