தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பதில் கோல்ட் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு நபரும் தங்கத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு முதலீடு செய்வது கட்டாயம் என்பதுதான் பொதுவாக நிதி ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது. ஒரு நாட்டின் பணம் கூட செல்லாமல் போக வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒரு நபர் சேமித்து வைத்த தங்கம் செல்லாமல் போவதற்கு வாய்ப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

எனவே ஒவ்வொரு நபரும் குறைந்தது 100 கிராம் தங்கமாவது சேமிக்க வேண்டும் என்பதுதான் நிதி ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் தங்கத்தில் முதலீடு செய்யும்போது தங்க நகைகளாக வாங்குவது நல்லதா? அல்லது கோல்ட் ETF ஃபண்டுகளாக வாங்குவது நல்லதா? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

தங்கத்தில் முதலீடு

தங்கத்தில் முதலீடு

தங்கத்தில் முதலீடு செய்யும்போது நேரடியாக தங்க நகைகளை வாங்குவதில் சில கூடுதல் செலவுகள் ஏற்படும். செய்கூ,லி சேதாரம் மற்றும் வரி ஆகியவை இருக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் கோல்டு ETF ஃபண்டுகள் வாங்கினால் நமக்கு கூடுதல் செலவுகள் இருக்காது.

கூடுதல் வருமானம்

கூடுதல் வருமானம்

ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கத்தை வாங்கி தொடர்ந்து சேமிக்க விரும்புபவர்கள் நகைகளாக வாங்குவதற்கு பதிலாக கோல்ட் ETF ஃபண்டில் முதலீடு செய்தால் அந்த முதலீடு கூடுதல் வருமானத்தை கொடுக்கும்.

ETF ஃபண்டுகள்
 

ETF ஃபண்டுகள்

சுரங்கத் தொழில் மற்றும் தங்க வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளில் தான் கோல்டு ETF ஃபண்டுகள் முதலீடு செய்வதால் என்பதால் நாம் செய்யும் முதலீடுகள் நேரடியாக தங்கத்தை வாங்குவதற்கு ஈடானது என்பதை முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வருமானம்

வருமானம்

ஒரு நிறுவனத்தின் பங்கின் விலை ஏற்ற இறக்கத்தை பொறுத்து அந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு வருமானம் கிடைப்பது போல் கோல்ட் ETF ஃபண்டுகளிலும் அதில் செயல்திறனுக்கு ஏற்ப வருவாய் கிடைக்கும். கோல்டு ETF பண்டுகள் தங்கத்தின் செயல்திறனுடன் நேரடியாக இணைந்த வருமானத்தை வழங்குகின்றன என்பதும் கோல்ட் ETF ஃபண்ட் தொழில்துறையின் செயல்திறன் உடன் இணைந்த வருமானத்தை வழங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீண்டகால முதலீடு

நீண்டகால முதலீடு

கோல்ட் ETF ஃபண்டுகளில் அந்த ஃபண்டின் மேனேஜர் மிகவும் கவனமாக நிர்வாகம் செய்து முதலீட்டாளர்களுக்கு அதிக வருவாய் தரும் வழியை பின்பற்றுவார்கள். பங்குவர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் இருப்பது போலவே கோல்டு ETF ஃபண்டுகளிலும் ஏற்ற இறக்கம் இருந்தாலும் நீண்ட கால முதலீட்டிற்கு அதிக வருமானத்தை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

மேலும் தங்க நகைகளில் முதலீடு செய்வதற்கு பதில் கோல்ட் ETF ஃபண்ட்களில் முதலீடு செய்வது என்பது பாதுகாப்பானது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தங்க ஆபரணங்களை வாங்கினால் அதை பாதுகாக்க பிரத்யேக முயற்சி செய்ய வேண்டும் அல்லது அதை பாதுகாப்பதற்கு என தனியாக ஒரு தொகை செலவு செய்ய வேண்டும். ஆனால் கோல்டு ETF ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது நமது முதலீடு மிகவும் பாதுகாப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி எப்போது வேண்டுமானாலும் நம்முடைய முதலீட்டை நாம் தங்கமாக மாற்றிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம்

திருமணம்

நாம் முதலீடு செய்து தங்கத்தை அன்றைய விலைக்கு ஏற்ப தங்க நகைகளாக அல்லது பணமாகவோ திரும்ப வாங்கிக் கொள்ளலாம் என்ற வசதி உள்ளது. எனவே திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தங்கத்தை சேமிக்க விரும்பும் நபர்களும் சிறிது சிறிதாக கோல்ட் ETF ஃபண்டுகளில் முதலீடு செய்து தேவையான போது அவற்றை நகைகளாக மாற்றி கொள்வதே சிறந்த வழியாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is the advantages of Gold ETFs and Gold Funds

Financial advisors suggest that every person should save at least 100 grams of gold. Is it better to buy gold jewelery while investing in gold in this situation? Or is it better to buy gold as ETF funds? Let's see now.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X