இந்திய பொருளாதார நெருக்கடியில், குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தை பெறுவது எப்படி?

இந்திய பொருளாதார நெருக்கடியில், குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தை பெறுவது எப்படி?
சென்னை: அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தைகளை விட்டு வெளியேறும் இந்தத் தருணத்தில், பங்கு சந்தைகள் தட தடக்கின்றது. கடன் பத்திர சந்தை சல சலக்கின்றது. இத்தகைய இக்கட்டான நிலையிலும் முதலீட்டாளர்களுக்கு கைகொடுக்கும் பாதுகாப்பான மற்றும் சிறந்த வருமானத்தை கொடுக்கும் சில கடன் சார்ந்த முதலீடு வாய்ப்புகளூம் உள்ளன.

சிறிது காலத்திற்கு முன்பு கூட வங்கி வட்டி விகிதம் நிலை பெற்று விட்டது. பணப்புழக்கத்தை குறைக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய நடவடிக்கைகள் காரணமாக குறுகிய கால வங்கி வட்டி விகிதங்கள் உயர்ந்து விட்டன.

இதன் விளைவாக, ஆறு வங்கிகள் இந்த வாரம் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை உயர்த்தின. இந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்து வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ள வங்கிகளின் எண்ணிக்கை 27ஐ தொட்டு விட்டது.

இங்கே உங்கள் வருமானத்தை அதிகரிக்க உதவும் பல்வேறு பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை உங்களூக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். படித்து பயன்பெறவும்

நீண்ட கால முதலீட்டுத் திட்டம்

பெரும்பாலான வங்கிகள், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் காரணமாக குறுகிய கால வட்டி விகிதங்களை (அதாவது ஒரு ஆண்டுக்கு குறைவான கால அளவு கொண்ட வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள்) அதிகரித்து வருகின்றன என்றாலும், நீண்ட கால முதலீட்டாளர்கள் வங்கிகளின் திருத்தப்படும் வட்டி விகிதங்களினால் பயன் பெற முடியும்.

கேவிபி மற்றும் ஆந்திரா வங்கி

ஒரு வருடத்திற்கும் குறைவான காலங்களுக்கான வட்டி விகிதங்கள் 6.5% முதல் 9.25% வரை மாறுபட்ட போதிலும், அண்மையில் கரூர் வைஸ்யா வங்கி (KVB) மற்றும் ஆந்திரா வங்கி போன்ற வங்கிகள் ஒரு ஆண்டு முதல் இரண்டு ஆண்டு வரையிலான வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை 9.5 சதவீதமாக மாற்றி அமைத்துள்ளன.

லட்சுமி விலாஸ் வங்கி

லட்சுமி விலாஸ் வங்கி (LVB) ஓராண்டு வைப்பு நிதிக்கு சுமார் 9.5 சதவீதம் வட்டி வழங்குகிறது. ஆகஸ்ட் 19 ம் தேதியிட்ட திருத்தத்திற்கு பிறகு, தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி பன்னிரண்டு மாதங்கள் முதல் ஐந்து ஆண்டுகளில் முதிர்வடையும் வைப்பு நிதிக்கு சுமார் 9.5 சதவீதம் வட்டி வழங்குகிறது.

அஞ்சல் துறை

முதலீடுகள் மீதான சீரான வருமானத்தை விரும்பும் முதலீட்டாளர்கள் தற்பொழுது அஞ்சல் துறை முதலீட்டு திட்டங்களைத் தவிர்த்து வங்கிகளில் முதலீடு செய்வதை பரிசீலிக்கலாம். ஏனெனில் அஞ்சலக மாதாந்திர வருமான திட்டத்தில் சுமார் 8.4 சதவீத வட்டி மட்டுமே கிடைக்கின்றது.

காலாண்டு வட்டி வருமானம்

பெரும்பாலான வங்கிகள் காலாண்டு வட்டி வருமானத்தை வழங்குகின்றன. எனினும் சில வங்கிகளில் மாதம் தோறும் வட்டி வருமானத்தை பெறும் வசதியும் உள்ளது.

