கொரோனாவால் வந்த வினை.. தங்கத்தை அடகு வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட பணக்கார கோவில்கள்.. பரபரப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம் கையில் காசு இல்லை என்றால் நாம் அடுத்ததாக எடுக்கும் நடவடிக்கை நமக்கு தெரிந்தவர்களிடம் கடன் கேட்போம். அப்படியும் கிடைக்கவில்லை எனில், அடுத்த நடவடிக்கை நகைக் கடனாகத் தான் இருக்கும்.

 

இப்படி இன்றும் அவசர காலங்களில் சாமனியர்களுக்கு உதவும் நல்ல நண்பனாக தங்கம் உள்ளது. அதிலும் இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் சொல்லவே தேவையில்லை.

ஏனெனில் ஏற்கனவே நம்மில் பலர் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து கடன் வாங்கியிருக்கலாம்.

நெருக்கடியில் கோவில் திருத்தலங்கள்

நெருக்கடியில் கோவில் திருத்தலங்கள்

ஆனால் இந்த நிலை கடவுளுக்கே வந்து விட்டது என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான். நமக்கெல்லாம் கஷ்டம் என்றால் நமக்கு தெரிந்தவர்களிடம் முறையிடுவோம், அல்லது கடவுளிடம் முறையிடுவோம். ஆனால் அந்த கடவுள் திருத்தலங்களுக்கே இந்த நிலை என்றால் என்ன செய்வது? இந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் கொடிய அரக்கன் இப்படி ஒரு மோசமான நிலைக்கு தள்ளிவிட்டது எனலாம்.

கொரோனாவால் வருவாய் இழப்பு

கொரோனாவால் வருவாய் இழப்பு

இது குறித்து வெளியான லைவ் மின்ட் செய்தி ஒன்றில், கொரோனா வைரஸ் நெருக்கடியினால் மக்கள் கோவில்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோவில்களுக்கு கிடைக்கும் பெரும் வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில கோவில்கள் கடினமான காலகட்டத்தினை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

நகைகள் மூலம் கடன் வாங்க திட்டம்
 

நகைகள் மூலம் கடன் வாங்க திட்டம்

இதனால் பக்தர்கள் கோவிலுக்கு காணிக்கையாக அளித்த தங்க நகைகளை அடகு வைக்க திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் ஆண்டுக்கு சுமார் 30 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் சபரி மலை கோவில் மற்றும் கேரளா அரசு நடத்தும் திருவிதாங்கூர் தேவஸ்தம் வாரியத்தின் கீழ் உள்ள 1,247 கோவில்களும், நகைக்கடனுக்கான இந்திய ரிசர்வ் வங்கியினை அணுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

 பக்தர்கள் கோவிக்கு வரவில்லை

பக்தர்கள் கோவிக்கு வரவில்லை

இந்த அதிரடியான நடவடிக்கையினை எடுக்க சில காலமாக திட்டமிட்டு வருவதாகவும், எனினும் தற்போது கடுமையான பண நெருக்கடி காரனமாக இந்த நடவடிக்கையினை எடுக்க வேண்டியுள்ளதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக ஐந்து மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் கோவில்களில் இருந்து விலகிலேயே இருக்க வழிவகுத்தது.

நன்கொடை இல்லை

நன்கொடை இல்லை

இதன் காரணமாக பக்தர்களால் கோவில்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் மற்றும் ரொக்கம் வறண்டு போக வழிவகுத்துள்ளது. எனினும் இந்த நெருக்கடியான நேரத்திலும் உள்ள நல்ல விஷயம் என்னவெனில், நாட்டில் உள்ள கோவில்களில் இருக்கும் தங்க இருப்புகள் வெளி வர இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

சம்பளம் கொடுக்க தள்ளாடி வருகின்றன

சம்பளம் கொடுக்க தள்ளாடி வருகின்றன

கடந்த சில மாதங்களாகவே குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கோவில் முதல் ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் வரையில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே தள்ளாடி வருகின்றன. கடந்த மே மாதத்தில் TBD ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பயன்படுத்தாத விளக்குகள் மற்றும் பாரம்பரிய பித்தளை பாத்திரங்களை விற்க முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மிகுந்த நெருக்கடியில் உள்ளோம்

