2020 வேற லெவல்.. ஐபிஓ மூலம் ரூ.25,000 கோடி முதலீட்டை திரட்டிய இந்திய நிறுவனங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2020ஆம் ஆண்டுப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட அதிகளவிலான மாற்றங்களின் எதிரொலியாக முதலீட்டாளர்கள் எப்போதும் இல்லாத வகையில் ஐபிஓ மீது அதிகளவிலான ஆர்வம் செலுத்தியுள்ளனர். இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையில் இந்த ஆண்டு ஐபிஓ மூலம் பட்டியலிட்ட நிறுவனங்கள் சுமார் 25,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்டியுள்ளது.

இதேபோல் 2021ஆம் ஆண்டும் இந்திய ஐபிஓ சந்தை முதலீடு மிகவும் சிறப்பாக இருக்கும் எனப் பங்குச்சந்தை முதலீட்டு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கியத் துறைகள்
 

முக்கியத் துறைகள்

இந்த வருடம் பல துறை சார்ந்த நிறுவனங்கள் ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிட்ட காரணத்தால் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. இதன் படி இந்த வருடம் பார்மா, டெலிகாம், ஐடி மற்றும் நிதியியல் துறை சார்ந்த நிறுவனங்கள் சிறப்பான வரவேப்பை பெற்று அதிகளவிலான முதலீடுகளைப் பெற்றுள்ளது.

2020 மாஸ்

2020 மாஸ்

இந்த வருடம் 12 நிறுவனங்கள் initial public offerings மூலம் இதுவரை 25,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்டியுள்ளது. இது 2019ஆம் ஆண்டில் பட்டியலிடப்பட்ட 16 நிறுவனங்கள் மூலம் திரட்டப்பட்ட 12,362 கோடி ரூபாய் முதலீட்டை விடவும் அதிகமாகும்.

இதைத்தொடர்ந்து 2018 சுமார் 24 நிறுவனங்கள் புதிதாகச் சந்தையில் பட்டியலிட்டதன் மூலம் சுமார் 30,959 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இந்திய நிறுவனங்கள் திரட்டியுள்ளது.

 பர்கர் கிங்

பர்கர் கிங்

இந்நிலையில் டிசம்பர் 2ஆம் தேதி QSR பிரிவில் உலகின் முன்னணி பாஸ்ட்புட் நிறுவனமான பர்கர் கிங் சுமார் 810 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்க உள்ளது.

பாகர் கிங் நிறுவனத்தின் முதலீட்டையும் சேர்த்தால் 2020ஆம் ஆண்டில் மட்டும் துமார் 25,810 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை இந்திய நிறுவனங்கள் முதலீடாகத் திரட்டியுள்ளது.

மே முதல் ஆகஸ்ட்
 

மே முதல் ஆகஸ்ட்

2020ஆம் ஆண்டில் மே முதல் ஆகஸ்ட் வாயிலாகக் காலத்தில் பல முன்னணி நிறுவனங்கள் முதலீட்டைத் திரட்டும் பொருட்டு QIP, பிளாக் டீல் ஆகியவற்றின் மூலம் அதிகளவிலான முதலீட்டைத் திரட்டி வந்த நிலையில் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட ஜூலை மாதத்தில் ரோசாரி பயோடெக் ஐபிஓ சந்தை முதலீட்டுக்குப் பெரிய திறப்பு விழா வைத்தது.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

2020ஆம் ஆண்டில் ரோசாரி பயோடெக், ஹோப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ், ரூட் மொபைல், கெம்கான் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ், ஏஞ்சல் புரோக்கிங், ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், லிகித்தா இன்பராஸ்டக்சர், மாசாகான் டாக் ஷிப்பில்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ மூலம் பெரிய அளவிலான முதலீட்டைத் திரட்டியுள்ளது.

ப்ரிமீயம் விலை

ப்ரிமீயம் விலை

ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ரூட் மொபைல், ஹோப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ், ரோசாரி பயோடெக், கிளான்டு பார்மா ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ விலையை விடவும் சந்தையில் பட்டியலிடும் போது சுமார் 40 முதல் 200% அதிக விலைக்குப் பட்டியலிடப்பட்டு முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்தியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IPOs In 2020: Indian cos raised Nearly Rs 25,000 Crore until Nov

IPOs In 2020: Indian cos raised Nearly Rs 25,000 Crore until Nov
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X