மூத்த குடிமக்களுக்கு

பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டியாக 25 முதல் 75 அடிப்படை புள்ளிகள் வழங்கும். 60 வயதிற்கும் அதிகமான மூத்த குடிமக்கள் தற்பொழுது இரட்டை இலக்க வட்டி விகிதத்தை பெற முடியும்.

ஆந்திரா வங்கி மற்றும் LVB

உதாரணமாக ஆந்திரா வங்கி (ஒன்று அல்லது இரண்டு ஆண்டு கால வைப்பு நிதி) மற்றும் LVB (ஒரு வருட வைப்பு நிதி) போன்றவை இப்போது மூத்த குடிமக்களுக்கு சுமார் 10 சதவீத வட்டி வழங்குகின்றன.

SCSS திட்டம்

வருமான வரி வரம்பிற்குள் வராத வருமானம் பெறும் மற்றும் சீரான வருவாயை முக்கியமாகக் கருதும் மூத்த குடிமகன்கள் சுமார் 9.2 சதவீத வட்டி வழங்கும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை (SCSS) தேர்வு செய்யலாம்.

காலாண்டு வட்டி வருவாய் திட்டம்

பாங்க் ஆஃப் இந்திய, ஐ.டி.பி.ஐ வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, தனலக்ஸ்மி வங்கி, மற்றும் கர்நாடகா வங்கி போன்ற வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான ஐந்து ஆண்டு வைப்பு நிதிக்கு சுமார் 9.5 சதவீத வட்டி வழங்குகின்றன. நீங்கள் இத்தகைய முதலீடுகளை தேர்ந்தெடுக்கலாம் அல்லது ஐந்து ஆண்டுகள் விட குறுகிய காலத்திற்கு SCSSஐ விட அதிக வட்டி விகிதங்கள் வழங்கும் முதலீடு வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கலாம்.

பாதுகாப்பான நிறுவனம்

ஒரு வங்கி திவாலாகும் நிலைமை வந்தால் முதலீட்டாளகளின் 1 லட்சம் வரையிலான அசல் மற்றும் வட்டி வருவாய்க்கு பாதுகாப்பு கிடைக்கும். எனவே முதலீடு அளவை பொருத்து இந்த வங்கி வைப்பு நிதிகள் பாதுகாப்பானதாக கருதப்படுகின்றது.

ஆனால் அரசு ஆதரவுடன் செயல்படும் அஞ்சலக முதலீட்டு திட்டங்களுக்கு இத்தகைய உட்ச பட்ச வரையறை ஏதும் கிடையாது. உங்களுடைய முழு முதலீடும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

ஆபத்தை எதிர்நோக்கும் முதலீட்டாளர்கள்

வங்கி வைப்பு நிதிகளைப் போன்று பெருநிறுவன மற்றும் பிற நிதி நிறுவனத்தின் வைப்பு நிதிகள்,காப்பீடுகள் பாதுகாப்பானதாக இல்லை என்ற கருத்து மக்களிடையே நிலவி வருகிறது.

எனினும், நாம் பல்வேறு மதிப்பீட்டு முகவர்கள் மூலம் உயர்ந்த AAA மதிப்பீட்டை பெற்ற நிறுவன முதலீடுகளை மட்டுமே கவனத்தில் கொள்ளப் போகின்றோம்.

AAA தரம்பெற்ற முதலீடுகள் பாதுகாப்பானவை

AAA தரம் கொண்ட முதலீடுகள் அதனுடைய உரிய நேரத்தில் பணி தொடர்பான நிதி கடமைகளை கருத்தில் கொண்டு மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகின்றது. இத்தகைய முதலீடுகளில் ஆபத்துகள் மிகவும் குறைவு.

AAA தரம்பெற்ற நிறுவனங்கள்

AAA தரக் குறியீடு உடைய பல்வேறு முதலீடுகளில் குர்க் பைனான்ஸ் , எல் ஐ சி ஹவுசிங் பைனான்ஸ், சுந்தரம் ஃபைனான்ஸ் மற்றும் எச்டிஎப்சி போன்றவை தற்பொழுது முதலீடுகளை திறந்துள்ள போதிலும், M & M, நிதி சேவைகள் மட்டுமே இரண்டு முதல் ஐந்து ஆண்டு கால வைப்பு நிதிக்கு (ஒட்டுமொத்த) வங்கிகளை விட அதிக வட்டி வழங்குகின்றது. மற்றவர்கள் சுமார் 8.75 முதல் 9.5 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றனர்.

