நமது மியூச்சுவல் ஃபண்ட்கள் வெளிநாட்டிலும் முதலீடு செய்யப்படுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது சரியானது, பாதுகாப்பானது மற்றும் அதிக வருவாய் தரக் கூடியது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம்.

 

நமது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் இந்தியாவில் உள்ள பல நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு அதில் கிடைக்கும் வருவாயை ஃபண்ட் மேனேஜர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நமது மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்களிலும் முதலீடு செய்யப்படுமா? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

இந்தியாவில் தற்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்புணர்வு அதிகமாகி வருகிறது என்பதும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் திட்டங்கள் குறித்த விளக்கங்கள் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடதக்கது.

வெளிநாட்டு நிறுவனங்கள்

வெளிநாட்டு நிறுவனங்கள்

இந்திய முதலீட்டாளர்கள் செய்யும் முதலீடு தொகை இந்தியாவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். அதில் கிடைக்கும் வருமானம் முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஒரு சில வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செபி ஒப்புதல்
 

செபி ஒப்புதல்

இந்தியாவிலுள்ள முதலீட்டாளர்களுக்கு அவர்களுடைய முதலீட்டுக்கான யூனிட்களை வழங்குவதற்கு முன்னர் செபி என்று கூறப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் ஒப்புதலைப் பெற்று அதன் பின் திட்டங்களுக்கான யூனிட்களை வழங்க வேண்டும். ஒரு திட்டத்தின் முதலீடு நோக்கங்கள், முதலீடின் பாதுகாப்பு, எந்தெந்த நாடுகளில் முதலீடு செய்யப்படுகிறது? ரிஸ்குகள் என்ன? போன்ற தகவல்களை விளக்கும் திட்ட ஆவணத்தை செபி ஒப்புதல் பெற்று முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.

வெளிநாட்டு பங்குச்சந்தை

வெளிநாட்டு பங்குச்சந்தை

இந்த நிலையில் ஒரு திட்டம் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் முதலில் செய்யப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் அல்லது வர்த்தகம் செய்யப்படுகிற திட்டங்களில் நமது திட்டத்தில் உள்ள பணம் முதலீடு செய்யப்படும். மேலும் பிற வெளிநாட்டில் திட்டங்களில் செபியின் ஒப்புதலை பெற்ற பின்பு அதில் முதலில் செய்யப்படலாம்.

தகவல்கள்

தகவல்கள்

எனவே ஒரு சில மியூச்சுவல் ஃபண்டுகள் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்பதால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு முன்னர் நமது திட்டத்தில் வெளிநாட்டு பங்கு இருக்கிறதா? என்பதையும் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். வெளிநாட்டு செக்யூரிட்டிகளில் முதலீடு செய்த பின்னர் இந்திய மியூச்சுவல் ஃபண்டுகள் தினசரி நிகர சொத்துக்களையும் போர்ட்போலியோ தகவல்களையும் ஒவ்வொரு நாளும் வெளிப்படுத்தும்.

ஃபண்ட் மேனேஜர்

ஃபண்ட் மேனேஜர்

செபியின் ஒழுங்கு முறைகளுக்கு ஏற்ப வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்ட தகவல்களை முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் வெளிநாட்டு செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யும் திட்டங்களுக்கு என தனியாக ஒரு ஃபண்ட் மேனேஜர் இருப்பார் என்பதும் அவர் வெளிநாட்டு திட்டங்கள் குறித்த ஏற்ற இறக்கங்களை அவ்வப்போது கவனித்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do Indian Mutual Funds invest in Foreign countries?

We have already seen that mutual fund investment is sound, safe and highly profitable. Our mutual fund investments are invested in various companies in India and the returns are shared by the fund managers. At this stage, will our mutual fund schemes be invested not only by domestic companies but also by foreign companies.
Story first published: Thursday, November 3, 2022, 7:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X