Gold-ஐ விடு Silver-ஐ கவனி! ட்விஸ்ட் கொடுக்கும் உலக முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸ்! ஏன்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக தங்கத்தை தான் நல்ல உலோகமாகவும், பாதுகாப்பான சொத்தாகவும் பார்க்கும் மன நிலை நம்மிடம் இருக்கிறது.

அது இந்த கொரோனா காலத்திலும் பெரிய அளவில், நிரூபணமாகிக் கொண்டு தான் வருகிறது. முதலீட்டாளர்களும் சர்க்கரையைத் தேடிப் போகும் எறும்புகள் போல, தங்கத்தில் முதலீடு செய்து கொண்டே போகிறார்கள்.

இந்த நேரத்தில், உலகின் முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர்களில் ஒருவரான ஜிம் ராஜர் தங்கத்தை விட வெள்ளியை அதிகம் வாங்குவேன் எனச் சொல்லி ட்விஸ்ட் கொடுத்து இருக்கிறார். ஏன்..? வாருங்கள் பார்ப்போம்.

யார் இந்த ஜிம் ராஜர்ஸ்

யார் இந்த ஜிம் ராஜர்ஸ்

உலக பங்குச் சந்தை முதலீட்டில் எப்படி வாரன் பஃபெட் ஒரு நட்சத்திரமாக திகழ்கிறாரோ, அப்படி கமாடிட்டி சந்தையில் ஜிம் ராஜர்ஸ். இவர் தொடங்கிய க்வாண்டம் ஃபண்ட், 10 வருட காலத்தில் 4,200 சதவிகிதம் விலை ஏறி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை உயரும்

தங்கம் விலை உயரும்

இந்த கொரோனா வைரஸ் அதிகரித்து வந்த தொடக்க காலத்திலேயே, தங்கம் விலை, இந்த கொரோன வைரஸ் பிரச்சனை ஒரு முடிவுக்கு வருவதற்குள், ஒரு நல்ல விலை ஏற்றத்தைக் காணும் என மிகச் சரியாகக் கணித்து இருந்தார். அவர் கணித்தது போலவே தங்கம் 2075 டாலர் வரைத் தொட்டு எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

வருங்காலத்தில் தங்கம் விலை

வருங்காலத்தில் தங்கம் விலை

எதிர்காலத்திலும் தங்கம் விலை மேற்கொண்டு அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவே சொல்லி இருக்கிறார் கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸ். தான் தங்கத்தில் முதலீடு செய்து இருப்பதாகவும், சரியான சமயம் வரும் போது தங்கத்தில் இன்னும் அதிகம் முதலீடு செய்வதாகவும் சொல்லி, தங்க முதலீட்டாளர்களுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுத்து இருக்கிறார்.

வெள்ளியில் கவனம்

வெள்ளியில் கவனம்

இருப்பினும், இப்போது தங்கத்தை விட வெள்ளியைத் தான் அதிகம் வாங்குவேன். காரணம், வெள்ளி, விலை குறைவாக கிடைத்துக் கொண்டு இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் ஜிம் ராஜர்ஸ். இப்போதும் வெள்ளி விலை தன் வரலாற்று உச்ச விலையை விட சுமார் 50 சதவிகிதம் விலை குறைவாகவே விற்பனை ஆகிக் கொண்டு இருக்கிறது என சுட்டிக் காட்டுகிறார்.

சூப்பர் வாய்ப்பு

சூப்பர் வாய்ப்பு

இதுவரை உலக பொருளாதாரம் இவ்வளவு பெரிய கடன் சுமையைப் பார்த்ததில்லை. அவ்வளவு பெரிய கடன் சுமையை இந்த 2021 & 2022 ஆண்டுகளில் உலகப் பொருளாதாரம் பார்க்கப் போகிறது. எனவே தங்கம் வெள்ளி என இரண்டுமே அடுத்த சில ஆண்டுகளில் விலை ஏறி பட்டையைக் கிளப்பும் என்கிறார் ஜிம் ராஜர்ஸ்.

சமீபத்தைய விலை இறக்கம்

சமீபத்தைய விலை இறக்கம்

சமீபத்தில் (கடந்த ஒரு வாரத்தில்) சர்வதேச தங்கம் விலை 2,075 டாலரில் இருந்து சரிந்து, தடாலடியாக 1,865 டாலரைத் தொட்டது. அதே போல வெள்ளி விலையும் சுமாராக 29.8 டாலர் என்கிற உச்ச விலையில் இருந்து சரிந்து 23.5 டாலர் வரைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.

விலை இறக்கம் சாதாரணம்

விலை இறக்கம் சாதாரணம்

இந்த விலை இறக்கத்தைப் பற்றி ஜிம் ராஜர்ஸிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது, தொடர்ந்து விலை ஏற்றம் காணும் புல் மார்க்கெட்டில், 10 - 15 சதவிகித விலை இறக்கத்தை ஒரு பிரச்சனையாகப் பார்க்க வேண்டாம். விலை இறங்கும் போது எல்லாம், அது வாங்குவதற்கான, லாங் பொசிஷன் எடுப்பதற்கான வாய்ப்பாகப் பார்க்க வேண்டும் எனவும் தெளிவுபடுத்தி இருக்கிறார் ஜிம் ராஜர்ஸ்.

அச்சடித்து தள்ளப்படும் பணம்

அச்சடித்து தள்ளப்படும் பணம்

ஜப்பானில் தொடர்ந்து பணத்தை அச்சடிப்பதாக பேங்க் ஆஃப் ஜப்பானே சொல்லி இருக்கிறது. ஐரோப்பாவும் தொடர்ந்து கரன்ஸியை அச்சடித்துக் கொண்டே போகிறார்கள். ஏற்கனவே அமெரிக்கா தான் உலக அளவில் அதிக கடன் கொண்ட நாடு. இப்போது மேலும் பணத்தை அச்சடித்து, பொருளாதாரத்தை வளர்க்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறது.

வலு இழக்கும் டாலர்

வலு இழக்கும் டாலர்

கடந்த சில மாதங்களாக வலிமை பெற்றுக் கொண்டு இருந்த அமெரிக்க டாலர், தற்போது கரெக்‌ஷன் ஆகத் தொடங்கி இருக்கிறது. இந்த காரணங்களால் தங்கம் & வெள்ளி விலை அடுத்த சில வருடங்களில் ஒரு நல்ல விலை ஏற்றத்தை காணலாம் என்கிறார் கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸ்.

வெள்ளிக்கு ஸ்பெஷல்

வெள்ளிக்கு ஸ்பெஷல்

ஏற்கனவே சொன்னது போல, ஜிம் ராஜர்ஸ் தனியே வெள்ளியில் கவனம் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார். யாரும் அதிகம் கண்டு கொள்ளாத (வெள்ளி உலோகம்) விலை குறைவாக இருப்பதை நான் வாங்க விரும்புகிறேன். ஆக வாசகர்களே, இனி வெள்லியிலும் ஒரு கண்ணை வைத்துக் கொள்ளுங்கள். நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jim rogers Commodity investor said he would buy more silver than gold now

The veteran commodity investor Jim rogers said that he would buy more silver than gold now. He said silver is still 50 percent down from its all time high.
Story first published: Wednesday, August 12, 2020, 15:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X