அட இது உங்க குழந்தைகளுக்கான சூப்பர் கிஃப்ட் ஆச்சே.. சிறப்பான நிதி பரிசு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக குழந்தைகளின் பிறந்த நாள் என்றால், புத்தாடைகள் மற்றும் அவர்கள் விரும்பும் விளையாட்டு பொருட்கள் என பலவற்றை பரிசாக கொடுப்போம்.

 

ஆனால் சென்னையை சேர்ந்த திவ்யா - ஆனந்த் பேமலியினர், குழந்தையின் பிறந்த நாளுக்கு எப்படி பட்ட பரிசுகளை கொடுப்பார்கள் தெரியுமா?

நிதி சம்பந்தமான திட்டங்கள் தான், அவர்கள் குழந்தைக்கு வழங்கும் பரிசு. உதாரணத்திற்கு பிறந்த நாள் பரிசாக ரிலையன்ஸ் பங்குகள். சிப்லா, சன் பார்மா இப்படி பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். அதுவும் அந்த குழந்தையே ஆர்வமாக அப்பா எனக்கு இந்த பர்த்டேவில் சன் பார்மா பங்கு வேண்டும். டிசிஎஸ் பங்கு வேண்டும் என கேட்கிறார். அந்தளவுக்கு குழந்தையின் ஆர்வத்தினை அது தூண்டியுள்ளது.

குழந்தையின் எதிர்காலத்திற்காக பயன்படும்

குழந்தையின் எதிர்காலத்திற்காக பயன்படும்

ஆக இப்படி ஏராளமான திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. ஆக நீங்களும் உங்கள் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக இது போன்ற பரிசுகளை கொடுக்கலாம். உதாரணத்திற்கு தங்க பத்திரம், இடிஎஃப், பங்குகள், எஸ்ஐபி என பலவற்றையும் கொடுக்கலாம். அது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு கைகொடுக்கும். அதோடு இது உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் சிறு வயதில் இருந்தே சேமிப்பு பழக்கத்தினை ஏற்படுத்திக் கொடுக்கும்.

குழந்தைகளுக்காக பங்குகளை வாங்கலாம்

குழந்தைகளுக்காக பங்குகளை வாங்கலாம்

குழந்தைகள் எப்போதும் தங்களது பிறந்த நாளில் ஆவலோடு அப்பா என்ன பரிசுதருவார். அம்மா என்ன பரிசு, தாத்தா பாட்டி என்ன வாங்கி வருவார்கள் என்றெல்லாம் நினைப்பதுண்டு. ஆனால் இதுபோன்ற நிதி சம்பந்தமான பரிசுகளை
நீங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அது அவர்கள் நினைவை விட்டு எப்போதும் நீங்காது. அது அப்போதைக்கு மட்டுமல்லாமல் அவர்களின் எதிர்காலத்தையும் குதூகலமாக வைத்துக் கொள்ளும். அதோடு அவர்கள் அதனைப் பற்றி அறிந்துக் கொள்ள இது வாய்ப்பாகவும் அமையும்.

 

 

உண்டியல் (Money bank)
 

உண்டியல் (Money bank)

இது என்ன சுவாரசியமான பரிசாக இல்லையே? என்பது புரிகிறது. ஆனால் இது நிச்சயம் உங்கள் குழந்தைக்குச் சேமிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு தூண்டுகோலாக இருக்கும். உங்கள் குழந்தைக்குச் சிறு வயதிலிருந்தே சேமிக்கும் ஆர்வத்தை வளர்க்கும். இது அவர்களின் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, தேவையானவற்றுக்கு மட்டுமே செலவு செய்யும் குணத்தை வளர்க்க உதவும். உங்கள் குழந்தைக்கு இது ஒரு அர்த்தமுள்ள நல்ல பரிசாக இருக்கும்.

தங்க பத்திரம் & ஃபண்டுகள் வாங்கிக் கொடுக்கலாம்

தங்க பத்திரம் & ஃபண்டுகள் வாங்கிக் கொடுக்கலாம்

குழந்தையின் கவனத்தை ஈர்க்கும் விஷயங்களை யூகிப்பது எளிதல்ல. அதுவும் இன்றைய குழந்தைகள் மிகவும் சாதாரணமானவர்கள் அல்ல. மிகவும் புத்திசாலிகள். ஆக அவர்களுக்கேற்ற ஒரு பரிசாக, இது போன்ற நிதி பொருட்களை கொடுக்கலாம். அது அவர்களுக்கேற்ற ஒன்றாக எதிர்காலத்தில் இருக்கும். இன்றைய காலகட்டத்தில் தங்கம் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எதிர்காலத்திலும் விலை அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதனால் நீண்டகால் நோக்கில் தங்க பத்திரங்களை கொடுக்கலாம். தங்க ஃபண்டுகளாக வாங்கிக் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கான வங்கிக் கணக்கு

குழந்தைகளுக்கான வங்கிக் கணக்கு

தற்போது பெரும்பாலான வங்கிகள் குழந்தைகளுக்காக ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டினை வழங்கி வருகின்றன. இதன் மூலம் மாதம் சிறு சிறுக ஒரு தொகையை அவர்களின் பெயரில் தொடங்கி அதன் பாஸ்புக்கினை குழந்தைகளுக்கு பரிசாக கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகளும் ஆர்வமாக இருப்பர்.

இது தான் சூப்பர் பரிசு

இது தான் சூப்பர் பரிசு

உண்மையில் இது போன்ற பரிசுகள் தான் உங்களது குழந்தைகளை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளும். இது அவர்களின் நிதி சம்பந்தமான பழக்கங்களையும் மாற்றும். எதிர்காலத்தில் நல்ல நிதி நிர்வாகியாக மாற்றும். ஆக இதுபோன்ற பரிசுகளை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பது, இப்போது மட்டும் அல்ல, எதிர்காலத்திலும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Now you can give gift shares, funds, ETF, gold bonds for your children’s future

Best investments for your children’s.. Now you can give gift shares, funds, ETF, gold bonds for your children’s future
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X