12 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு தங்கம் இறக்குமதி.. 2022-லும் தூள் கிளப்பலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் இறக்குமதியானது கடந்த ஆண்டில் மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. இதனை மெய்பிக்கும் விதமாக நகை விற்பனையானது இருமடங்காக அதிகரித்துள்ளது.

 

கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வரும் மக்கள் மத்தியில் கூட, நெருக்கடியான காலக்கட்டத்திலும் தங்கத்தின் மீதான ஆர்வம் குறையவில்லை.

இதற்கு சிறந்த உதாராணம் தான், கடந்த ஆண்டு நகை விற்பனை குறித்தான தரவு. ஏனெனில் கடந்த ஆண்டில் தங்கம் இறக்குமதியானது ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

சூப்பர் சான்ஸ்.. சரிவில் தங்கம் விலை.. இன்னும் சரியுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

 தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

இதற்கிடையில் நகை விற்பனையும் இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இன்னும் தேவை என்பது வலுவாக உள்ளது. ஆக நடப்பு ஆண்டிலும் தங்கம் இறக்குமதியானது அதிகரிக்கலாம். விற்பனையும் அதிகரிக்கலாம் என உலக தங்க கவுன்சில் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

இறக்குமதி அதிகம்

இறக்குமதி அதிகம்

இரண்டு வருட மோசமான வீழ்ச்சிக்கு பிறகு தங்கம் தேவையானது மீண்டு வரத் தொடங்கியுள்ளது. தொற்று நோயின் அச்சம் சற்றே குறையத் தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் மக்கள் நகைக் கடைகளை நோக்கில் படையெடுக்க தொடங்கியுள்ளனர். டிசம்பர் வரையிலான மூன்று மாத காலத்தில் திருமணம், விழாக்காலம் என்பதால், இறக்குமதியும் அதிகரித்தது. இது ஓராண்டில் 925 டன்னாக இருந்தது. இது இது கடந்த 2011க்கு பிறகு அதிகம் என WGC தெரிவித்துள்ளது.

சராசரி இறக்குமதி
 

சராசரி இறக்குமதி

2020ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு இறக்குமதியானது 667 டன்னாக இருந்து வந்தது. ஆனால் 2022ம் ஆண்டில் 800 - 850 டன் என்பது சராசரி இறக்குமதியாக இருக்கலாம். இது நாடு இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், தேவையானது அதிகரிக்கலாம். மேலும் அடுத்த சில ஆண்டுகளில் தங்கத்தினை முக்கிய சொத்து வகுப்பாக மாற்றலாம் என WGC - ன் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

நகை தேவை

நகை தேவை

கடந்த ஆண்டு தங்கத்தின் தேவையானது நகை, காயின், பார் என பலவும் 79% அதிகரித்து, 797 டன்னாக இருந்தது. இது உலகம் முழுவதும் கொரோனா அச்சம் இருந்த நிலையில், பணவீக்கம், வட்டி விகிதம், அரசியல் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் முதலீட்டு ரீதியாகவும் தங்கம் தேவை அதிகமாகவே இருந்தது. இதற்கிடையில் நடப்பு ஆண்டிலும் இதே காரணிகள் தங்கத்துக்கு சாதகமாக அமையலாம் என WGC தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold import to continue to rise in current year - WGC

gold import to continue to rise in current year - WGC/12 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு தங்கம் இறக்குமதி.. 2022-ம் தூள் கிளப்பலாம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X