எம் & எம் நிதி நிறுவனம்

இந்த சூழலில், எம் & எம் நிறுவனத்தின் துணை நிறுவனமான எம் & எம் நிதி நிறுவனம், பல்வேறு கவர்ச்சிகரமான வைப்பு நிதி வட்டி விகிதங்களான 10 சதவீதம் (இரண்டு ஆண்டுகள்), 10.25 சதவீதம் (மூன்று ஆண்டுகள்) மற்றும் 9.75 சதவீதம் (நான்கு மற்றும் ஐந்து ஆண்டுகள்) போன்றவற்றை வழங்குகின்றன.

இந்த நிறுவனம் 18 மாத வைப்பு நிதிக்கு சுமார் 9.75 சதவீத வட்டி வழங்குகின்றது. இது எந்த ஒரு வங்கிகளின் சிறப்பு முதலீடு திட்டத்தை விடவும் மிகவும் கவர்ச்சிகரமானதாகும்.

சுந்தரம் ஃபைனான்ஸ்

ஆந்திரா வங்கி போன்ற வங்கிகளுக்கு இணையாக சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் மட்டுமே மூத்த குடிமகன்களூக்கான இரண்டு மற்றும் மூன்று ஆண்டு வைப்பு நிதிக்கு சுமார் 10 சதவீத வட்டி வழங்குகின்றது.

வரியை சேமிக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு

நீங்கள் 20 மற்றும் 30 சதவீத வரி செலுத்துபவர் மற்றும் வரியை மிச்சம் பிடிப்பது மட்டுமே உங்களுடைய தலையாய நோக்கம் எனில், உங்களூக்கு உகந்த முதலீடு, ஐந்தாண்டு கால என்எஸ்சி மட்டுமே. இந்த முதலீடுனாது மிகவும் பாதுகாப்பானது மற்றும் அதிக வரி சேமிப்பை உங்களுக்கு தரக்கூடியது.

அஞ்சலக சிறு சேமிப்பு

அஞ்சலக சிறு சேமிப்பின் சிறு பகுதி மற்றும் என்எஸ்சி யில் மேற்கொள்ளப்படும் ரூ 1 லட்சம் வரையிலான முதலீட்டிற்கு வருமான வரிச் சட்டம் 80 சி யின் படி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் எனில் ஐந்தாண்டு கால என்எஸ்சி முதலீட்டிற்கு சுமார் 8.5 சதவீத வட்டி கிடைக்கின்றது. இது பிற வங்கிகளின் வரி சேமிப்பு வைப்பு விகிதங்களை ஒப்பிடுகையில் (அண்மைய திருத்தங்களுக்கு பிறகு) 100 அடிப்படை புள்ளிகள் குறைவாகும். ஆகவே என் எஸ் சி முதலீடு என்பது கவர்ச்சிகரமானதாக இல்லை.

என்எஸ்சி முதலீட்டின் சிறப்பு அம்சம்

ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் என் எஸ் சி முதலீடு, முதலீட்டாளர்களை பெரிதும் கவர்கின்றது. இத்தகைய முதலீடுகளில் கடைசி ஐந்தாம் ஆண்டில் கிடைத்த வட்டி வருவாய்க்கு மட்டுமே வரி செலுத்த வேண்டியிருக்கும். முதல் நான்கு ஆண்டுகளூக்கான வட்டி வருவாய் திரும்ப முதலீடு செய்யப்பட்டதாக கருதப்படுகின்றது.

என்எஸ்சி முதலீடு

எனவே, என்எஸ்சி யில் நீங்கள் முதலீடு செய்துள்ள பணத்திற்கு சுமாற் 13.4 (20 சதவீதம் வரி அடுக்கில்) சதவீதமும், அல்லது சுமார் 16.4 (30 சதவீதம் வரி அடுக்கில் இடம்) சதவீதமும் வருவாய கிடைக்கும். இது வரிக்கு பிந்தைய வருவாயை கருத்தில் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+