மந்த நிலையிலும் இப்படி ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கா.. 5 வருடத்தில் இல்லாத அளவு முதலீடு அதிகரிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அன்னிய முதலீட்டாளர்கள் 2019ம் ஆண்டில் அதிகளவில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதலீடு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிலும் நாட்டில் நிலவி வரும் மந்த நிலையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) இந்த ஆண்டில் இதுவரை 14.47 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டு 4.62 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய பங்குகளின் விற்பனையாளர்களாக இருந்தனர்.

மந்த நிலையிலும் இப்படி ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கா.. 5 வருடத்தில் இல்லாத அளவு முதலீடு அதிகரிப்பு!

கடந்த 2014ம் ஆண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் 16.16 பில்லியன் டாலர் அளவில் பங்குகளில் முதலீடு செய்திருந்ததாகவும், இதே 3.72 பில்லியன் டாலர் அளவில் கடன் சந்தைகளில் முதலீடு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பிஎன்பி பாரிபாஸின் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, பல்வேறு காரணங்களுக்காக இந்திய பங்குகளில் எஃப்ஐஐ நேர்றையாக இருந்ததாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் நீண்ட கால நோக்கில் நல்ல பலன் இருப்பதாகவும், இதற்கடுத்தாற் போல் பங்கு தேர்வின் எளிமை மற்றும் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கான கிடைக்கும் தன்மை ஒரு பிரகாசமான இடமாக இந்தியா உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்திய சந்தைகளில் உள்ள பங்குகள் ஆசிய பிரபஞ்சத்தில் உள்ள அரிய கலவைகளில் ஒன்றாகும். மேலும் ஆசியாவிலேயே எஃப்ஐஐ நுழைவைப் பொறுத்த வரையில், இந்தியா எப்போதுமே பெரியதொரு பாய்ச்சலாக இருக்கும் என்றும், அதில் இந்தியா தான் முக்கிய பெறுநராக இருக்கும் என்றும் பல்வேறு காரணிகள் விளக்குகின்றன.

ஒரு வாரத்தில் ரூ.64,400 கோடி கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!ஒரு வாரத்தில் ரூ.64,400 கோடி கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

இதற்கு முக்கிய காரணம் மத்திய வங்கிகளின் பணவியல் கொள்கைக் கண்ணோட்டத்தின் நிலைப்பாடு, உலகளாவிய பணப்புழக்கத்தில் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது. மேலும் அமெரிக்கா சீனா வர்த்தக பேச்சுவார்த்தைகளின் நேர்மறையான விளைவின் காரணமாக, எதிர்பார்ப்புகளுடன் வளர்ந்து வரும் சந்தைகளுக்கு பெரும் முதலீடுகளை இந்தியாவின் பக்கம் திருப்பியதாகவும் கூறப்படுகிறது.

அன்னிய முதலீடுகளுக்கான வரி அதிகரிப்புக்கு பின்னர் இந்தியாவில் அன்னிய முதலீடுகள் பெரும் பின்னடைவை சந்தித்தன. இது இந்திய பங்கு சந்தைகளில் பெரும் விற்பனையை தூண்டியது. ஆனால் பிற்பகுதியில் செப்டம்பரில் கூடுதல் கட்டணத்தை அரசாங்கம் திரும்ப பெற்றது. இது தவிர அன்னிய முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கிலும் தனியார் முதலீடுகளை அதிகரிக்கும் விதமாகவும் முதலீடுகளை தூண்டும் வகையிலும் கார்ப்பரரேட் வரி குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்தது. இதனால் இந்த ஆண்டில் அன்னிய முதலீடுகள் அதிகரிக்க இது வழி வகுத்தது என்றே கூறலாம்.

இது தவிர மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் இன்சூரன்ஸில் முதலீட்டாளர்கள் 2019ம் ஆண்டில் 41,643.48 கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், இதுவே கடந்த 2018ல் 1,09,364.13 கோடி ரூபாயாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FIIs pumped $14.5 bn in equities in five years

FIIs pumped $14.5 bn in equities in five years. And FIIs equities were worth $16.16 billion in 2014. Also FIIs pumped $3.72 billion inti debt instruments this year against a $9.36 billion outflow in 2018.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X