கேஷ் மார்க்கெட் மற்றும் டெரிவேட்டிவ் மார்க்கெட் இடையேயான வித்தியாசங்கள்!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சமீப காலமாக பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டு கொள்கையை மேலும் மெருகேற்றிக்கொள்ள இந்த கட்டுரை மிகவும் உதவியாக இருக்கும். கேபிடல் மார்க்கெட்டின் கேஷ் பிரிவுக்கும், ஃப்யூச்சர்ஸ் பிரிவுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. புரிந்து கொள்வதற்கு எளிதான சில வித்தியாசங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

உடைமையுரிமை

உடைமையுரிமை

கேஷ் மார்க்கெட்டில் பங்குகளை வாங்கி, டெலிவரி எடுத்தப்பின், அப்பங்குகளை விற்கும் வரையிலும் அப்பங்குதாரர் தான் அதற்கு உரிமையாளர். ஆனால் கேபிடல் மார்க்கெட்டின் டெரிவேட்டிவ் பிரிவில் நீங்கள் வர்த்தகம் மேற்கொண்டால், என்றுமே பங்குதாரர் ஆக முடியாது.

உரிமை காலம்

உரிமை காலம்

கேஷ் மார்க்கெட் பிரிவில் பங்குகளை வாங்கும்போது, இப்பங்குகளை வாழ்நாள் முழுவதும் வைத்திருக்கலாம். ஆனால் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் ஒப்பந்தத்தை தீர்வை செய்தாக வேண்டியதான ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்டுக்கு இது பொருந்தாது.

டிவிடென்ட்கள்

டிவிடென்ட்கள்

சாதாரணமாக, நீங்கள் கேஷ் பிரிவில் பங்குகளை வாங்கி டெலிவரி எடுத்திருக்கும் பட்சத்தில், நீங்கள் அவற்றின் உரிமையாளர் ஆகி விடுவீர்கள். இந்நிலையில், நிறுவனங்கள் வழங்கக்கூடிய டிவிடென்ட்களைப் பெறுவதற்கும் நீங்கள் உரிமை பெற்றவர்களாகிறீர்கள். ஆனால், நீங்கள் டெரிவேட்டிவ்ஸ் ஒப்பந்தம் எதையும் வாங்க நேரிட்டால், மேற்கூறிய எந்த அதிர்ஷ்டமும் உங்களுக்கு கிடைக்காது.

அபாயம்

அபாயம்

கேஷ் மார்க்கெட் மற்றும் ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட் ஆகிய இரு சந்தைகளுமே அபாயம் நிறைந்தவை தான். ஆனால், குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் ஒப்பந்தத்தை தீர்வை செய் வேண்டி உள்ளது, இழப்புகளை புக் செய்ய வேண்டியதான ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட் சற்று கூடுதல் அபாயகரமானதாகும். கேஷ் மார்க்கெட்டில் வாங்கப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை, நீங்கள் எத்தனை காலத்துக்கு வேண்டுமானாலும் வைத்திருக்கலாம்; அதனால் பங்குகளின் விலை அதிகமாக இருக்கும் போது, நீங்கள் விரும்பினால் அவற்றை விற்றுக் கொள்ளலாம்.

முதலீட்டு குறிக்கோளின் வேறுபாடு

முதலீட்டு குறிக்கோளின் வேறுபாடு

பொதுவாக நீங்கள் அபாயத்தை தவிர்க்கவோ அல்லது யூக அடிப்படையிலான வர்த்தகத்தை மேற்கொள்ளும் பொருட்டோ டெரிவேட்டிவ்ஸ் மார்க்கெட்டில் ஒரு ஒப்பந்தத்தை வாங்க வேண்டி இருந்திருக்கலாம். கேஷ் மார்க்கெட்டில் பங்குகளை வாங்குவோர் பெரும்பாலும் முதலீட்டாளர்களே.

தொகுதிகளும் பங்குகளும்

தொகுதிகளும் பங்குகளும்

டெரிவேட்டிவ்ஸ் பிரிவில் நீங்கள் ஒரு தொகுதியை வாங்க வேண்டியிருக்கும்; ஆனால் கேஷ் பிரிவில் நீங்கள் பங்குகளை வாங்க வேண்டியிருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

6 differences between cash market and derivatives market

There are plenty of differences between the cash segment of the capital market and the futures segment. Here are few of the easy to understand differences.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X