அல்ட்ரா-ஷார்ட் டெர்ம் பாண்ட் ஃபண்ட்கள் என்றால் என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிகக்குறைந்த கால கடனீட்டு நிதிகள் (ultra-short term bond funds) மற்றவற்றவையோடு ஒப்பிடுகையில் குறைவானதாக, அதாவது ஒரு வருடத்திற்கும் குறைவாக மெச்சூரிட்டி காலக்கெடுவைக் கொண்ட, நிலையான வருமானம் தரக்கூடிய செக்யூரிட்டிகளில் முதலீடு செய்து வரும் ஒரு வகை மியூச்சுவல் ஃபண்ட்கள் ஆகும்.

இவ்வகை நிதிகளும், பிற பாண்ட் ஃபண்டுகளுக்கும் உள்ளது போல் அரசு செக்யூரிட்டிகள், கார்ப்பொரேட் கடன், அடமானத்தை அடிப்படையாகக் கொண்ட செக்யூரிட்டிகள் போன்ற ஆற்றல் வாய்ந்த செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

குறைந்த அளவிலான முதலீட்டு கால வரையறையைக் கொண்டிருப்பதனால், இத்தகைய நிதியின் வட்டி விகிதத்தல் பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இருக்காது. இதன் காரணமாக, நீண்ட கால அல்லது நடுவாந்திர காலக்கெடு கொண்டிருக்கும் நிதிகளை ஒப்பிடுகையில், இவ்வகை நிதியின் மதிப்பு மிகக் குறைவாகவே பாதிக்கப்படும். ஆகையினால், அல்ட்ரா-ஷார்ட் டெர்ம் ஃபண்ட்கள், சில மாதங்களை மட்டுமே கால வரையறையாகக் கொண்டிருக்கும் முதலீடுகளில் பணம் போட விழையும் தனிநபர்களுக்கான மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாக பரதிபலிக்கிறது.

அல்ட்ரா-ஷார்ட் டெர்ம் ஃபண்ட்கள் மற்றும் லிக்விட் ஃபண்ட்கள்:
 

அல்ட்ரா-ஷார்ட் டெர்ம் ஃபண்ட்கள் மற்றும் லிக்விட் ஃபண்ட்கள்:

லிக்விட் ப்ளஸ் ஃபண்ட்கள் என்று அழைக்கப்பட்ட அல்ட்ரா-ஷார்ட் டெர்ம் ஃபண்ட்கள், பணச் சந்தையில் முதலீடு செய்வதில், உயர்வான ரிட்டர்ன்களை அளிக்கவல்ல லிக்விட் ஃபண்டகளோடு ஒப்பிடுகையில், சற்றே அபாயகரமான முதலீட்டுத் திட்டங்களாகவே காணப்படுகின்றன.

சராசரி ரிட்டர்ன்கள்:

சராசரி ரிட்டர்ன்கள்:

அல்ட்ரா-ஷார்ட் டெர்ம் ஃபண்ட்கள் பொதுவாக குறைவான அபாயம் கொண்ட முதலீட்டுத் திட்டங்களாகும். மிகச் சிறந்த ஃபண்ட்கள் கடந்த ஓராண்டில் சுமார் 9% ரிட்டர்னை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வரி விதிப்புகள்:

வரி விதிப்புகள்:

அல்ட்ரா-ஷார்ட் டெர்ம் ஃபண்ட்களைப் பொறுத்தவரை, டிவிடென்ட் விநியோக வரி, சுமார் 28.33% விகிதத்தில் செலுத்தப்பட்ட டிவிடென்ட்களிலிருந்து பிடித்தம் செய்யப்படும். மேலும், அத்தகைய ஃபண்டகளை விற்கும் காலத்தைப் பொறுத்து, முதலீட்டாளர் குறைந்த கால அல்லது நீண்ட கால மூலதன லாபத்தை செலுத்த வேண்டியிருக்கும்.

அதிகமான டிவிடென்ட் விநியோக வரி காரணமாக, வரி விதிப்பிற்குப் பின் முதலீட்டாளர்க்குக் கிடைக்கக்கூடிய ரிட்டர்ன்கள் குறையக்கூடும். அதனால், உயர்வான முதலீட்டு எல்லைகளைக் கொண்டிருக்கும் ஒரு முதலீட்டாளர், இதர கடனீட்டுத் திட்டங்களின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பலாம்.

அபாயங்கள்:
 

அபாயங்கள்:

இவ்வகை ஃபண்ட்களின் போர்ட்ஃபோலியோவில் உள்ள செக்யூரிட்டிகளின் சரிவு அல்லது தவணை தவறுதல் போன்றவற்றால் சில அபாயங்களை உருவாக்கலாம்.

பொதுவாக, அரசாங்க செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யும் அல்ட்ரா-ஷார்ட் டெர்ம் ஃபண்ட்களில், பொருளாதார அபாயம் பற்றி பொருட்படுத்தத் தேவையில்லை. ஆனால், மிகக் குறைவான பொருளாதார தர வரிசையில் இருக்கும் நிறுவனங்களின் கடனீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யப்படும் ஃபண்ட்கள் அபாய அளவை அதிகரிக்கக்கூடும்.

வட்டி விகிதங்களின் மாற்றங்கள்

வட்டி விகிதங்களின் மாற்றங்கள்

அல்ட்ரா-ஷார்ட் டெர்ம் ஃபண்ட்கள், வட்டி விகிதங்களின் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்தமட்டில் மிகக் குறைவான சென்சிடிவிட்டி கொண்டவையாகக் கருதப்பட்டாலும், இந்த ஃபண்ட்களின் நிகர சொத்து மதிப்பு (என்ஏவி), சந்தை வட்டி விகிதங்களின் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து மாறுபடவே செய்யும்.

எனவே, இத்தகைய ஃபண்ட்களில் முதலீடு செய்வதற்கு முன் "காலவரையறை" என்ற முக்கிய அளவீடை கருத்தில் கொள்வது நல்லது. இந்த அளவீடு, வட்டி விகிதத்தின் ஏற்ற இறக்கத்தின் விளைவாக இந்த ஃபண்டின் மதிப்பு எந்த அளவுக்கு மாறுபடக்கூடும் என்பதை குறிப்பிட்டுக் காட்டுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are ultra-short term bond funds?

Ultra -short term bond funds are a type of mutual funds that invest in fixed-income securities with comparably shorter maturity term that ranges from few months to a year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X