கண்ணை மூடிக்கிட்டு கம்பெனி பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்யக் கூடாது

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கம்பெனி பிக்சட் டெபாசிட்டில் பணத்தை போடாதீங்க
சென்னை: வங்கிகளின் வைப்புத் தொகை வழங்கும் வட்டியைவிட நிறுவனங்களின் வைப்புத் தொகை வழங்கும் வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், மக்கள் நிறுவனங்களின் வைப்புத் தொகைகளில் முதலீடு செய்வதையே அதிகம் விரும்புகின்றனர்.

(Interest rates on PPF, NSC, and other post office savings schemes)

அதிக வட்டி கிடைக்கிறது என்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு நிறுவனங்களின் வைப்புத் தொகைகளில் முதலீடு செய்துவிடக் கூடாது. அதற்கு முன்பாக அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதற்கு கிடைக்கும் பாதுகாப்பு மற்றும் டிடிஎஸ் ஆகியவற்றை தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

நிறுவனங்களின் வைப்புத் தொகைகளில் முதலீடு செய்வதற்கு முன்பாக கவனிக்க வேண்டியவை,

1. பாதுகாப்பு இல்லாத வைப்புத் தொகைகள்

நிறுவனங்களின் வைப்புத் தொகைகள் அடிப்படையில் பாதுகாப்பு அற்றவை. எனவே அந்த நிறுவனங்கள் வங்கிகளைவிட அதிக வட்டியை வழங்குகின்றன.

2. கழிக்கப்படும் டிடிஎஸ்

நிறுவனங்களின் வைப்புத் தொகைகளில் முதலீடு செய்திருக்கும் உங்களுடைய பணத்திற்கு ரூ.5,000க்கு அதிகமான வட்டியை நீங்கள் பெற்றால் அதற்கு டிடிஎஸ் கழிக்கப்படும். ஆனால் வங்கிகளில் அப்படி இல்லை. அதாவது வங்கிகளின் வைப்புத் தொகைகளில் செய்யப்படும் முதலீட்டுத் தொகைக்கு ரூ.10,000க்கு அதிகமாக வட்டி பெறும் போது மட்டுமே டிடிஎஸ் கழிக்கப்படும்.

3. அதிகமான வட்டி விகிதம்

நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதம் வங்கிகளைவிட 1 முதல் 4 சதவீதம் அதிகமாகவே இருக்கும். ஆனால் இவற்றில் சிக்கல்கள் நிறைய உள்ளன.

4. ரேட்டிங் கொண்டிருக்கும் நிறுவன வைப்புத் தொகைகள்

வங்கிகளைப் போல் அல்லாமல் நிறுவன வைப்புத் தொகைகள் கிரெடிட் ரேட்டிங்கைக் கொண்டுள்ளன. கேர் மற்றும் ஐசிஆர்ஏ போன்ற ஏஜென்சிகள் மிகத் தெளிவாக ஆராய்ந்து இந்த ரேட்டிங்கை வெளியிடுகின்றன.

5. நிறுவனங்களின் வைப்புத் தொகைகள் இருக்கும் கட்டுப்பாடுகள்

நிறுவனங்களின் வைப்புத் தொகைகளில் ஒரு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது தங்களிடமிருக்கும் மொத்த முதலீடு மற்றும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் லாபத் தொகையில் 10 சதவீதம் அளவுக்கு மட்டுமே மற்றவர்களிடமிருந்து முதலீட்டைப் பெற முடியும்.

அதுபோல் நிதி அமைப்பைச் சாராத நிறுவனங்களுக்கு பின்வரும் கட்டுப்பாடுகள் உள்ளன.

உபகரணங்களை குத்தகைக்கு கொடுக்கும் நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் மொத்த முதலீட்டில், 4 மடங்கு அதிகமாக முதலீட்டை பொதுமக்களிடமிருந்து திரட்டலாம்.

அதுபோல் கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் மொத்த முதலீட்டில் ஒன்று அல்லது ஒன்றரை மடங்கு அதிகமான முதலீட்டைப் பொதுமக்களிடமிருந்து பெறலாம்.

இவற்றையெல்லாம் தெரிந்து வைத்து நிறுவனங்களின் வைப்புத் தொகைகளில் முதலீடு செய்வது நல்ல பலனைத் தரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 things to know before you invest in company fixed deposits | அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கம்பெனி பிக்சட் டெபாசிட்டில் பணத்தை போடாதீங்க

Company deposits are more lucrative then bank fixed deposits, simply because they offer higher interest rates then bank fixed deposits. However, you should not go only by the rate of returns, simply because you have to check other things like security, TDS etc. Here are the 5 things that you need to know before you invest in company fixed deposits.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X