என்.ஆர்.ஐகளுக்கு இடர்பாடு இல்லாத முதலீட்டு திட்டங்கள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்.ஆர்.ஐ(NRI) எனப்படும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், இந்தியப் பிரஜைகளை போல் அனைத்து முதலீட்டு திட்டங்களிலும் முதலீடு செய்ய முடியாது. முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுக்கும் முன் இரண்டு விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒன்று, முதலீடு செய்த பணத்தை தான் வசிக்கும் நாட்டிற்கு அவரசமாக கொண்டு வர வேண்டிய நிலை வந்தால் சுலபாமாக நடக்க வேண்டும்.இரண்டு, இந்த முதலீட்டினால் கிடைக்க போகும் வருமான வரி பயன்கள். என்.ஆர்.ஐகள் தேர்ந்தெடுக்க, இதோ சில முதலீட்டு வகைகள்:

என்.ஆர்.ஈ(NRE) வைப்புத் தொகை முதலீடு:

என்.ஆர்.ஈ(NRE) வைப்புத் தொகை முதலீடு:

ஒரு என்.ஆர்.ஐ தேர்ந்தெடுக்கும் முதல் முதலீட்டு வகை என்.ஆர்.ஈ ஆக தான் இருக்க வேண்டும். அதற்கு காரணம் முதலீடு செய்த பணத்தை எப்போது வேண்டுமானாலும் வசிக்கும் நாட்டிற்கு மாற்றலாம். மேலும் இந்த வைப்பு தொகையில் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி கிடையாது. இந்த வைப்பு கணக்கை பாதியில் துண்டித்து அந்த பணத்தை என்.ஆர்.ஈ சேமிப்பு கணக்கிற்கு மாற்றினால், அதனை சுலபமாக நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இந்த வைப்புத் தொகைக்கு இந்திய பிரஜைகளுக்கு கிடைக்கும் அளவே வட்டி அளிக்கப்படுகிறது. ஒரே வித்தியாசம் என்னவென்றால் என்.ஆர்.ஈ வைப்புத் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி கிடையாது.

கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகளில் முதலீடு:

கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகளில் முதலீடு:

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் அரசாங்க கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகளில் முதலீடு செய்யலாம். இருப்பினும் இந்த முதலீட்டின் ஆயுட்காலம் குறைந்தது 3 வருடங்களாக இருக்க வேண்டும். இந்த முதலீட்டை என்.ஆர்.ஈ (NRE) அல்லது எஃப்.சி.என்.ஆர். (FCNR) கணக்குகளின் வாயிலாக வாங்கினால், இந்த பத்திரங்களையும் பங்குகளையும் விற்க்கும் பொழுது இதே கணக்கில் தான் பணம் வரவு வைக்கப்படும். அதனால் ஈட்டுத் தொகையை சுலபமாக நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு கொண்டு செல்லலாம்.

மியுச்சுவல் பண்டில் முதலீடு:

மியுச்சுவல் பண்டில் முதலீடு:

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், மியூச்சுவல் ஃபண்ட்ல் முதலீடு செய்ய வேண்டுமென்றால், என்.ஆர்.ஐ (NRI)/என்.ஆர்.ஓ(NRO)/எஃப்.சி.என்.ஆர்(FCNR) கணக்குகளில் இருந்து அல்லது உட்புற செலுத்துகை மூலமாக(inward remittance) தான் முதலீடு செய்ய முடியும். குறைந்தது 3 வருடமாவது இந்த முதலீடை காலாவதியாக வைத்திருந்தால் தான் ஈட்டுத் தொகையை சுலபமாக நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு கொண்டு செல்லலாம்.

என்.ஆர்.ஓ(NRO) வைப்புத் தொகையில் முதலீடு:

என்.ஆர்.ஓ(NRO) வைப்புத் தொகையில் முதலீடு:

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் என்.ஆர்.ஓ வைப்பு தொகையிலும் முதலீடு செய்யலாம். ஆனால் அது அவ்வளவு புத்திசாலித்தனமானது அல்ல. என்.ஆர்.ஈ வைப்புத் தொகைக்கும் என்.ஆர்.ஓ வைப்புத் தொகைக்கும் ஒரே அளவு வட்டி விகிதம் தான் அளிக்கப்படுகிறது. ஆனால் எ.ஆர்.ஓ வைப்புத் தொகையில் கிடைக்கும் வட்டி பணத்திற்கு வருமான வரி கட்ட வேண்டும். ஆனால் என்.ஆர்.ஈ வைப்பு நிதியால் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி கிடையாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

4 risk free investment options for NRIs

Non Resident Indians (NRIs) are not allowed to invest in every type of saving instruments available in India, which resident Indians can invest. In choosing an investment NRIs must remember two things: the first being the ability to repatriate should he need the money for emergency in his country of residence and second is the tax efficiency of the instrument.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X