அஞ்சலகத்தின் PPF, SSY திட்டங்களில் வங்கி கணக்கு மாற்றம் செய்யப்படணுமா.. எப்படி செய்வது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அஞ்சலகத்தின் சிறுசேமிப்பு திட்டங்கள் என்றாலே சிறு முதலீட்டாளார்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்ற திட்டங்களில் ஒன்றாகும். இது சிறு முதலீட்டாளர்களை சிறிய அளவிலான தொகையில் இருந்து முதலீடு செய்ய ஊக்குவிக்கின்றது. மேலும் இதில் சந்தை அபாயம் என்பது இல்லாமல் நிரந்தர வருமானம் தரும் திட்டங்களாக உள்ளன. ஆக இந்த திட்டங்களுக்கு பெரும் வரவேற்புள்ளது இயல்பான ஒன்று தான்.

பொதுவாக அஞ்சலக திட்டங்கள் கிராமப்புற மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது பெரும் ஆச்சரியமில்லை என்றாலும், நகர்புறத்திலும் இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் எனலாம்.

சீனாவின் வளர்ச்சி இந்தியாவுக்கு பாதிப்பா.. இந்திய அரசு என்ன செய்ய போகிறது? சீனாவின் வளர்ச்சி இந்தியாவுக்கு பாதிப்பா.. இந்திய அரசு என்ன செய்ய போகிறது?

வங்கி கணக்கு டூ அஞ்சலக கணக்கு

வங்கி கணக்கு டூ அஞ்சலக கணக்கு

இத்தகையை திட்டங்களில் கிடைக்கும் பலனை பொதுவாக பலரும் தங்களது வங்கிக் கணக்கில் கிடைக்கும் விதமாக செய்திருக்கலாம். எனினும் பின்னாளில் இதனை அஞ்சலக கணக்கிற்கு மாற்ற நினைப்பவர்கள் அதிகம். அப்படி மாற்றுவது என்பது மிக எளிது தான். ஆக மிக எளிதாக நீங்கள் உங்கள் சிறு சேமிப்பு திட்டங்களில் உங்களது வங்கிக் கணக்கிற்கு பதிலாக அஞ்சலக கணக்கினை அப்டேட் செய்து கொள்ளலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் வங்கிக் கணக்கினை மாற்றம் செய்ய நினைத்தால், இதற்காக நீங்கள் வங்கிக்கோ அல்லது அஞ்சலத்திற்கோ நேரடியாக சென்றும் எளிதாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கான டிரான்ஸ்பர் பார்மினை கொடுக்க வேண்டியிருக்கும். இதனுடன் நீங்கள் மாற்றம் செய்ய வேண்டிய கணக்கின் பாஸ்புக் மற்றும் ரூபாய் கட்டணம்+ ஜிஎஸ்டி கட்டணம் என செலுத்த வேண்டியிருக்கும்.

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்

மூத்த குடி மக்கள் சேமிப்பு கணக்கில் செய்வதை போன்றே பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திலும் நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். இதற்கும் அதே செயல் முறை தான். இதிலும் உங்களது வங்கிக் கணக்கினை மாற்ற நீங்கள் பாஸ்புக் மற்றும் கட்டணம் 100 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டியிருக்கும்.

சுகன்யா சம்ரிதி திட்டத்தில் எப்படி?

சுகன்யா சம்ரிதி திட்டத்தில் எப்படி?

அஞ்சலக திட்டங்களில் மிக பிரபலமான திட்டமான சுகன்யா சம்ரிதி திட்டத்திலும் வங்கிக் கணக்கினை மாற்றிக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கும் 100 ரூபாய் கட்டணமாக ஜிஎஸ்டியுடன் சேர்த்து வசூலிக்கப்படும். இதற்காகவும் டிரான்ப்ஸ்பர் பார்முடன் பாஸ்புக்கினை இணைத்து கொடுக்க வேண்டியிருக்கும்.

வட்டி விகிதம் அதிகம்

வட்டி விகிதம் அதிகம்

பொதுவாக அஞ்சலக திட்டங்களில் வட்டி விகிதமும் சற்று அதிகம். அதோடு சேவைகளை பெறுவது மிக எளிது. தற்போது பெரும்பாலான சேவைகளை ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளும் வசதிகள் வந்து விட்டது எனலாம். ஆக இதற்காக நீங்கள் அஞ்சலகங்களுக்கு சென்று அலைய வேண்டிய அவசியம் இருக்காது.

என்னென்ன அம்சங்கள்

என்னென்ன அம்சங்கள்

மேலும் அஞ்சலகம் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருவதால் இதில் பாதுகாப்பு பிரச்சனையும் இல்லை. அதோடு வங்கி வட்டியினை விட மேற்கண்ட திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகம். பெரும்பாலும் அஞ்சலக திட்டங்களில் கூட்டு வட்டி என்பதால் இது பயனுள்ள ஒன்றாக உள்ளது. இதுவும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அஞ்சலகத்தின் சில திட்டங்களுக்கு எதிராக கடன் வசதியும் உண்டு. வரி சலுகையும் உண்டு என்பதால் இது மேற்கோண்டு சந்தைக்கு சாதகமாக அமையலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Easily transfer your SSY and PPF accounts from bank to post office: check here step by step details

Easily transfer your SSY and PPF accounts from bank to post office: check here step by step details
Story first published: Tuesday, January 17, 2023, 20:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X