தொடர்ந்து 3-வது நாள்.. சர்ப்ரைஸாக விலை குறைந்த தங்கம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைப்பை படிக்கும் போதே அப்பாடா என ஆசுவாசப்பட முடிகிறது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்றம் பற்றியே நிறைய செய்திகள் வந்து நம்மை பதட்டப்பட வைத்துக் கொண்டு இருக்கிறது.

இன்று சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் என்கிற ஒற்றை காரணத்தால் உலக பங்குச் சந்தைகள் எல்லாம் சரிய, தங்கம் ராக்கெட்டில் ஏறி விலை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

ஆனால் இப்போது கொஞ்சம் விலை குறைந்து இருக்கிறது. வாருங்கள் தங்கம் விலை நிலவரத்துக்கு போவோம்.

தங்கம் ஃப்யூச்சர்

தங்கம் ஃப்யூச்சர்

ஏப்ரல் 2020-க்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சரின் விலை 0.1 சதவிகிதம் குறைந்து 43,314 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கொரோனா பயம் பரவும் இந்த நேரத்தில், தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கு பதிலாக, தங்கத்தின் விலை குறைவது இது தொடர்ச்சியாக மூன்றாவது நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தை

சர்வதேச சந்தை

இந்தியாவுக்கு நேர்மாறாக சர்வதேச சந்தைகளில் தங்கம் விலை அதிகரித்து இருக்கிறது. உலக சுகாதார அமைப்பு வேறு கொரோனா வைரஸை பெரும் தொற்றுநோயாக (Pandemic) அறிவித்து இருப்பதால், தங்கம் நிலையாக விலை அதிகரித்து இருக்கிறது. ஒரு அவுன்ஸ், ஸ்பாட் தங்கம் விலை 0.6 சதவிகிதம் அதிகரித்து 1,645 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறதாம்.

சந்தை சரிவுகள்

சந்தை சரிவுகள்

அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் மற்றும் நாஸ்டாக் சந்தை சரிவது, பேங்க் ஆஃப் இங்கிலாந்து தன் வட்டி விகிதங்களைக் குறைத்தது, அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி, தன் வட்டி விகிதங்களைக் குறைத்தது போன்ற காரணங்களால் தங்கம் ஜெக ஜோதியாக விலை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

ஆபரணத் தங்கம் விலை மாற்றம்

ஆபரணத் தங்கம் விலை மாற்றம்

கடந்த மார்ச் 10, 2020 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 45,980 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின்விலை 42,160-க்கு விற்பனை ஆனது. ஆக இந்த உச்ச விலையில் இருந்து, மார்ச் 11, 2020 அன்றும், மார்ச் 12, 2020 ஆன இன்றும் விலை குறைந்து இருக்கிறது.

ஆபரணத் தங்கம் இன்று

ஆபரணத் தங்கம் இன்று

சென்னையில் இன்று, 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 45,710 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 41,850 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் குறைந்தால் நன்றாக இருக்கும். ஆனால் குறைவதற்கான வாய்ப்பு அதிகம் இல்லை என்கிறார்கள் அனலிஸ்டுகள்.

நோ தங்கம்

நோ தங்கம்

தங்கம் சகட்டு மேனிக்கு விலை அதிகரித்து இருப்பதால், நகைகளாகவும், காசுகளாகவும் தங்கத்தை வாங்குவது குறைந்து இருக்கிறதாம். ஆனால் அதற்கு மாறாக தங்க ஃபண்டுகளில் ( Gold Exchange Traded Funds - ETFs) முதலீடுகள் அதிகரித்து இருக்கிறதாம். கடந்த ஜனவரி 2020-ல் 202 கோடி ரூபாயாக இருந்த தங்க ஃபண்ட் முதலீடுகள், பிப்ரவரியில் 1,483 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price fall consecutively for the third day

10 gram Indian Gold future price fall for the third day consecutively. The ornament gold also seen some price change in the last three days.
Story first published: Thursday, March 12, 2020, 14:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X