மிகுந்த நெருக்கடியில் உள்ளோம்

இது குறித்து TBDன் தலைவர் என் வாசு நாங்கள் ஒரு பெரிய நெருக்கடியில் இருக்கிறோம். ஆகஸ்ட் 22 அன்று மத்திய அரசு அதிகாரிகள் முக்கிய கோவில் வாரியங்களுடன் ஒரு கூட்டத்தினை நடத்தியதில். இதில் குறைந்தபட்சம் 10 வாரியங்கள் பங்கேற்றன. அவை தற்போதுள்ளவற்றை பயன்படுத்த ஊக்குவித்ததாகவும் கூறப்படுகிறது.

தங்கத்தினை டெபாசிட் செய்ய திட்டம்

தங்கத்தினை டெபாசிட் செய்ய திட்டம்

கடந்த ஐந்து மாதங்களாக எங்கள் பக்தர்கள் கோவிகளுக்கு வருகை தரவில்லை. ஆனால் நாங்கள் மாதத்திற்கு சுமார் 50 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் மற்றவைக்காக செலவிட வேண்டும். ஆக இந்த நெருக்கடியான நிலையினை சமாளிக்க தங்க நாணயங்கள் மற்றும் தங்க பார்களை வழங்கிய வடிவத்திலேயே டெபாசிட் செய்ய ஒப்புக் கொண்டுள்ளோம்.

எவ்வளவு தங்கம் டெபாசிட்

எவ்வளவு தங்கம் டெபாசிட்

சுமார் 1000 கிலோவை டெபாசிட் செய்ய எதிர்பார்க்கிறோம். இதற்கு எங்களுக்கு ஒரு மாதம் ஆகும். எனினும் இதில் பழங்கால சடங்குகளுக்கு தினசரி பயன்படுத்தப்படும் அனைத்தும் தவிர்க்கப்படும் எற்னும் கூறப்பட்டுள்ளது. இந்திய கோவிகளில் ஏராளமான செலவங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் தங்கமாக உள்ளன. இது குறித்து உலக தங்க கவுன்சில் ஒரு அறிக்கையில், நூற்றுக் கணக்கான பெரிய கோவில்களில் 8.8 மில்லியன் பவுண்டு மதிப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சபரிமலையின் வருமானம்

சபரிமலையின் வருமானம்

இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய தங்க நுகர்வோராக இருந்தாலும், உற்பத்தியில் பெரிய ஆளாக ஒருபோதும் இருந்ததில்லை. ஆக தங்கத்தினை பெற இந்தியா இறக்குமதியினையே சார்ந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு வழிபாட்டு காலத்தில் கோவில் திறந்த சில மணி நேரங்களில், சபரிமலை மட்டும் ஒரு நாளைக்கு 3 கோடி ரூபாயினை நன் கொடையாக பெற்றுள்ளது. இது மதிப்புள்ள தங்கத்தினை தவிர்த்து என்றும் கூறப்பட்டுள்ளது.

பல சிக்கல்கள் உள்ளன

பல சிக்கல்கள் உள்ளன

ஆக இவ்வாறு கோவில்களில் உள்ள தங்கத்தினை வெளியே கொண்டு வருவதிலும் சில சிக்கல்கள் உள்ளது. இதற்கு கோவில் நிர்வாகிகளும், உள்ளுர் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனினும் நெருக்கடியான நிலையினை சமாளிக்க என்ன செய்யப் போகிறார்களோ? ஆனால் ஒன்று மேலே சொன்னது போல இப்படியாவது தங்க இருப்புகள் வெளிவர வாய்ப்பு உள்ளது..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TBD planning to knock on doors of RBI for gold loans

Travancore Devaswom Board planning to knock on doors of RBI for gold loans
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X